Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜனாதிபதி தலைமையில் தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.

தமிழக சட்டசபையின் வைரவிழா இன்று மாலை 4.30 மணியள வில் நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.

https://i0.wp.com/img.dinamalar.com/data/large/Tamil_News_large_596296.jpg?resize=318%2C219தமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை யொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ் விழாவிற்கு ஜனா திபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகி றார். இதற்காக இன்று மாலை 3.30 மணியள வில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரணா ப் முகர்ஜி, அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை க்கு செல்கிறார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனி யில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வருகிறார். தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது. இவ்விழாவை பிரணாப் முகர்ஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக் கிறார். சபாநாயகர் தனபால் அனைவரையும் வரவேற்கிறார். தொட ர்ந்து முதல்வர் ஜெய லலிதா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், கவர்னர் ரோசய்யாவுக் கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கிறார். பின்னர் சபாநாயகர் தனபால், பிற முக்கிய பிரமுகர்களுக்கு பொன் னாடை போர்த்தி நினைவுப்பரிசுகளை வழங் குகிறார்.

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபை வைரவிழா மலரை வெளியிட, அதை பிரணாப் முகர்ஜி மற்றும் ரோசய்யா ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பி னர்கள் விடுதிக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொட ர்ந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் வாழ்த்துரை வழங்க, முதல்வர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத் து கவர்னர் ரோசய்யா தலைமையுரை ஆற்ற, பிரணாப் முகர்ஜி சிறப் புரை ஆற்றுகிறார். இறுதியாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நன்றியுரை ஆற்றுகிறார். பின்னர் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் தேநீர் விருந்து நடக்கிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பாதுகாப்பு பலம்:

சட்டசபை வைரவிழாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொள்வ தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான சோதனைக்குப்பிறகே சட்டசபை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.

சென்னை ஜொலிக்கிறது:

தமிழக சட்டசபையின் வைரவிழாவை முன்னிட்டு, தலைமைச் செய லகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் நேற்றிரவு வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அப்பகுதி வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.                                                             – dinamalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: