Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தடுமாற்றமில்லாத தாம்பத்ய வாழ்க்கைக்கு நிபுணர்கள் கூறும் சில அடிப்படை பண்புகள்

சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை என்றாலும் சில அடிப்ப டை விசயங்களை அறிந்து கொள்வது தப்பில்லை என்கின்றனர் நிபு ணர்கள். புதிதாக திருமணமானவ ர்கள் தாம்பத்யத்தில் தடுமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சின்னச் சின்ன விளையாட்டு களில் தொடங்கி ஆலயங்களில் உள்ள சிருங்கார சிற்பங்கள் வரை அடிப்படை விசயங்களை மறைமு கமாக அறிவுறுத்துகின்றனர். தடு மாற்ற மில்லாத தாம்பத்ய வாழ்க் கைக்கு நிபுணர்கள் கூறும் சில அடிப்படை பண்புகளை தெரிந்து கொண்டால் உங்களின் துணையை திருப்திபடுத்தமுடியும் என்கின் றனர் நிபுணர்கள் படித்து தெரிந்து கொ ள்ளுங்களேன்.

முத்தத்தில் தொடங்குங்கள்

தாம்பத்ய உறவிற்கான முதல் திறவுகோல் முத்தம் எதையுமே இத ழில் தொடங்கினால் உறவிற்கான அடித்தள ம் அமோகமாய் அமையுமாம். எனவே முத்த மிடுவதில் கூட ஒரு கலை நயம் இருக்கிறது என் கின்றனர் நிபுணர்கள். மென்மையான உதட்டில் பதிக்கும் முத்தம் ஆணுக்கும், பெண்ணுக்கும் உணர்ச்சிகளை தூண்டி கிளர்ச்சியை ஏற்படுத்தும்.

முன்விளையாட்டு முக்கியம்

முன்விளையாட்டுக்களில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அவர்களின் உணர் வுகள் தூண்டப் படுவதோடு ஆர்க்கஸம் நன்றாக இருக்குமாம். பெ ண்களை குஷி படுத்துவதற்கு ஏற்ற சின்னச் சின்ன டெக்னிக்குகள் அடங்கிய முன் விளையாட்டுக்களை அறிந்து கொள் வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

காண்டம் விழிப்புணர்வு

ஆணோ, பெண்ணோ செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஆரோக்கியமான தாம்பத்யத்திற்கு காண்டம் உபயோகிப்பது அவசியம் என்கின்றனர். அது எஸ்டிடி எனப்படும் (Sexually Trans mitted Diseases) பால்வி னை நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே காண்டம் எவ்வாறு உப யோகிப்பது என்ற அடிப்படை அறி வு ஆண்களுக்கு அவசியம் இருக் கவேண்டும் என்கின்றனர் நிபுணர் கள்.

பொசிசன் தெரிந்து கொள்ளுங்கள்

காமத்திற்கு ஏற்ற நிலையினை காம சூத்ரா கூறியுள்ளது. சில பொ ஸிசன் கள் மட்டுமே நமக்கு ஏற்றதாக இருக்கும் அதைப்பற்றி தெரிந்து கொண்டால் தாம்பத்ய உறவின் துணையினை திருப்திபடுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதற்றமடையாதீர்கள்

எந்த ஒரு செயலுமே பதற்றத்தி னால் கெட்டுப்போய்விடும். என வே பதற்றமடையாமல் செக் ஸை தொடங்கினால் அதுவே பாதி வெற்றி என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியரில் ஒருவ ருக்கு பதற்றமான சூழ் நிலை இருந்தாலும் அன்றைய தினம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

கட்டுப்படுத்துங்கள்

ஒருசில ஆண்களுக்கு எளிதில் உச்சக்கட்டநிலை வந்துவிடும். திடீர் விந்து வெளியேற்றத்தினை கட்டுப் படுத்த முடியாது. இதனால் பெண்க ளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். என வே உங்களை கட்டுப்படுத்து வதுற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண் டால் சில நிமிட நேரங்கள் சந்தோச மான தாம்பத்யத்தினை அனுபவிக்க லாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கட்டாயப்படுத்த வேண்டாம்

தாம்பத்ய உறவு என்பது இருமனங்களும் இணைந்து ஈடுபட வேண் டிய ஒரு செயல் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒருவ ருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகஜமான மனநிலையில் செக்ஸ் உறவில் ஈடுபடவேண்டும். பெண் களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒருவித கூச்ச சுபாவத்தினால் சிறி து நேரம் ஒத்துக் கொள்ளாமல் இருக்க லாம். அந்த மாதிரியான நேரத்தில் சிறிதுநேரம் பேசி அவர் களுக்கு மூடு வரவழை க்கலாம். தம்பதியர்களில் யாருக்காவது மூடு சரியில்லாமல் இருந்தாலோ,  மற்றொருநாள் வைத்துக் கொ ள்ளலாம் என்று தோன்றினாலோ சரி என்று கேட்டுக்கொள்ளவே ண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என்கின்றனர் நிபுணர் கள்.

தாம்பத்ய உறவின் போது நிபுணர் கள் கூறியுள்ள இந்த அடிப்படை நிபந்த னைகளை பின்பற்றினால் சந்தோச மான தாம்பத்ய வாழ்க் கை யினை அனுபவிக்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பா ருங்களேன்.

நன்றி=> இளமை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: