என்னைக் கவர்ந்த “இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.
ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ணங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை பன்முக வேந்தன் என்று குறிப்பிட்டது சரி தானே!
அவரது இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் நான் பன்முறை ரசித்து கேட்டதுண்டு கேட்பதுண்டு, டி. ராஜேந்தர் அவர்களே எழுதி இசை யமைத்திருக்கும். பாடல்களில் எனக் கு பிடித்த என்னை மிகவும் கவர்ந்த சிறந்த பாடல் எது தெரியுமா? இது குழந்தை பாடும் தாலாட்டு என்று தொடங்கும் பாடல் ஆகும்.
இந்த பாடலை டி. ராஜேந்தர் அவர்க ளே எழுதி இசையமைத்திருந்தாலும், பாடும்நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களை அவருக்கே உரிய பாவத்தோடும் பாணியோ டும் பாட வைத்திருப்பார்.
இப்பாடலின் நாயகிமீது ஒரு தலைக் காதல் கொண்ட நாயகனின் மன உணர்வுகளை மிக வும் அழகாகவும் ஆழமாகவும் சித்தரித்துள் ளார்.
இப்பாடலில் இடம்பெற வரிகள் யாவும் நடை முறையில் சாத்தியமில்லாத வரிகளையும், முரண்பாடான பொருளையும் கொண்டு அத் திரைப்படத்தில் வரும் நாயகியின் காதல் பற் றிய அவளது எண்ண ஓட்டங்களுடன் ஒப்பிடு வதாக அமைந்திருப்பதால், கேட்பதற்கும் ரசிப் பதற்கு, மிகவும் அழகாகவும் அற்புதமாகவும், அமைந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போ னால் இதன் பாடல்வரிகள் அனைத்தும் முரண்களாக அமைந்திருந் தாலும் இந்த முரண்களே பாடலின் அரண்களாக அமைந்து இப்பாட லை சிறப்புடையதாக்குகிறது. இப்பாடலில் வீணையை பயன்படுத்தி மேலும் மெருகூட்டியுள்ளார்.
அந்த அற்புத பாடலையும் அதன் உணர்வுகளையும்மட்டுமின்றி அத ன் பொருளையும் விதைவிருட்சம் இணை யம் மூலமாக பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கி றேன்.
பாடல் வரி- இது குழந்தை பாடும் தாலாட்டு
பொருள் – குழந்தைக்கு தாலாட்டு பாடுவது தாய்தான் ஆனால் இங்கே ஒரு குழந்தை தாய்க்கு தாலாட்டு பாடுவதாகவும்,
பாடல் வரி – இது இரவு நேர பூபாளம்
பொருள் – பூபாளம் என்பது ஒரு இராக ம். இந்த ராகம் அதிகாலை வேளை யில் பாடப்படும் ஓர் அற்புத ராகம் ஆகும். இந்த ராகத்தை இரவு நேரத் தில் பாடுவதாகவும்
பாடல் வரி – இது மேற்கில் தோன்றும் உதயம்
பொருள்- தினந்தோறும் கிழக்கே தோன்றும் சூரிய உதயத்தை மேற்கில் தோன்றுவதாகவும்
பாடல் வரி – இது நதியில்லாத ஓடம்
பொருள்- நாம் ஒருநதியை கடக்க ஓடத்தில்ஏறி செல்வோம். ஆனா ல், நதியில்லாத ஓடம் என்று குறிப்பிட்டு நதியில்லை என் றால் ஓடத்திற்கு ஏது வேலையும் மதிப்பும்
பாடல் வரி – வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
பொருள் – வடம் என்றால், தேர் இழுக்கப் பயன்படும் ஒரு வகை சங் கிலி அல்லது கயிறு ஆகும். அந்த வடத்தை பிடித்து இழுத்தால்தான் தேர் நகரும். ஆனால் வடமிழந்த தேரை நாயகன் இழுப்பதாக வடித் திருப்பார். வடம் இல்லாத தேரை யாரா லும் இழுக்க முடியாது
பாடல் வரி- சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
பொருள் – சிறகுகள் இருந்தால்தான் பறவை ஒன்று வானில் சுதந்தி ரமாக பறக்க முடியும், ஆனால் இங்கே சிறகிழந்த பறவை ஒன்றை நாயகன் வானத்தில் பார்ப்பதாகவும்
பாடல் வரி – வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
பொருள் – பூச்சரம் அல்லது மாலை தொடுக்க பூவை ஒவ்வொன்றாக எடுத்து கோர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அழகிய மணம் வீசும் மாலையாக தொடுக்க முடியும். பூக்களே இல்லாமல் வெறும் நாரில் பூமாலை தொடுப்பதாக வும்
பாடல் வரி – வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கி றேன்
பொருள்-சிலை வடிக்க கல்லோ அல்லது பாறையோ தேவை ஆனால் இங்கே கற்களோ அல்லது பாறையோ ஏதும் இன்றி உளி எடுத்து சிலை வடிப்பதாக வடித்திருக்கிறார்.
பாடல் வரி – விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனை பார்க்கிறேன்
பொருள்- இரவில் மட்டுமே தெரியும் விண்மீன்கள் யாவும் விடிந்த காலைப்பொழுதிலும் காண்பதாக வடித்திருக்கிறார் .
பாடல் வரி – விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்.
பொருள் – தன்னை விரும்பாத ஒரு பெண்ணுக்காக இந்த உலகையே தான் வெறுப்பதாக கூறியுள்ளார்.
பாடல் வரி- உயிரிழந்த கருவை க் கொண்டு கவிதை நான் வடிப்பது
பொருள் – குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போது, அந்த குழந்தையைப் பற் றிய கனவுகளும் கவிதைகளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஊற்றாய் பெருகும். அதே நேரம் அக்கரு உருக்குலையும்போனா ல், சோகத்தின் இரும்பு பிடியில் சிக்குண்டு சிக்குண்டு கண்ணீர் வடிக் கவே தோன்றும் ஆனால் இந்த நாயக னோ கவிதை வடிப்பதாகவும்
பாடல் வரி – ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
பொருள்-அப்பெண்ணின் இதயத்தில் தன க்கு ஓர் இடம் கிடைக்காதா என்று ஏக்க த்தை வெளிப்படுத்தி ஒருதலைக்காதலோடு, தான் எத்தனை நாள் வாழ்வது என்ற கேள்வியோடு முடிந்திருக்கிறது.
-விதை2விருட்சம்
-விதை2விருட்சம்
-விதை2விருட்சம்
Reblogged this on Gr8fullsoul.