Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேமரா (Camera) இயங்குவது எப்படி?

க்ளிக். இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரபலமான, எல்லோராலும் புரிந்து கொள்கிற, விரும்புகிற வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

காரணம், ‘க்ளிக்’ என்பது கேமராவின் அடையாளம். 
உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்தகாலம் எல்லாம் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவானவை, சத்தமே இல் லாமல் நூற்றுக்கணக்கான போட்டோ க்களை எடுத்துக்குவித்து விடுகின்றன !
அதென்ன டிஜிட்டல் தொழில் நுட்பம்? அதுக்கு முன்பு ஒரு கேமரா எப்படி இயங்குகிறது என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்வோம்.
எந்த கேமராவிலும் கண்ணில் படுகி ற முதல் விஷயம் லென்ஸ்தான்.
‘லென்ஸ்’ என்பது வித்தியாசமான வடிவத்தில் தயாரிக்கப்படுகிற ஒரு சிறப்புக் கண்ணாடித் துண்டு. இதன் வேலை, ஒளியைக் குவித்து ஒரே இடத்தில் கொண்டு வருவது.
ஒரு கடைக்குப்போகிறீர்கள். வாசலி ல் ஒரு பெரிய கண்ணாடி. அது வழி யாக வெளிச்சம் கடைக்குள்ளே வந் து விழுகிறது. இதுக்குக் காரணம், அந்தக் கடையில் இருக்கிற கண் ணாடி, ஊத்தப்பம் மாதிரி தட்டையான வடிவத்தில் இருக்கிறது. அத னால், சூரிய ஒளி அதைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது.
அதே கண்ணாடியைக் கொஞ்ச ம் வேறு வடிவத்தில் தயாரிக்கி றதாக வைத்துக்கொள்வோம். நடுவில் தடிமனாவும் ஓரங்களி ல் மெலிதாவும் கிட்டத்தட்ட, வாழைப் பழம் மாதிரி.
இந்த ஸ்பெஷல் கண்ணாடி வழி யாகச் சூரிய வெளிச்சம் நுழையு ம்போது, அது லேசாக வளைந்து, திரும்பிக் கீழே விழுகிறது, பரவ லா க இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. அதுதான் லென் ஸின் அடிப்படை நுட்பம்.
கேமராவுக்கு முன்னால் இருக் கிற லென்ஸும் கிட்டத்தட்ட இதே வேலையைத்தான் செய்கி றது. நாம் எந்தப் பொருளைப் படம் எடுக்கிறோமோ, அதிலிரு ந்து வருகிற ஒளிக் கதிர்களை ஒரே இடத்தில், அதாவது கேம ராவுக்குள்ளே இருக்கிற பின் பகுதியில் கொண்டு போய்க் குவிக்கிறது.
உதாரணமாக, உங்கள் வீட்டில் ஒரு பார்ட்டி. அதுக்காகக் கட்டப்பட் டிருக்கிற பலூன்களை கேமராவால் படம் எடுக்கிறீர்கள் என்று வை த்துக் கொள்வோம். அந்த அறையில் நிறைய விளக்குகள் இருக்கி ன்றன. அதிலிருந்து வருகிற வெளிச்ச ம், அந்த பலூன்கள் மேல் பட்டுப் பிரதி பலிக்கிறது.அது கேமெராவுக்குள்ளு ம்  நுழைகிறது.
கேமராவில் இருக்கிற லென்ஸ் இந்த வெளிச்சங்களை ஒரே இடத்தில் கொ ண்டு போய்க் குவிக்கிறது . அங்கேதா ன் ஃபிலிம் இருக்கிறது. அது ஒரு விசேஷமான பிளாஸ்டிக் தகடு. அதில் சிலரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். இந்த ரசாயனங் களின் சிறப்பு அவற்றின்மேல கொஞ்சம் வெளிச்சம் பட்டாலேபோது ம், அந்த வெளிச்சத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும்.
இதனால், பலூன்களில் இருந்து வருகிற வெளிச்சம் லென்ஸ் வழி யாக இந்த ரசாயனங்களின் மீது விழு ம்போது, அக்காட்சி அப்படியே ஃபிலிம் ரோலின் ஒரு பகுதியில் பதிவாகிவிடு கிறது. இதேமாதிரி அடுத்தடுத்து நீங்க ள் எடுக்கிற ஒவ்வொரு போட்டோவு ம் இச்சுருளில் வரிசையாகப்பதிவாகி க் கொண்டே வருகிறது.
அப்புறமென்ன? ஃபிலிம் ரோலை வெளியில் எடுத்துப் படத்தைப் பார் க்க வேண்டியது தானே?
அவசரப்படாதீர்கள். கேமராவிலிருந்து ஃபிலிம் ரோலை வெளியில் எடுத்தால், இங்கே இருக்கிற வெளிச்சம் முழுவதும் அதுமேல் விழும், அதுவரைக்கும் நீங்கள் எடுத்த படங்களெல்லாம் அழிந் துவிடும், மொத்தச்சுருளும் பா ழாகிவிடும்.
அதனால், இதற்கென்று வடிவ மைக்கப்பட்ட ‘டார்க் ரூம்’, அதா வது இருட்டு அறைகளில்தான் ஃபிலிம் ரோலைப் பிரித்து வெளி யில் எடுப்பார்கள். சில விசேஷக் கரைசல்களில் நனைத்து, காய வைப்பார்கள். அதன்மூலமாக உங்கள் படங்கள் என்றும் அழியாத படி பாதுகாக்கப்படுகிறது.
அந்த ஃபிலிம் ரோலுக்குப் பெயர் ‘நெகட்டிவ்’. அதை நாம் வெளிச்சத் தில் பார்த்தால், நமக்கு ஒன்றுமே புரி யாது. அந்த ’நெகட்டிவ்’வைச் சில விசேஷக் கருவிகளில் செலுத்தி, பாசிட்டிவாக மாற்றுவார்கள். அதாவ து, கொஞ்சம் தடிமனான ஒரு காகித த்தில் அழகாக அச்சடித்துத்ருவார்க ள். அதைத்தான் நாம் போட்டோகிராஃப்’ என்று சொல்கிறோம்.
ஒரு ஃபிலிம் ரோலைப் பத்திரமாக வெளியில் எடுத்து, நெகட்டிவாக மாற்றி, அச்சிட்டுத் தருவதற்குச் சில மணி நேரங்களாவது ஆகிடும்.
polaroid camera
அதாவது, நாம் எடுத்த ஃபோட்டோவை உடனே பார்க்க முடியாது. 
போலோராய்டு என்ற கேமராக்களில் ஃ பிலிம் ரோல் கிடையாது, டார்க் ரூம் கிடையாது, நெகட்டிவ் கிடையாது, ஆனால் உடனுக்குடன் போட்டோ மட்டும் உண்டு. அது எப்படி?
இந்த கேமராக்களிலும் லென்ஸ் உண்டு. ஆனால் அதில் வெளிச்சம் நுழைந்து குவி கிற இடத்தில் ஃபிலிம் ரோல் இருக்காது. படச்சுருள் பிளாஸ்டிக், ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலா க, ஒளியை உணரக்கூடிய விசேஷ சிலிக்கான் சில்லுகளைப் பயன் படுத்திப் படங்களைப் பதிவு செய்கிறார்கள். அதுதான் டிஜிட்டல் கேம ரா! டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய நன்மை, இந்த கேமரா
Digital
வில் எடுத்த படங்களை உடனே பார்க் கலாம். மணிக்கணக்காகக் காத்திரு க்க வேண்டியதில்லை.
அதுமட்டுமா? ஃபிலிம் ரோல், நெகட்டி வ் தயாரிக்கிறது, அச்சிடறது என்று எல்லாமே விலை அதிகம் பிடித்த விஷயங்கள். முப்பது போட்டோ எடுப் பதற்கே சில நூறு ரூபாய்கள் செலவா கிவிடும்.
ஆனால் டிஜிட்டல் கேமராவில், அவ்வளவு செலவு கிடையாது. ஆயி ரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். இல்லை என்றா ல் அப்படியே கேமெராவில் பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், டிவியில் பார்க்கலாம், இதற்கு என்றே விசேஷமா க வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட் டோ ஃப்ரேம்’ எல்லாம் இருக்கிறது.
முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்க ளை நாம் யாருக்கு வேண்டும் என்றாலு ம் உடனே அனுப்பலாம்.

டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் போனிலேயே ஒரு கேமராவையும் கொடுத்து விடுகிறார் கள். 

ஜாலிக்காக போட்டோ எடுக்கிறவர் கள் ஒரு பக்கமிருக்க, இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோ டு கற்றுக் கொள்கிறவர்களும் ஏரா ளமாக உண்டு. இவர்களுக்கா கவே விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷய ங்கள் இருக்கின்றன.

நீங்கள் எப்படி? ஜாலிக்கு ‘க்ளிக்’ செ ய்யப் போகிறீர்களா? அல்லது, உங் கள் படங்கள் சரித்திரத்தில் இடம் பெறும்படி உழைக்கப் போகிறீர்க ளா? நோக்கம் எதுவென்றாலும் அதுக்குப் பொருத்தமான ஒரு கேம ராவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍
நீங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: