ஆடம்பரமான ஆடி கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் உள்ள மஹா ராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், தொழிற்சாலை உள்ளது. ஏ4, ஏ6 மற்றும் கியூ5 க்ராஸ் கார்கள் ஏற்கெனவே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், ஆடிகார் நிறுவனத்தின், ஆடி க்யூ 3, கியூ5, கியூ7 எஸ்.யு.வி., ஆகிய மாடல் கார்களுக்கு நல்ல வரவே ற்பு உள்ளது. நடப்பு ஆண்டின், முதல், பத்து மாதங்களில், இந்த நிறுவனம், இந்தியாவில், 7,273 கார்களை விற்பனை செய்து ள்ளது. கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது, இது 55 சதவீதம் அதிகம். இந்த சூழ்நிலையில், கியூ 7 காரும், அவுரங்கா பாத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய சந் தையில், ஆண்டுதோறும் ஆயிரம் கியூ 7 கார்களை விற்பனை செய் யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த காரு க்கான காத்திருப்பு காலம்(வெயிட்டிங் பிரீயடு) வெகுவாக குறையு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஆடி கார் நிறுவனத் தின் சார்பில், ஏ4, ஏ6, ஏ7, ஏ8எல், க்யூ3, க்யூ 5, க்யூ7, எஸ்4, ஆர்எஸ்5 மற்றும் சூப்பர் கார்கள் வரிசையில் ஆர்8, ஆர்8 ஸ்பைடர் ஆகிய மாடல் கார்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக் கது. சென்னையில், ஆடி “க்யூ 7′ காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59 லட்சத்து 29 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.