கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி! 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்தி கள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகி யோர் தோள்களின்மீது கைபோட்ட வாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்துசேர்ந்தார் காந்திஜி. பிரார்த்த னைக்காக காத்திருந்த ஏராளமா னோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும்

துப்பாக்கியால் காந்தியை சுட்ட அந்த இளைஞன் கையும், களவு மாக பிடிக்கப்பட்டான். முதலில் ஒரு முஸ்லிம் இளைஞன் காந்திஜி யை கொன்றதாக சடுதியில் பரவிய தகவலால், கலகம் வெடித்தது.
காந்திஜியை கொலை செய்தது குறித்த வழக்கில் வாக்குமூலம் கொடுத்த கோட்சே. அதில், ” முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார் காந்திஜி. இதனால், இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவரை சுட்டுக் கொன்றே ன்…’ என்று கூறினான்.
இவர்களின் தூக்கு தண்டனை நவ., 15, 1949ல் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இவர்கள் இருவ ரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருணை மனு தாக் கல் செய்யப்பட்டது. அதில், காந்திஜியின் இரு மகன்களும்
கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த கருணை மனு நிராகரிக்கப்பட் டது.
இதனால், கோர்ட் உத்தரவுப்படி நவ. 15, 1949 அன்று, கோட்சே, ஆப்தே ஆகி யோரை தூக்கிலிட இறுதி முடிவு எடுக் கப்பட்டது. அன்று காலை 7.55 மணிக் கு அவர்கள் இருவரும் சிறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட் டனர்.
இருவரும் “அகண்ட பாரதம் எனும் இருண்ட புரானக்காலப் பாரதத் தை அமைத்தே தீர வேண்டும்’ என்று கோஷமிட்டபடி நடந்து சென்ற னர். தூக்கு மேடையில் நின்ற கோட்சேயிடம் அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட் டது.
அப்போது, “நான் இறந்த பிறகு என் உடலை எரித்து, கிடைக்கும் சாம்பலை பாதுகாத்து வைக்க வேண்டும். என்றைக்கு அகண்ட இந்துஸ்தானம் உருவாகிறதோ, அன்றைக்கு அந்த சாம்பல் சிந்து நதியில் கரைக்கப்பட வேண்டும் …’ என்று கூறினான். அடுத்த சில நிமிடங்களில் கோட்சேயும், ஆப் தேயும் அடுத்தடுத்து தூக்கிலிடப்ப ட்டனர்.

கோட்சே எரித்த இடத்தை அறிந்தால், அவ ரது ஆதரவாளர்கள் அங்கு அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பக் கூடும் என்ற நிலை இருந்ததால், கோட்சே உடல் எரிக் கப்பட்ட இடத்தை உழவு செய்து மறைத்தனர். அந்த இடத்தில் செடிக ள் நடப்பட்டன.
பின்னர், கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் அஸ்தி கலசங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகில் ஓடிக் கொண்டிருந்த காக்கர் என்ற ஒரு சிற்றாறில் கலக்கப்பட்டது.
கோட்சேயின் அஸ்தி காக்கர் நதியில் கரைக்கப்படும் விஷயத்தை அறிந்த அவனது ஆதரவாளர்கள், அதிகாரிகள் கரைத்துச் சென்ற கோட்சேயின் அஸ்தியில் ஒரு பகு தியை சேகரித்து எடுத்துச் சென்ற னர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட கோட்சேயின் அஸ்தி, அவனது சகோதரர் கோபால் கோட்சேயி டம் ஒப்படைக்கப்பட்டது. கோட்சே யின் அஸ்தி வெள்ளிக் கலசத்தில் வைக்கப்பட்டு புனா நகரில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15ம் தேதியன்று கோட்சே ஆதர வாளர்கள் அங்கு கூடி, “அகண்ட இந்துஸ்தானத்தை அமைத்தே தீரு வோம்…’ என உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.
கோட்சேவின் பரபரப்பு வாக்குமூலம் (வார்த்தைகள்) முற்றிலும் உண்மை ! வெளிவராத உண்மை !
“காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறு ப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை” என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப் பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளி த்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றிபெறாது என்று தெரிந்திருந்தும் அவர்கொள்கையை மாற்றிக்கொள்ளாமலே யே இருந்தார்.தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல் லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்க வும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய் த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கிய வரைத் “தெய்வம்” என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர்மீது கோபம்தான் வருகிறது….”