பல வருஷங்களுக்கு முன்னால் பெரியவா மெட்ராஸில் லஸ் சர்ச் ரோடில் பக்தர்கள் குழாமோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அதே ச
மயம் அதே இடத்தில் பூர்ண கும்ப மரியாதை களோடு பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்க பெரியவாளை தாக்க திராவிட இயக்கத்தினர் கம்பு, கட் டைகளோடு தயாராக இருந்தனர் .இந்த செய்தி பெரியவாளுடைய பக்தர்களுக்குஎட்டியதும், அதிர்ந்து போனார்க ள்!
உடனேயே பெரியவாளிடம் சென்று “பெரியவா … DKக்காரா அந்தப் பக்கம் கம்பு கழியோட நின்னுண்டு இருக்காளா ம்.. பெரிய எதாவுது அவமான ம்னா எங்களால தாங்க முடியாது. பேசாம வேற பக்கமா போய்டுவோம்.” என்று கெஞ்சினார்கள். கூட வே போலீஸ் நடந்து வந்தாலும் அதையும் மீறி பெரியவாளை தாக்கி விட்டால்?
பெரியவா சிரித்துக்கொண்டே “அவாளால என்னை ஒண்ணும் பண்ண
முடியாது” அழுத்தந் திருத்தமாக கூறி விட்டு அருகில் இருந்த அம்பாள் கோவிலில் ஒரு நிமிஷம் கண்ணைமூடி ப்ரார்த்தனை பண்ணிவிட்டு மேலே நடக்க ஆரம்பித்தார். “திக், திக்” உள்ளத்தோடு TTK சதா ஸிவம் முதலான பக்தர்கள் பெரியவாளை அரவணைத்தாற்போல் நடந்து வந்தனர். இதோ! கம்பு கட்டை பிடித்தபடி நிற்கும் கூட்டத்தை “லோக க்ஷேமத்துக்காக” தண்டம் ஏந்திய மஹா பெரியோன் நெருங்கிவிட்டார்!
பெரியாரைப்பற்றி இன்னொரு விடயத்தையும் கேள்விப்பட்டேன் உண்மையா என்று தெரியவில்லை…பெரியாரின் காலில் ஒருவர் விழ அவனை எழுப்பி அடித்துவிட்டு நானே சுயமரியாதை என்று போதிக்கிறேன் நீ காலில் விழுகின்றாயா என கேட்டாரம்.சம்பவம் எனக்குப்பிடித்திருந்தது…அத்துடன் பெரியார் படமும் பார்த்திருக்கின்றேன்…நன்றாக இருந்தது