Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகநூலில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!

முகநூலில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள், நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு அவர்களது புகைப் படத்தை பகிர்ந்து அதன் கீழாக அவருக்கு, நாம் ஏதாவது உதவ வேண்டும் என்ற நோக்கில் சில வரிகளையும் பதித்துள்ளார். இதனை எஸ்.வி.சேகர் உட்பட பலருக் கும் TAG செய்துள்ளார். இச் செய்தியை படித்த‍ நான் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ண‍ம் எழுந்தது ஆனால், எனக்கு ஏற்பட்டுள்ள‍ ‘தற்காலிக‌’ நிதி நெருக்க‍டி காரணமாக‌ அவரு க்கு நிதி  உதவி ஏதும் செய்ய இயலவில்லை. ஆகையால் இச்செய்தி யை படிக்கும் விதை2விருட்சம் பார்வையாளர்களாகிய  உங்களால் முடிந்த அளவிற்கு  அவருக்கு நிதி உதவி செய்யுமாறு கேட்டுக்கொ ள்கிறேன்.

இதோ நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் வடித்த‍ வரிகள்

திரு டைபிஸ்ட் கோபு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். எம் ஜி ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடித்து வருகிறார். இப்போது வயதாகிவிட் டது. வருமானமும் இல்லை. சேமிப்பும் கிடையாது. இந்நேரம் பார்த் து அவருடைய பையன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வசதி இன் றி விழி பிதுங்கி நிற்கிறார். அவருடைய நிலைமை எனக்கு நன்றாக தெரியும். என்னையும் உங்களுக்கு நன்றாக தெரியும். என் மீது நம் பிக்கை வைத்து உங்களால் இயன்ற பொருள் உதவி செய்யுமாறு கேட்டு கொள்கி றேன். அவருடைய பெயருக்கு அவருடைய வங்கி கணக் குக்கு காசோலையாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கி றேன்.

K G Typist Gopu, State Bank of India, Alwarpet Branch SB A/c No. 10061123267

முகநூலில் அவரது வேண்டுகோள் (இந்த வரியினை சொடுக்கி முக நூல் கணக்கு உள்ள‍வர்கள் உள்நுழைந்து நேரடியாக பார்க்கலாம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: