Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவி முன் கதாநாயகிக்கு 5 நிமிடத்தில் 100 முத்தம் கொடுக்க‍ பயந்த நடிகர்

தீபாவளி அன்று சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக “நீர்பறவை கொண்டாட்டம்”  ஒளிபரப்பப‍ட்ட‍து. இத் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இசையமைத்த‍ ரகுநந்தன், கதாநாயக னாக நடித்த‍ விஷ்ணு, கதாநாயகியாக நடித்த‍ சுனைனா ஆகியோர் பங்கேற்றன ர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற் றுள்ள பாடல்களை பின்னணிப் பாடகர் கள் பாடினார்கள். படத்தில் பாடல் அமை ந்துள்ள பின்னணி குறித்து சீனு ராமசாமி விளக்கினார்.

நீர்பறவை படத்தில் “தேவன் மகளே… தேவன் மகளே…” பாடலில் நூறு முத்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை தன் மனைவி முன் படமாக்கவேண்டாம் என்று இயக்குந ரிடம் கேட்டுக்கொண்டராம் நாயகன் விஷ்ணு. இந்த படத்தை தியேட்டரில் மனைவியுடன் பார்க்க கூச்சமாக இரு க்கும் என்றும் கூறியுள்ளார் விஷ்ணு.

“தேவன் மகளே தேவன் மகளே….
சிலுவைக் காடு பூத்தது போல
சிறியோன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி”

என்ற பாடலை பாடகர் பிரசன்னாவும், பாடகி சைந்தவியும் பாடினர். பிரிந்திருந்த காதலர்கள் இணையு ம் போது இந்தப் பாடல் இடம் பெறு வதாக கூறிய இயக்குநர், இதில் முத்தம் மூலம் இருவரும் அன்பை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறினார்.

5 நிமிடத்தில் நூறு முத்தம் இடம் பெற்றுள்ள இந்த பாடலை படமா க்கும் போது நடிகர் விஷ்ணு தன் மனைவி முன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் என்றார் சீனு ராமசாமி. விஷ்ணுவின் மனைவி தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறார் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார் சீனு ராம சாமி. இதை ஒத்துக் கொண் ட நடிகர் விஷ்ணு படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சியை மனைவி யோடு பார்க்க முடியாது. எனவே என் மனைவியுடன் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க மாட்டேன் என்று கூறினார்.

நீர்பறவை படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், உணர்வுக ளை வெளிப்படுத்தும் இதுபோன்ற படத்தை தயாரிப்பதற்கு பெருமை ப்படுவதாக கூறினார். நாயகனும், நாய கியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர் யாருக்கு தேசிய விருது கிடைக்கிறதோ தெரியவில்லை என் றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வைரமுத்து, ரகுநந்தன், சீனு ராமசாமி கூட்டணியில் ஏற்கனவே தேசிய விரு து கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் கண்டிப்பாக தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: