Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையின் வழித்தடங்கள் அனைத்தும் இனி உங்கள் கைபேசியில் . . .

சென்னைக்குப் புதியதாக ஒருவர் வருகிறார் என்றால் அவர் செல்ல‍ வேண்டிய முகவரி யை வைத்துக் கொண் டு யாரிடம் கேட்பது எப்ப‍டி கேட்பது என்று தயக்க‍ம் ஒருபுறம், யாரிடம் கேட்டால்தா ன் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி சொல் வார்கள் என்று குழப் ப‍ம் மறுபுறம், அப்ப‍டி கேட்டாலும் அவர் சரி யான வழியைத்தான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் வேறு அவர் மனதில் இயற்கையாகவே எழும். எப்ப‍டியோ அல்ல‍ல்பட்டு தான் சேர வேண்டிய அந்த இடத்திற்கு ஒரு வழியாக சென்று சேர்வதற்குள் பெரும்பாடாகிவிடும் அதுவும் சென்னை போன்ற நகரங்களில் அப்ப‍ ப்பா இந்த அவஸ்தையை சொல்ல‍வும் வேண்டுமா என்ன‍?

இன்றோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

ஆம் இனி “சென்னையில் உள்ள‍ எந்த ஒரு வழி த்தடத்தையும் உங்கள் கைபேசியிலேயே தெரி ந்து கொள்ளலாம்.”

உதாரணமாக சென்னை கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு ஒரு வெளியூரில் ஒருவர் வருகி றார். அங்கிருந்து அவர் திருவான்மியூர் செல்ல‍ வேண்டும். அங்கு எப்ப‍டி போவது? என்று யாரிட மும் நீங்கள் கேட்க வேண்டிய அவசிய மில்லை. தற்போது உங்களு க்கே உங்க ளுக்காக வந்துவிட்டது ‘ரூட்ஸ்’. சென்னையில் உள்ள‍ எந்த ஒரு வழித் தடத்தையும் உங்கள் கைகளில் தவழும் ஒரே கை பேசியில் (செல்போனில்) தெரிந்து கொள்ளலாம்.

இதுபற்றிய மேலும் சில தகவல்களை ரூட்ஸ் நிறுவனத்தின் நிர்வா க இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் கூறுகையில், ”ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந் த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்கார ங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக் கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் ‘சென் னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக் குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவு பண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இது பத்திப் பேசினேன். ரெண்டுபேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டு மொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச் சோம். திரட்டின தகவல்களை இணையத்தில் பகிருவது எந்தப் பிரயோஜன மும் இல்லை மேலும் இணைய தொடர். அவசரமாக செல்ல‍ வேண் டியிருப்பின் இணைய இணை ப்பு கொண்ட கணிணி திறந்து பார்த்து க்கொண்டிருக்க‍ முடியாது. அதனால் அவர்க ளுக்கு ஒரு எண்ணை கொடு த்து, எங்களை தொடர்பு கொ ண்டால், அவர்கள் எங்கே போக வேண்டுமோ அந்த இட த்திற்கு சரியான வழித் தடத் தை நாங்க (ரூட்ஸ்) அளிக் கிறோ ம்னு மக்க‍ள் மத்தியில் விளம்பரப் படுத்தியிருக்கி றோம். தற்போது ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுரு ச்சு.

அப்புறம்தான் இந்த ‘ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம். 86959 59595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவை யான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம். அதோட நீங் க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இரு க கு தானு அத்த னை தகவல்களும் கொடுப்போம்” என்றார். நல்ல தொடக்கம்! இச்சேவையை ரூட் அமைபு முற்றிலுமாக‌ இலவசமா கவே செய்கிற து என்பது பாராட்ட‍ வேண்டிய ஒன்று!

– விதை2விருட்சம்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: