
உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள். ” குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என வழி படப்படுகிறது.
பராம்பரியமான சந்நியாசகளின் ஒருபிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.
ஏசுநாதர்கூட கொல்கதா மலையில்தான் முதல் பிரசங்கத்தை துவ ங்கினார். கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.
ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்துவருகிறது. அதற்கு காரணம் என்ன ? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும். மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலை கள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும். இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்ற ன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.
For your information and possible inclusion in your article: Prophet Mohammed (Peace Be Upon Him) used to perform meditation on a mountain called “Hira” situated near Makkah, where the Holy Quran was revealed to him some 1400 years ago.