Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.எஸ்.வேர்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சில‌ ஷார்ட் கட் கீகள்

Alt + F10

– விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது

Alt+F5

– விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A

– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பி டல் எழுத்துக் களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற்கொள் ளும்.

Shift + F2

– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ் ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.

Ctrl+ Backspace

– பின்புறமாக ஒரு சொல்லை அழித் திடும். ஆனால் இது காப்பி செய்யப் பட மாட்டாது.

Ctrl+W, Ctrl+F4

– இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணி யாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூ லம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற் கேற்றபடி பைலை மூடும்.

Alt + Ctrl + S

-பணியாற்றிக்கொண் டிருக்கும் விண்டோ வினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத் தலாம்.

Ctrl + Shift + D

– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் டின் கீழாக இருகோடுகள் இடப் படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன் படுத்தலாம்.

F5 அல்லது Ctrl+G

– செயல்பட்டுக் கொண்டிருக்கு ம் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்க த்திற்குச் சென்று சொற்களைத் தேடி அவற்றிற்குப் பதிலாக வேறு சொற்களை அமைத்திட இந்த கீகளைப் பயன்படுத்த லாம்.

Ctrl+H

– ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டு பிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந் தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட் டை ஒட்டும்.

Ctrl+F2

– அனைத்து பக்கங்களின் அச்சு தோற்ற த்தைக் காட்டும்.

Alt F, I

– பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.

Shift + F5

– ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லு ம். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழை ய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனு ள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத் தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன் படுத்துகையி ல் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற் கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.

Ctrl + >

– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொ ள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டிய திருக்கும்.)

Ctrl + ]

– இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீ கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொ ரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.

Ctrl + Shift + H

– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத்திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.

Alt + Shift + D

– நீங்கள் உருவாக்கிடும் ஆவண த்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதி யை டைப் செய்திட விரும் புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண் டியதில்லை. பலருக்கு தேதி நி னைவிலும் இருக்காதே. இதற் காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.

Alt + Shift + T

– மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்து ங்கள். நேரம் அழகாக டைப் செய்ய ப்பட்டுவிடும்.

Ctrl + Shift + W

– வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோ டிட கீயை அழுத்தினால் அது சொற் களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt + F11

– வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்ப டுத்தவும்.

Alt V, H

– ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீ களைப் பயன்படுத்தவும்.

Shift + F7

– ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: