Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.

1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகவேள் எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, சௌகார் ஜானகி, மனோரமா மற்றும் பலர் நடித்து மெருகூட்டியிருப்ப‍ர்.

த்திரைப்படதில் வரும் அனைத்துப்பாடல்களையும் எத்த‍ன முறை கேட்டாலும் ஏதோ புதியதா க கேட்பது போலவே ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இத்திரைப்படத்தில் மிகவும் என்னை கவர்ந்த பாடல் என் றால், அது பாலும் பழமும் என்று தொடங்கும் பாடலே!

இப்பாடல் நடபைரவி என்ற ராகத்தில் அமைந்துள்ள‍து. இது இருபதாவது மேளகர்த் தா ராக மாகும். இது பெண் பால் ராகம் என்றும் தமிழி சையில்“ஓரி” ராகம் என்றும்  அழைக்க‍ப்பட்டு வருகி றது.  இது ஹிந்துஸ்தானி இசையில் மரபில் ‘ஆசாவரி’ என்றழைக் கபடும். இது மாலையில் பாடப்படும் பாடவே ண்டிய ராகமா கும்.

மெல்லைசை மன்ன‍ர்களால் வடிவம்பெற்று, கவியரசர் கண்ண‍தா சனின் அற்புத வரிகளால் உயிரூ ட்ட‍ப்பட்டு, காவியப்பாடகர் டி. எம் .சௌந்தர்ராஜனால் உணர் வூட்ட‍ப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் செரிவூட்ட‍ப்பட்டு இனிதே அமை ந்த இப்பாட ல் ஆகும்.

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :

ஆரோஹணம் : ஸ ரி2 க1 ம1 ப த1 நி1 ஸ்
அவரோஹணம் : ஸ் நி1 த1 ப ம1 க1 ரி2 ஸ

{ஷட்ஜமம், சதுஸ்ருதி, ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைஷிகி நிஷாதம்}

இதில் அனைத்து உணர்வுகளை யும் ஒருங்கே அமைந்திருக்கும்

த‌னது மனைவி, நோய் வருவத ற்கு முன்பு எப்ப‍டி இருந்தாள் என்ப தையும், தீரா நோய்வாய்ப் பட்ட‍போது அவளது உடலும் உள்ள‍மும் எப்ப‍டி சோர்ந்து, போ னது என்பதை ஒப்பிட்டு வாசமு ள்ள‍ வரிகளை பயன்படுத்தி வாசமிழந்த அம்மலரை தேற்றி, அவள் மனதளவில் அவளை நம்பிக்கை விதைகளை விதைத்து வடித்ததை கேட்கும்போது பார்க்கும்போது, உணரும்போது,  நமது கண்களில் நீர் வர வழைக்கி றது.

அந்த‌ கணவன் தனது மனைவியின் மீதுள்ள‍ கொண்டுள்ள‍ அன்பின் ஆழ த்தையும் காதலின் புனிதத் துவத்தை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந்து ள்ள‍து இதன் சிறப்புக்கு மேலும் மெரூ கூட்டுவதாக இருக் கிறது.

பாடல் வரிகள் அடைப்புக்குறிக்குள் உள்ள‍ நீல நிற வரிகள் , விளக் க‍ம் சிகப்பு நிறத்திலுள்ள‍ வரிகள்)

(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)
இரவில் த‌னது பசி அறிந்து  ஒரு கையில் பாலும், மறு கையில் பழங் களையும் தனது மனைவி எடுத்து – அதை

(பவழ வாயில் புன்னகை சிந்தி)
புன்ன‍ கை  பூத்த‍ மலராக பூத்து குலுங்கியவாறே

(கோல மயில் போல் நீ வருவாயே)
கார்மேகம் கண்டுவிட்ட‍ அழகிய தோகை மயிலென‌ வந்தாயே என் றும்

(கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே)
கொஞ்சும் கிளிபோல பேசுபவளே மன‌ அமைதி கொள் என்றும்

(பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே)
மழலையின் முகப்பொலிவை தனது மனைவி இழந்துவிட்டாலே!

(பேசிப் பழகும் மொழி மறந்தாயே)
ஒரு வார்த்தைக்கூட பேச சக்தி அற்றும் செவி அடைத்தும் கிடக்கி றாயே

(அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே)
ந‌டக்கக்கூட முடியாமல் மெல்ல‍ நடப்ப‍தாகவும்

(அன்னக் கொடியே அமைதி கொள்வாயே)
அன்னக் கொடியிடைபெண்ணே மன அமைதிகொள்

(உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே)
நீ பறிமாறிய உணவை, நான் உணவரு ந்தும்போது அந்த அவள் அழகை ரசித்த‍ தாகவும்,

(உறங்க வைத்தே விழித்திருப்பாயே)
நான் உறங்கும் வரையில் விழித்திருப்பாயே!

(கண்ணை இமைபோல் காத்திருப்பாயே)
கண்களை காக்கும் இமைகள் போல என்னை காத்தாயே!

(காதற் கொடியே கண் மலர்வாயே)
க‌தல்பெண்ணே கண்திறந்து பார்ப்பா யே

(ஈன்ற தாயை நான் கண்டதில்லை)
தாயைக்கூட பார்க்காத எனக்கு மனைவியான உன் வடிவில் தாயை யும் கண்டுவிட்டேன்.

(எனது தெய்வம் வேறெங்கும் இல்லை)
தெய்வம் என்று தனியாக ஒன்று இல்லை அந்த தெய்வமே எனது தாய் நீதானம்மா

(உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்)
தாயாகவும், தெய்வமாக இருக்கும் உன்னை எனது உயிரைக் கொடுத்து காத்திடுவேன்.

(உதய நிலவே கண் மலர்வாயே)
உதிக்கும் (குளிர்ச்சியான) நிலவே கண் திறப்பாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வா யே

என்று நெஞ்சுருக பாடி, ஒரு கணவன் தனது மனைவியின்பால் தான் கொண்டுள்ள‍ காதலின் ஆழத்தை அழகாகவும் அற்புதமாக சித்தரிக் க‍ப்பட்டிருக்கும் இந்த பாடல் என்னை கவர்ந்ததுபோல் உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையுடன் கீழே அந்த அற்புத பாடல் தாங்கிய வீடியோ உங்களை மகிழ்விக்க‍ காத்திருக்கிறது. பாருங்க, கேளுங் க, உணருங்க!

உங்களது உணர்வுகளை வார்த்தைகளாக வடித்து கருத்தாக வெளி யிடுங்கள்.

விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்

 

2 Comments

Leave a Reply

%d bloggers like this: