மக்களின் முக பாவனைகளை கண்டு, அவர்களை உற்சாகப்படுத்து ம் நோக்கோடு தனது பேச்சில் ஏற்ற இறக்கங்களையும் ஆங்காங்கே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தான் படித்த நூல்களில் இருந்து மேற் கோள்காட்டியும் பேசக்கூடிய மிகச்சிற ந்த பேச்சாளர் ஒருவர். அவருக்கு ஏற் பட்ட ஓர் நகைச்சுவை அனுபவத்தை தனது பேச்சில் குறிப்பிட்டு, அதை தானும் ரசித்து, மற்றவர்களை சிரிக்க வைத்துள்ளார். இதோ அந்த நகைச் சுவை
அந்த பேச்சாளர் ஒரு ஆங்கிலேய நண்பர் ஒருவருடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அக்காரை ஓட்டுநர் ஓட்டி வந்தார். காரில் இருந்த அந்த பேச்சாளரும், அவரது ஆங்கிலேய நண்பரும் சுவாரஸ் யமாக ஆங்கிலத்திலேயே உரை யாடி வந்தனர். திடீரென்று ஓர் ஆடு காரின் குறுக்கே சென்றதால், காரின் ஓட்டுநர் சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த அந்த பேச்சாளரின் நண்பர் YOU FOOL என்று ஓட்டுநரை திட்டினார். எதனால் இந்த காரை ஓட்டுநர் நிறுத்தினார் என்பதை அந்த பேச்சாளர் தனது நண்பருக்கு சொல்ல முற்படுவதற்குள் அந்த ஓட்டு நரே பதிலளித்தாராம். இந்த பதிலை கேட்ட அந்த ஆங்கிலேய நண்பர் தனது கோபத்தையும் மறந்து, வாய்விட்டு சிரித்தே விட்டாராம்.
அப்படி என்னதான் சொன்னார் அந்த ஓட்டுநர்
சார்! மட்டன் ஜம்பிங், பிரேக் புட்டிங் சார் என்றாராம் அந்த ஓட்டுநர்.
(அந்த ஓட்டுநர் ஓட்டிவந்த காரின் உரிமையாளர் அந்த பேச்சாளர். அந்த பேச்சாளர் யார் தெரியுமா? சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தான்)
sema joks sir i like