இந்த பாலிசி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? யார், யாருக்கெல்லாம் பாலி சி எடுக்கலாம்?, கிளைம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அதிகபட்சமாக எவ்வளவுக்கு இந்த பாலிசியை எடுக்கலா ம்?, பிரீமியம் எவ்வளவு என அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொ ல்கிறார் ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணை மேலாள ர் சந்தானகிருஷ்ணன்.
கட்டாய பாலிசி!
”டூ வீலர் ஓட்டத் தெரிந்த, தெரியாதவர்கள் முதல் நான்கு சக்கர வாக னங்கள் ஓட்டுகிற அனைவரும் இந்த தனிநபர் விபத்துக் காப்பீ டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். விபத்துகளினால் ஏற்படும் பணக் கஷ்டங்க ளை ஈடு செய்வதே இந்த தனிநபர் விபத்துக் காப் பீட்டின் நோக்கம். 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் இந்த விப த்துக் காப்பீ ட்டை எடுத்துக் கொள்ள முடியும்.
யார், யாருக்கெல்லாம் எடுக்கலாம்?
நிறுவனம் அவர்களின் ஊழியர் களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுக்கலாம்.
ஒரு கணவன் தனது மனைவிக்கும், தனது குழந்தைகளுக்கும் இந்த பாலிசியை எடுக்கலாம். ஒரு மனைவி, தனது கணவ னுக்கும், குழந் தைகளுக்கும் எடுக்கலாம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு எடுக்கலாம். ஆனால், பெற்றோர்கள் அவர்களை சார்ந் திருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே எடுக் க முடியும். தனியாகச் சம்பாதிக்க ஆரம்பி த் திருந்தால், அவர்களாகத்தான் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி எடுப்பது?
இந்த பாலிசியை எடுக்க விரும்புகிறவர்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்று அவர்கள் தரும் ‘புரபோஸல் ஃபார்ம்’ என்னும் படிவத் தை வாங்கி அதில் கேட்டி ருக்கும் விவரத்தை உண்மையாக பூர்த்திசெய்து கொடுக்க வேண் டும்.
ஒருவரின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரே ஜ் கிடைக்கும். அவரவ ர் விருப்பத்திற்கேற்ப தேவைப்படுகிற அளவு க்கு இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
அவரவர்களின் சம்பளத்திற்கேற்ப கிடைக்கும் காப்பீட்டுத் தொகை மாறுபடும்.
ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருட பிரீமியம் 60 ரூபாய் மட்டு மே. குறைந்தபட்சம் ஒருவர் 25,000 ரூபாய் வரைக்கும் இன்ஷூரன் ஸ் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான வருட பிரீமியம் வெறும் 15 ரூபாய்.
பிரீமியங்களை காசோலைகளாக வோ, பணமாகவோ பாலிசி எடுத்த அலுவலகத்திற்கு நேரில் வந்து செலுத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை இணையதளம் வழியாக கட்டுவதற் கு அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது.
ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடம் வரை இந்த காப்பீட்டு பாலிசி யை எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அதிக ஆண்டுகள் கட்டி னால் பிரீமியம் குறையும்.
எதற்கெல்லாம் கிடைக்கும்?
வாகன விபத்தில் இறக்க நேரிட்டால் இழப்பீடு கிடை க்கும். சாலையில் நடந்து போகும்போது வாகனம் மோதி இறக்க நேரிட்டாலும் இழப்பீடு கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது திடீரென வீடு இடிந்து விழு ந்து இறக்க நேரிட்டாலும் இழப்பீடு கிடைக்கும். அல்லது உடல் உறு ப்புகளின் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும். விபத்தினால் ஏற்பட் ட தற்காலிக ஊனத்தின் காரணமாக பாலிசி தாரரால் அலுவலகத் திற்கு செல்ல முடியாமல் போனால் மா தாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கி டைக்கும்.
எதற்கெல்லாம் கிடைக்காது?
இயற்கையான மரணத்திற்கு இழப்பீடு கிடைக்காது.
தற்கொலை செய்துகொண்டாலோ, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திக் கொண்டாலோ, கொலை செய்யப்பட் டாலோ, மது அருந்திய நிலையில் விப த்தில் சிக்கினாலோ, குழந்தை பிறப்பி ன்போதோ, கருவுற்றிருக்கும் போதோ மரணம் ஏற்பட்டால் காப்பீட் டுத் தொகை கிடைக்காது.
கிளைம் செய்யும்போது..!
கிளைம் செய்யும்போது கிளைம் ஃபார்மை பூர்த்திசெய்து தர வேண் டும். கவரேஜ் அதிகம் கிடைக்கும் என்பதால் பொய் யான தகவலை சொல்லக் கூடாது.
பாலிசிதாரருக்கு விபத்து அல்லது விபத்தினால் இறப்பு ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த அலுவ லகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிளைம் செய்யும்போது கிளைம் படிவத்துடன் ஊனத்தை ஊர்ஜிதப் படுத்தும் மருத்துவச் சான்றிதழ், காவல் துறை சான்றிதழ், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் பற்றிய விவரம், நிரந்தர குறைபாடு சான் றிதழ் ஆகியவற்றை இணைத்து இன்ஷூரன்ஸ் எடுத்த அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் வேலை செய்யும் அலுவலகத் திலிருந்தும் விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம்.
விபத்தினால் இறப்பு ஏற்பட்டு அதற்காக கிளை ம் செய்வதாக இருந்தால், கிளைம் படிவத்துட ன் பிரேத பரிசோதனை சான்றிதழ், காவல் துறை சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் சமர்ப்பித்த விவரங்களை சரிபார்க்க இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் இருந்து ஆட்க ள் வருவார்கள். சான்றிதழ்களில் உள்ள விவர ங்கள் பொய்யானவை என்று தெரிந்தால், கிளைம் தொகை கிடைக்காது. எனவே, உண் மையான தகவல்களை மட்டுமே பூர்த்தி செய்து கொடுப்பது நல்லது.
சலுகைகள் உண்டா?
ஒரு வருட பாலிசி காலம் முடி ந்து 30 நாட்களுக்குள் புதுப்பித் துக் கொண்டால் அடுத்த வருட காப்பீடுத் தொகையில் 5% போனஸ் சேர்த்து வழங்கப்படு ம். இதேபோல் அடுத்த ஆண்டு ம் 30 நாட்களுக்குள் புதுப்பித் துக் கொண்டால் 10%, அதற்கு அடுத்த ஆண்டு 15% என அதி கபட்சம் 50% வரை போனஸ் கிடைக்கும்” என்று முடித்தார் அவர்.
இதுவரை இந்த பாலிசி எடுக்காதவர்கள் இனியாவது கட்டாயம் எடுப்பார்கள் என்று நம்புவோமாக!
இந்த பாலிசியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கலாம் நன்கு விசாரித்துவிட்டுபாலிசி எடுங்கள்.