வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரண மாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற் றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி ரத்த வாந்தி எடுப்பார். இவ் வகையி லான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்க லாம்.
நோயாளியை கவனித்துக் கொ ள்ளும்முறை:
நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.
அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொ டுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கத கதப்பான நிலையில் வையுங்கள். அதேநேரம் குளிரில் நடுங்கவும் வைத் துவிடாதீர்கள்.
வாய் வழியாக எந்த உணவை யோ நீரையோ கொடுக்க வேண் டாம். தண்ணீர் கொண்டு வாயி னைக் கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவேனும் விழுங்கி விடக் கூடாது.
உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன் ஸை அழையுங்கள்.
நோயாளி மயக்கமடைந்துவிட்டால், உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக, ஒரு பக்க மாக சாய்த்து படுக்க வையுங்கள். எனினும் கால் களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.