சமீபத்தில் நான் படித்து ரசித்த புத்தகம், பேராசிரியர் முனைவர் திரு .அறிவொளி அவர்கள் எழுதியிருக்கும் கம்ப ராமாயணம் புத்தகம் ரொம்ப அற்புதமாக எல்லோருமே ரசிக்கிற மாதிரி இருக்கிறது. அதில் பல பகுதிகளை மிக ரசித்தேன்.
விசுவாமித்ரர், யாகத்துக்காக, ராம லட்சுமண ர்களை அழைத்துப் போகிறார். அப்போது தசரதன் உணர்வுகளை கண்ணிலான் பெற்றி ழந்தான் . . . என உணர்ந்தான். கடுங்துயர் கொ ண்டான்ய என்கிறார்.
அதாவது பிறவிக்குருடனுக்கு கண் பார்வை கிடைத்தது. உடனே பறி போனால் எப்படி இரு க்குமோ அத்தகைய துயரமாம்.
ராம்பிரானால் அகலிகை சாம விமோச்சனம் பெறுகிறான்.
ஏற்கனவே தாடகையை ராமன் வதம் செய்ததைப் பார்த்திருந்த விசுவாமித்ரர்.
மை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்.
கால் வண்ணம் இங்கு கண்டேன்.
என்கிறார். இராமர் மிதிலைக்குள் நுழைகிறார். இராமரின் வருகை யை வரவேற்கின்றனவாம். அவைக ளின் வரவேற்பு நடன மங்கை களின் நடனத்தைப் போன்று இருந்த்தாக வர்ணித்திருப்பார். இதைப் போல எளிமையான இனிமையான பாடல் கள் கொண்ட புத்தகம் இது.. .
– நம் உரத்த சிந்தனை (மாத இதழில். . .) கைபேசி 94440 11105