Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?

நோபல் பரிசு வரலாறு

1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  வேதியியல், இயற்பியல்,  மருத்துவம், பொருளா தாரம்,  இலக்கியம், அமைதி ஆகிய ஆறு துறைகளில் சாதித்த‍ சாதனையாளர்களுக்கு இப்பரிசு வழங்கப் பட்டு அவர்களை கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரி சுத் தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக் கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல் பிரட் நோபல். 1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல் , பொறியியல் ஆகியவற் றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

டைனமைட் வெடிப்பொருளை கண்டு பிடித்தவர் இவரே!. பெரிய பெ ரிய ஆயுதங்களை தயாரித்து வழங்கும் மிகப்பெரிய‌ நிறுவனத்தையு ம் நடத்தியவர். தனது இறுதி காலத்தில் அவ ரது உயில் மூலம் பலகோடி ரூபாய் மதிப்பு ள்ள சொத்துகளைக்கொண்டு நோபல் பரிசு வழங்கும் அமைப்பை உருவாக்கினார். ஒவ் வோர் ஆண்டும் அவரது நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோபல் பரிசுகள் வழங் கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரி சு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரி வுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்க ப்படுகின்றன. 2012ல் யார் யாருக்கு நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.

வேதியியல்

பெரும்பாலும் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கும் வழக்கும் குறைந்து வருகிறது. வேதியியலோடு தொடர்புடைய இயற்பியல் அல்லது உயிரியல் சார்ந்த துறையில் சாதித்த‍வர்களுக்கே பரிசு வழங்கப் படுவதாக கருதப்படுகிறது. உயிரியல் சார்ந்த செல் ஏற்பிகள் (Cell recepto -rs) பற்றிய கண்டுபிடிப்புக்காக வழங் கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா வைச் சேர்ந்த உயிரி ஆராய்ச்சியாளர் கள், ராபர்ட் ஜே.லெஃப்கோவிட்ஸ் (Robert J. Lefkowitz) மற்றும் பிரை யன் கே. கோபில்கா (Brian K. Kobilka )ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. செல் ஆராய்ச்சியில் ஜி-புரதங்களின் மேற் பரப்பில் உள்ள ஏற்பிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இப் பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல்

ஓர் அணுவுக்குள் என்னென்ன இருக்கும்? புரோட்டான், எலெக்ட்ரா ன், நியூட்ரான். இந்த மூன்று மட் டும் இல்லாமல், ஓர் அணுவின் உட்கருவுக்குள் இன்னும் சில அடிப்படைத்துகள்கள் இருக்கின் றன. இவற்றை குவான்டம், க்வா ர்க் என இன்னும் பலபெயர்களில் சொல்வார்கள். இந்த அடிப்படை த் துகள்களைச் சேதப்படுத்தாம ல், அவற்றின் பண்புகளை எப்படி க் கண்டுபிடிக்கலாம் என்ற ஆரா ய்ச்சிக்குத் தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு. இப் பரிசை செர்ஜ் ஹாரோஷே (Serge Haroche)என்ற ஃப்ரான்ஸ் விஞ் ஞானியும், டேவிட் ஜே. ஒயின்லாண்ட் (David J. Wine land) என்ற அமெரிக்க விஞ்ஞானியும் பகிர்ந்துகொண்டு உள்ளனர். நோபல் பரி சை இவர்கள் கூட்டாக வென்று இருந்தாலும், ஆராய்ச்சியைச் சேர்ந்து செய்யவில்லை. இருவருடைய வழிமுறைகளும் வெவ்வே றானவை. அடிப்படைத்துகள்களைச் சிதைக்காமலேயே அதன் பண் புகளை ஆராய முடியும் என்பதை இவர்கள் நிரூபித்து உள்ளனர். இத ன் மூலமாக குவான்டம் இயற்பியல் பலபடிகள் முன்னோக்கிச் செல் லும்.

மருத்துவம்

ஸ்டெம் செல்கள்(Stem Cells) எனப்படும் குருத்தணு செல்கள் தொட ர்பான ஆராய்ச்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஜான் பி. கர்டன் (John B. Gurdon) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆரா ய்ச்சியாளருக்கும், ஷின்யா யாமனகா (Shinya Yamanaka) என்ற ஜப்பான் ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரி சு அளிக்கப்படுகிறது.

குருத்தணு செல் ஆராய்ச்சியின் மூலம் உடலில் இருந்து முழு வளர்ச்சி அடைந்த (mature cell s) எந்த ஒரு செல்லையும் கொ ண்டு, உடலில் எந்த இடத்திலும் பயன் படக்கூடிய குருத்தணு செ ல்களை உருவாக்க முடியும். இக் குருத்தணு செல் ஆராய்ச்சியின்மூலம் அல் சைமர் நோயால் பாதி க்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும். மாரடைப்பால் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்வதற்கான ஆராய்ச்சி களும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இருவரின் முயற்சிகளின் மூலம் மனிதர்களுக்குத் தேவையா ன குருத்தணு செல்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கி இருக்கிறது.

பொருளாதாரம்

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, லியாட் ஷாப் லெ (Lloyd Shapley) மற்றும் ஆல்வின் ரோத் (Alvin Roth) ஆகிய அமெரிக்கப் பொருளாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தை வடிவமைப்பு (Market design)பற்றிய இவர்களது கோட்பாடு களுக்காக இந்த அங்கீகாரம். மழைக் காலத்தில் தள்ளு வண்டியில் ஐஸ் விற்பதும், மின்சாரமே இல்லாத ஊரி ல் மின்விசிறியை விற்பதும் நஷ்டத் தில்தான் முடியும். மாறாக, தொடர்ந் து மின்வெட்டு நீடிக்கும் ஊரில் இன் வெர்டர் விற்பவர்களை வரவைக்க வேண்டும்.

இப்படிக் குறிப்பிட்ட பொருட்களை விற்பவர்களை, குறிப்பிட்ட பொ ருட்களை வாங்குபவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு சந்தை மாதிரி யை உருவாக்குவதற்கான மிகப் பொருத்தமான மற்றும் திறன் மிக்க கோட்பாடுகளை லியாட் ஷாப்லெ மற்றும் ஆல்வின் ரோத் உருவாக் கி இருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக இக்கோட்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். இருவரின் வடிவமைப்பு களும் கோட்பாடுகளும் வெவ்வேறானவையாக இருந்தாலும், இரு வடிவமைப்புகளின் ஒட்டுமொத்த தொகுப்புகளும் சந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுபவை என்ற காரணத்துக்காக இருவருக்கும் நோ பல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.

இலக்கியம்

சீன எழுத்தாளர் மோ யான் (Mo Yan) இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று இருக்கிறார். மோ யான் என்பது இவரது புனை பெயர். இதற்கு சீன மொழியில் ‘பேசாதே’ என்று பொருள். இவரு டைய இயற்பெயர் குயான் மோயெ (Guan Moye).. சீனாவில் இருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர்.

சீனாவில் இவருடைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் இவருடைய புத்தகங்கள் கள்ளச் சந் தையில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும் இருக்கின்ற ன. இவரது நாட்டுப்புறக் கதைகளிலும், நாவல் களிலும் மாய யதார்த்தத் தன்மை (Hallucinat- ory / Magical Realism) இருக்கும். சீனாவின் மக்கள் ராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றி யபோது எழுதத் துவங்கிய இவர், பின்னர் மக்கள் ராணுவ அகாடமியில் கலையை யும் இலக்கியத் தையும் சொல்லித்தரும் ஆசிரியராகப் பணி யாற்றினார். அப்போதுதான் இவருடைய முதல் நாவல் வெளியா னது. பிறகு பல சிறுகதைகள், நாவல்கள், சீனாவி ன் கம்யூனிசப் புரட்சி, கலாசாரப் புரட்சி பற்றிய வரலாறுகள் முதலா னவற்றை எழுதினார். இவரது படைப்புகள் உடனுக்குடன் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டன.

அமைதி

கடந்த 60 ஆண்டுகளாக ஐரோப்பாவில் ஜனநாயக அரசுகள் சிதை யாமலும், போர் இல்லாத அமைதியான சூழல் நிலவவும் காரணமா க இருப்பதற்காக ஐரோப்பிய யூனியன் (European Union) அமைப்பு க்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ள து.

14-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் தங்களுக்குள் அதிக மாக சண்டை போட்டுக் கொண் டுதான் இருந்தன. கடல் மார்க்க மாக பல நாடுகளைக் காலனி ஆதிக்கம் செய்ய முற்பட்டதில் இருந்தே இந்தப் போர்வெறி தீவி ரமாகத் துவங்கியது. இதற்கு உச்சமாக முதல் உலகப் போரும், இர ண்டாம் உலகப் போரும் வெடித்தன. இந்த இரு போர்களிலும் ஐரோப் பிய நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியாகப் பல இழப்புகளைச் சந்தித்தன. இந்த நிலைமையில்தான், ஐரோப்பிய நாடுகள் ஒன்றி ணைந்து பல அமைப்புகளை உருவாக்கி, இறுதியில் ஐரோப்பிய யூனியனை அமைத்தன. தங்களுக்குள் யூரோசோன் (Euro zone) வர் த்தக மையம், யூரோ (Euro) பொது நாணயம் போன்றவற்றை அமை த்தன. இந்த அமைப்பின் முயற்சிகள் மூலமாகவே ரத்த பூமியாக இரு ந்த ஐரோப்பா, அமைதிப் பூங்காவாக இருக்கிறது.

பல்வேறு இணையங்களில் இருந்து தொகுக்க‍ப்பட்டுள்ள‍து.
உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: