Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற தலம் திருவண்ணாமலை!

பஞ்சபூதத் தலங்கள் ஐந்தில் நடுநாயகமான அக்னித் தலமாகவும், நால்வரால் பாடப்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணா மலை தலத்தில், மிகப் பழங்காலம் தொட்டே நடைபெற்று வரும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகப் பெருந் திருவிழா வாகும். இவ்விழா கார்த்திகை மாதத்தில் கொடியேறி 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கார்த்திகை தீபத் திரு விழாவை ஒட்டியே கொடியேற்றத் துடன் பிரம்மோற்சவமும் துவங்குகிறது.

சிவத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்றதும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகின்ற திருவண்ணாமலை திருக் கோவி லில், கொடியேற்றத்துக்கு முன் மூன்று நாட்களும், தீபம் ஏற்றிய பின்னர் வரும் நான்கு நாட்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

தீபப் பெருவிழா சிறப்பாக நடக்கவும், அனைத்து மக்களையும் காத்து அருள்பாலிக்க வேண்டியும் முதல் மூன்று நாட்கள் எல்லை தெய்வ ங்களான- ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீபிடாரியம்மன், ஸ்ரீவிநாயகர் ஆகி யோருக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் நாளில் இந்நகரின் வடக்கே அமைந்துள்ள அருள்மிகு துர்க்காம்பாள் ஆலய த்தில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்கார உற்சவர் வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. ஆக, துவக்க விழாவின் முதல் நாள் இந்த துர்க்கையம்மன் நம்மை அருள்பாலிக்கும் திரு விழா வாகும்.

அடுத்து இரண்டாம் நாள் அண்ணாமலையார் திருக்கோவில் வளாக மூன்றாம் பிராகாரத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீ பிடாரியம்மன் திருவிழாவாகும். இந்த திருக்கோவில் மிகவும் பழ மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இங்கும் “தீபத் திருவிழா’ சிறப்பாக நடக்க, பெரிய அளவில் உணவு படைத்து சிவாச்சாரியார் கள் மந்திரங்கள் ஓதி, காவல் தெய்வமான இந்த அன்னையை வண ங்கி வழிபடுகின்றனர்.

மூன்றாம் நாள் அண்ணாமலையார் திருக்கோவில் கொடிமரத்துக்கு தெற்கே உள்ள சம்பந்த விநாயகருக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாலையில் அபிஷேகங்கள் செய்து தீபத் திருவிழா நன்கு நடைபெற சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த சம்பந்த விநாயகரு டன் சண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருகிறார். இந்த விநாயகப் பெருமான் துர்க்கையம்மன் ஆலயத்துக்கு வந்து, அங்கு புற்று மண் சேகரித்துக் கொள்கிறார். ஆகம முறைப்படி வேதங்கள் ஓத, இந்த புற்று மண் அண்ணாமலையார் ஆலயத்துக்கு எடுத்து வர ப்படுகிறது. அங்கு இந்தப் புற்று மண்ணில் நவதானியங்களை இட்டு வளரச் செய்து, தீபத் திருவிழா நடந்து முடிந்தவுடன் முளைத்த நவ தானியங்கள் தாமரைக் குளத்தில் சிறப்படையச் செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் மூன்று நாட்களும் சிறப்பு வழிபாடுகள் செய்து கார் த்திகை தீபப் பெருவிழாவுக்கு நகரம் தெய்வீகமயமாக்கப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெறும் இந்த தீபத் திருவிழாவின் பத்தாவது நாளான பரணி தீப நாளன்று, காலை நான்கு மணிக்கு இறைவனின் கருவறையில் நெய் தீபமேற்றி, அங்கு தயாராக வைக் கப்பட்டிருக்கும் ஐந்து மண் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பின்னர் அவை அங்கிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு, அம்மன் கோவில் கருவறையில் உள்ள ஐந்து மண் அகல் விளக்குகள் ஏற்றப் படுகின்றன. இது பஞ்சமூர்த்திகளும் பஞ்ச சக்திகளுடன் இணைவ தைக்குறிப்பதாகும். அங்கிருந்து விநாயகர் உட்பட அனைத்து சந்நி திகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் ஆலயத்தின் உள்வளாகத்தில் நடைபெறும் இந்த பரணி தீப தரிசனம் கண்டு புளகாங்கித மடைகின்றனர்.

பின்னர் காலை 4.00 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. காலையி ல் சுவாமிகள் சந்நிதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் உற்சவருடன் கொடி மரத்தின் முன்பு கொண்டு வந்து, அங்குள்ள அகண்ட தீபத்தை ஏற்றுகின்றனர்.

இந்த அர்த்தநாரீஸ்வரர் உற்சவர் ஆண்டிற்கு ஒருமுறை இந்த மகா தீப நாளன்று மட்டுமே ஆலயத்துக்கு வெளியே காட்சி தருகிறார். இவர் பலிபீடத்தின் அருகில் வந்து காட்சி தந்தருளி விட்டு மீண்டும் ஆலயத்திற்கு உள்ளே சென்றுவிடுகிறார்; மாடவீதிக்கு வருவதில் லை.

இந்த அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் இங்கு வருவதன் உட்பொருள் என்னவெனில், ஸ்ரீஉமாதேவி இந்த அண்ணா மலை திருத்தலத்துக்கு வந்து அருந்தவமியற்றி இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் சிவமு ம் சக்தியும் இணைந்த உருவமான அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் உண் டாயிற்று. இந்த மூர்த்தம் தோன்றிய காலம் கார்த்திகை மாதம் கிரு த்திகை நாளாகும். இந்த அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய அதே நேரத்தி ல்தான் மலையுச்சியில் சிவமும் சக்தியும் ஓருருவான ஏகப் பரஞ் சுடர் காட்சி தருகிறது.

– விஜயலட்சுமி சுப்பிரமணியம், நக்கீரன்

One Comment

Leave a Reply to செந்தில் Cancel reply