Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எழுதும் கடிதம்!

அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெய லலி தா அவர்களுக்கும் வணக்கம். (எழுத்தாளரும், சமூக ஆர்வலருமா ன திரு. ஞாநி அவர்கள் எழுதிய கடிதம்)
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதி யிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட் படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியி ல் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன் றைய தினம் கொண்டாடி மகிழ்ந் தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிரு ந்து அறிந்து மகிழும்படி கேட்டுக்கொள் கிறேன்.
மயிலாடுதுறை பொறையாறு அருகே இரண்டு காவலர்கள் குடி போதையில் ஒரு காரை உடைத்து நொறுக்கினார்கள்.
கோவை அருகே குடிபோதையி ல் ஒருகாவலர் தம்மேல் அதி காரியைக்கண்டபடி திட்டினார்.
தர்மபுரியில் ரோந்துப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி குடிபோதையில் தள்ளாடினார்.
அரசின் காவலர்கள் இப்படிமு ன் மாதிரிகளாகக் கொண்டாடு ம் போது குடிமக்கள் பின்தங் கி யிருக்க முடியுமா?
ராயபுரத்தில் குடி போதையில் இருந்த ஒரு கணவன், உடல் சோர்ந்து படுத்திருந்த கர்பிணி மனைவியை எழுப்பி தோசை தரச்சொன்னதும் அவள் உடனே தராததால், கழுத்தை நெரித்துக்கொன்றான். கொருக்குப் பேட்டை யில் குடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவன் தரையில் வைத்திருந்த மதுக் கோப்பையைத் தவறுதலாக இடறி அது கொட்டி விட்டதால் எரிச்சலடைந்த மற்றொ ரு நண்பன் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
இவையெல்லாம் ஒன்றுமேஇல் லை.
சேலம் ஆத்தூரில் ஐந்து நண்பர் கள் குடித்துவிட்டுப் பெரும் போ தையில் இரண்டு பைக்குகளில் தாறுமாறாக சாலையில் சென்றார்கள். அவசர காலத்தில் உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவ ரான அரசு ஊழியர் சண்முக சுந்தரம் என்பவர் அதே சாலையில் தன் டூ வீலரில் வந்தார். குடிகார இளைஞர் களை நிதானமாக வண்டி ஓட்டும்ப டி சொன்னார். ஆத்திரமடைந்த ஐவரும், சண்முக சுந்தரத்தை சாலை யிலேயே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துக் கொன்றேவிட்டா ர்கள். அதில் ஒருவன் கல்லூரி மாணவன்! சண்முக சுந்தரத்துக்கு பள்ளிப்படிப்பு படிக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தீபாவளி அவர்களுக்கு எப்படி இரு ந்திருக்கும் என்று சொல்லத் தே வையில்லை.
கடந்த சில வருடங்களாகவே தமிழ கத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளில் எப்படி பல அரசு ப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மது குடித்துவிட்டு பள் ளிக்கு வந்து தள்ளாடுகிறார்கள் என்பதை வெளிப் படுத்தின. பள்ளி வளாகத்துக்குள்ளே யே கும்பலாக உட்கார்ந்து படித்துக் கொண்டு அல் ல, குடித்துக் கொண்டு இருந்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியரை அவர்கள் தாக்கிய செய்தி யை யும் உங்களுக்கு நினைவுபடுத் துகிறேன்.
எட்டாம் வகுப்பு வரை படித்தும் தமிழையோ ஆங்கிலத்தையோ எழு த்துக் கூட்டிக்கூடப் படிக்க சிரமப்படும் நிலையில் ஆயிரக்கணக்கா ன மாணவர்கள் இருப்பதாக ஓர் ஆய்வு ஒரு பக்கமும், 10வது, 11வது வகுப்பு மாணவர்கள் மத்தியிலேயே மது அடிமைத் தனம் உருவாகிவிட்டதாக இன்னொரு ஆய்வும் தெரிவித்ததை நீங்கள் இருவரும் படித்தீர்களா என்று தெரியவில்லை.
மேலே சொன்ன எந்த நிகழ்ச்சியின் போதும் நீங்க ள் இருவரும் ஒரு அறிக்கைகூட வெளியிட்டதில் லை. எதெதற்கோ அறிக்கை வெளியிட்டு அறிக் கை ப் போரே நடத்துபவர்கள் நீங்கள். தமிழகமே இப்படி மது அடிமைத்தனத்தால் சீரழிவதைப் பற்றி உங்கள் இருவரிட மிருந்தும் ஒரு அறிக்கைகூட வந்ததில்லை. 
ஏனென்றால் இந்தச் சீரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே நீங்கள்தான். உங்களில் ஒருவர்தான் 35 வருட காலம் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கி அடுத்த 40 வருட காலமாக பல தலை முறைகளுக்கு மதுவைப்பழக்கிக் கொள்ள வழிவகுத்தவர். உங்களில் இன்னொருவர்தான் பள்ளிக் கூடங்க ளை தனியாரை நடத்தவிட்டு விட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்து ம் புரட்சியைச்செய்தவர். இதன் வி ளைவுகளில் ஒரு சிறு துளியைத்தான் மேலே பட்டியலிட்டேன். இன்றைய தமிழகத்தில் 18 வயது முதல் 35 வயது வரையி லான இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் குடிகாரர்களாகிவிட் டார்கள். தமிழகத்தில் இருக்கும் சுமா ர் மூன்று கோடி குடும்பங்களில் வீட் டுக்கு ஒரு மது அடிமை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை படுவேகமாக உருவாகிக் கொண்டி ருக்கிறது. மதுவால் சீரழியும் காவலர்கள் பற்றியோ ஆசிரியர்கள் பற்றியோ வெளியான செய்திகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இன்ன மும் செய்தியாகாமல் தப்பித்துக் கொண் டிருக்கும் கோடிக்கணக்கான குடிகாரர் கள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் காவலர்களும் ஆசிரியர்களுமே குடி போதைக்கு அடிமையானால், அச்சமூக ம் இன்னும் எவ்வ ளவு உள்ளுக்குள்ளேயே அழுகிக்கிட க்கும் என்று யூகிக்கலாம். தினசரி சுமார் 2 கோடி தமிழர்க ளேனும் மது குடித்து மதி இழப்பதை சாத்தியப் படுத்தியிருக்கிறீர் கள். அதன் விளைவுதா ன் இன்று தமிழகத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், ப்ளம் பர், மெக்கானிக், மேசன் என்று பல துறைகளிலும் மிகக் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் ஏழை மையால் படும் துயரம் போதாதென்று தம் வீட்டு ஆண்களின் போதையால் படும் கூடுதல் துயரம் சொல்லிமா ளாது. நேரமிருந்தால் உங்கள் வீட் டில் வேலைசெய்யும் பணிப்பெண் களிடமே மனம்விட்டுப் பேசிப் பா ருங்கள். குடிப் பழக்கத்தால் சீரழி யும் குடும்ப சோகங்களை அவர்க ள் கொட்டித் தீர்ப்பார்கள். 
கடந்த இருபது வருடங்களில் நீங்கள் இருவரும் மாறிமாறி ஆட்சி நடத்தியதால் தமிழர்களுக்கு எந்தப் பெரிய லாபமும் ஏற்பட்டு விட வில்லை. உங்களில் ஒருவர் வீட்டுப்பெண் கோடிக்கணக்கான ரூபா ய் ஊழல் புகார் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதும், ஒரு பேரன் மோசடி வழக்கில் கைதாக பயந்து மாதக் கணக்கில் தலை மறை வாக ஒளிந்திருப்பதும், உங்களில் மற்றவர் தன் அன்புக்குரிய உடன் பிறவா சகோதரியுடன் சட்டவி ரோத சொத்துக் குவிப்பு வழக்கில் வருடக்கணக்கில் நீதிமன்றப்படி ஏறி இறங்கிக் கொண்டிருப்பதும் தான் உங்கள் சாதனைகள். உங்கள் இருவரின் ஆட்சியில் ஏற் பட்ட நன்மைகளுடன் தீமைகளை ஒப்பிட்டு காஸ்ட்- பெனிஃபிட் ரேஷி யோ பார்த்தால், தமிழர் பெற்றதை விட இழந்ததே அதிகம். உங்கள் இருவருக்கும் கொஞ்சமேனும் மனசாட்சி இன்னமும்மீதம் இருக்கு மானால், தயவுசெய்து இந்த மது அவலத்துக்கு முற்றுப்புள்ளி வை யுங்கள். ‘தமிழினத் தலைவர்’ அவ ர்களே, தமிழக அரசு பூரண மது விலக்கு கொண்டுவந்தால், அதை தி.மு.க முழுமையாக ஆதரிக்கும் . தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு தொடரு ம் என்று அறிக்கை வெளியிடுங் கள். ‘புரட்சித் தலைவி’ அவர்களே, ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பூர ண மதுவிலக்கு என்றும் அதை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு நன்றி என்றும் அறிவியுங்கள்.இதைச் செயத் தாமதமாகும் ஒவ்வொரு கண மும் தமிழகம், தமிழ் இனம் அவலப் பெருங்குழியில் வீழ்ந்து கொண் டே இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழிக்கும் பழி சிங்கள ராஜபட்சே மீதானது. ஆனால் இந்திய த் தமிழர்களைக் கத்தியி ன்றி ரத்தமின்றி மதுக்கோ ப்பைகளா லேயே அழிக்கு ம் பழியை நீங்கள் இருவர் தான் சுமக்கப் போகிறீர்க ள்.
உங்கள் இருவராலும் தமிழக த்தில் மது விலக்கைக் செயல் படுத்த முடியாதென்றால், ஒரேஒரு வேண்டுகோள்தான் எனக்கு மீத ம் இருக்கிறது. தயவுசெய்து இருவரும் அரசியலை விட்டு வெளியே றுங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய மாபெரு ம் தொண்டாக இருக்கும்.இன்றிரவு உற ங்கப்போகும்முன்பு ஒரு தவறும் செய்யாத ஒரு சண்முக சுந்தரம் நடுத் தெருவில் உங்களால் ஊக்கு விக்கப்ப ட்ட குடிகாரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் கொடூர சாவை ப்பற்றி எண்ணி தூக்கம் இழக்கும் அக்குழந்தைகளை எண் ணிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூரண மது விலக்கு ஆதரவு அறிக்கையை எழுதி வெளியிட்டு பரிகாரம் தேடு ங்கள்.

இன்னும் உங்கள் இருவர் மீதும்
எஞ்சியிருக்கும் சொற்ப நம்பிக்கையுடன்,
ஞாநி
(எழுத்தாளர், சமூக ஆர்வலர்)

ப‌டங்கள் கூகுள்

3 Comments

  • RAVISANKAR

    Late Shri.Rajagopalachari went to Shri.Annadurai’s house and requested him not to remove prohibition since it will erode the standard of living of the poor masses.No body cared for his advises and removed the prohibition somrtime after 1967 in DMK rule only.Tamilnadu is suffering because of ‘THEERA VIDAM” ONLY.

  • THAMILAKA MEENAVARKAL KADALIL ADI VAGKUM PIRADSANAI AANALUM ILAGGAI THAMILAR PIRADSANAI AANALUM PIRATHAMARUKKU KADITHAM {IYAA AMMA} ANUPPUKIRARKAL NEEGKALUMA AARIYA KANSI PALAGKANSI YARAJUM PUNPADUTHUVATHATKAKA ELUTHAVILLAI MANNITHTHUKKOLLAVUM NANRI

  • நான் ஈ

    பிரதம மந்திரிக்கு அவர்கள் இருவரும் கடிதம் எழுதுவதாக குற்ற‍ம்சாட்டிய நீங்களே அவர்கள் இருவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருப்ப‍து நகைப்புக்குரியதாக உள்ள‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: