என்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன்.
1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள அனைத்து பாடல்களும் அருமை! அதிலும் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா என்று தொ டங்கும் பாடல் தனிச்சிறப்பு பெற்றதா கும்.
இதில் இதிகாசத்தில் இருந்து ஒரு காட்சியும், புராணக்கதையில் இருந் து ஒரு காட்சியும், தனது தற்போதை ய நிலையை சதுரங்கம் விளையாட் டோடு ஒப்பிட்டும் இயற்றப்பட்டுள்ளது மக்களிடம் மிகுந்த வரவேற் பை பெற்றதாகும்.
இந்த பாடல் மூன்று சரணங்களை உடையது.
முதல் சரணத்தில் . . .
(அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம், அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்)
ன்று நடந்த மகாபாரதப்போரில் அர்ஜு னனுக்கு வில்வித்தை மற்றும் இதர போர்த்தந்திரங்களையும் பயிற்சிக ளை யும் அளித்து அவனுக்கு குருவாக இருந்து அவனை தேற்றிய துரோணரையே அர்ஜுனன் போர்க்கள த்தில் வீழ்த்திய காட்சியை யும்
இரண்டாவது சரணத்தில் . . .
(மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே, மூன்றென வைத்த தோ மன்னவன் தலையிலே)
பிரகலாதன் வழித்தோன்றலான மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு அவனது ஆணவத்தை அடக்க வாமனன் உருக் கொண்டு வந்த மகா விஷ்ணு இந்த புராணக் கதையையும்,
சுட்டிக்காட்டி
மூன்றாவது சரணத்தில் . . .
(மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே, மரிக்கின்ற சேனை யோ பிள்ளையின் வடிவிலே)
தன்னையே ஒரு மன்னனாக பாவி த்தும், நீதிமன்றத்தை சதுரங்க விளையாட்டோடு ஒப்பிட்டும்,
இந்த மன்னனை (இவரே ஒரு வழ க்கறிஞர், தான் வளர்ந்து படிக்க வைத்த பிள்ளையே தனக்கு எதி ராக வாதிட இருப்பதை ஜீரணிக்க முடியாமல் வேதனையும் ஆத்திர மும் கொண்டு பாடுவது போலவும், அதே நேரத்தில் தனது அனுபவத்து க்கு முன்னே தனது பிள்ளை வெறு ம் தூசி என்பது போல அறுபதை இருபது வெல்லுமா உலகிலே என் று தனது திறமைமீதும் கொண்டுள் ள அசாத்திய நம்பிக்கையால் மோ தித்தான் பார்த்து விடுவோமே என் ற சவால்விடுவதுபோல அமைந்திருக்கும்.
அதுவும் சதுரங்கம் பலகையிலேயே தானும் தனது மகனும் நேருக்கு நேராக மோதும்போது தனது சேனைகள் வெட்டுப்பட்டு ராஜா ஓரடி பின்வாங்குவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இதன் சிறப் பம்சமாகும்.
கண்ணா……
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
அருபதை இருபது வெல்லுமா உலகிலே
ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி