Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல.

தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுக ளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கி யது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியா கக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பி ன்படி, சிம் கார்டு பெறு வது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.

உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம் பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவ ணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப் படுகிறதோ, அவர் அதனை https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcT4kOnRZ-vh-dLP5kCCDe6CApyUgWvZsXmlWlL42xj8M9n_2lgW0gவழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவ ருடையது தானா என உறுதி செய்யப் படும். 

நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுப டியாகாது. 

மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தா லும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்ப ட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும். 

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT8W9lxgVnoq1wEfViQUYsQJEAnne5zUH0cWZZp9p_nPusKsJQfbwதவறான அல்லது போலியான ஆவண ங்களைக் கொடுத்து வாங்கி ய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மைய மும் சட்ட ரீதி யான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறி த்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின் றன. மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங் களி ன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: