Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி?

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு,

எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அhttps://i0.wp.com/img.dinamalar.com/data/uploads/E_1354260034.jpeg?resize=242%2C232டுத்தது நான்தான்.

அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப் பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்து க் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறு மைசாலி; அவ்வப்போது மது அரு ந்து வார்.

அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவா ர். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்கா து.

என் அக்காக்களை விட, நான் நன்றாக இருப்பேன் என்பதால், என் அம்மாவிற்கு, என் மேல் மிகுந்த சந்தேகம். நான் அவர்களை அசிங்க ப்படுத்தவே பிறந்திருப்பதாக கூறுவார். இது போதாதென்று, எனக்கு வலிப்பு நோயும் உள்ளது.

நான், தற்போது, எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்து, தனியார் கல்லூரி யில், ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். நல்ல கல்வி, பொருளாதார சுதந்திரம் இருந்தும், வீட்டில், நான் அழாத நாள் இல் லை.

கல்லூரியில் படிக்கும்போது, ஒருவனை காதலித்தேன். நண்பர்களா க ஆரம்பித்த பழக்கம்; என் நண்பர்களின் கேலி, கிண்டலால் காத லாகியது. அவன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால், உடனடியாக பதிவுத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினான். அப்படி செய்தால், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்றான்.

அப்போதிருந்த நிலையில், அவன் சொன்னதையெல்லாம் செய்தே ன். அவன் ஆசைக்கு இரையானேன். அது, “கலப்பு திருமணம்’ என்ப தால், வேலை வாய்ப்பகத்தில், பதிந்து வைத்தால், வேலை வாய்ப்பி ல் முன்னுரிமை கிடைக்கும் என்று கூறினர். எனவே, இருவரும், ஐ. சி.எம்., கேட்டகிரி என்று பதிந்துள்ளோம்.

இந்நிலையில், என் மொபைலுக்கு, ஒரு ராங் நம்பரிலிருந்து போன் வந்ததால், என்னை சந்தேகப்பட்டான். நான் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும், அவன் நம்பவில்லை. பதிவுத் திருமணம் செய் த பின், என்னை அடிக்கடி திட்டி, சண்டையிட்டான். எல்லாவற்றையு ம் பொறுத்து கொண்டேன்.

அவன் எந்த வேலைக்கும் செல்லாமல், என்னிடம், “உனக்கு தேவை யான நகை, வீட்டுப்பொருட்கள்’ எல்லாவற்றையும் வாங்கி, இப்போ தே சேர்த்து வை. உன் சம்பளத்தை வீட்டில் கொடுக்க வேண்டாம். பின்னால் நமக்கு தேவைப்படும்’ என்று கூறினான்.

என் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவ ன் கூறியபடி, நானும் சேமித்தேன். அதையும் அவ்வப்போது, வாங்கி செலவு செய்தான்.

இந்நிலையில், ஒருநாள் என்னை மிகவும் திட்டி, சண்டையிட்டு பேச வில்லை. நான் தொடர்பு கொண்டால், எதுவும் பதில் இல்லை. நானு ம் பேசாமலிருந்தேன். ஐந்து மாதமாக எந்த தொடர்பும் இல்லை. அப் போதுதான், அவன் சுயரூபம் தெரிந்தது. இப்போது என் பிரச்னை என்னவென்றால், அவன் என்னை, பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். இனி, யாரையும் திருமணம் செய்து கொள்ளு ம் எண்ணம் இல்லை. வாழ்நாள் முழுவதும், தனியாக வாழ்ந்து, என் தம்பி, தங்கையை நன்றாக படிக்க வைத்து, ஏழை பிள்ளைகள் படிப் பிற்கு உதவ வேண்டும்.

தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், வழி இல் லை. இனி எப்படி இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப் போது, “ஐ.சி.எம்., சீனியாரிட்டி’ மூலம் அரசாங்க பணிக்கு, சான்றித ழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். (பி.டி.அசிஸ்டென்ட்ஸ்) வரும் டிசம்பர் 30க்குள், பணி கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஐந்து மாதத்திற்கு பின், திடீரென்று, “கலப்பு திருமண’ உதவித் தொ கை வந்துள்ளது. நீ வந்தால் தான் தருவர் என்றான். நானும் சென்று வாங்கினேன்; 20 ஆயிரம் தந்தனர். 10 ஆயிரம் பாண்டாகவும், 10 ஆயிரம் செக்காகவும் என் பெயரில் வந்தது. “செக்’கை உடனே மாற் றி, பணத்தை அவனிடமே தந்து விட்டேன். 10 ஆயிரம் “பாண்ட்’ ஐந்து வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்றனர். அப்போதும், நா ன், அவனிடம் வேறு எதுவும் பேசவில்லை. இன்று வரை ஏதாவது பேசினாலும், சண்டை தான்.

இந்த விஷயம் எதுவும் என் வீட்டிற்கு தெரியாது. இப்போது இவனிட ம் இருந்து, நான் எப்படி மீள்வது? என் வீட்டிற்கு தெரியாமல், “விவா கரத்து’ வேண்டும் என்று கேட்டால் தர முடியாது என்கிறான். இவை யெல்லாம், என் வீட்டிற்கு தெரிந்தால், அப்பா தாங்க மாட்டார். அம் மா என்னை கொன்று விடுவார். வீட்டில் இல்லாத நிம்மதி, இவனிட ம் கிடைக்கும் என்று நம்பி, இவனை காதலித்தேன். ஆனால், இவ னோ, என்னை பயன்படுத்திவிட்டு, இப்போது மேலும், கொடுமைப்ப டுத்துகிறான்.

* எனக்கு, என் வீட்டிற்கு தெரியாமல் இவனிடம் இருந்து, “விவா கரத்து’ வாங்க என்ன வழி?

* “ஐ.சி.எம்., சீனியாரிட்டி’ மூலம் கிடைக்கவிருக்கும் வேலைக்கு, விவாகரத்தால், ஏதாவது பாதிப்பு வருமா?

* உதவித்தொகை பெற்றதில், மீதம் 10 ஆயிரம் பாண்ட், அவனிடம் உள்ளது. அது எனக்கு தேவையில்லை என்ற போதிலும், அதனால், ஏதாவது பிரச்னை வருமா?

என் நண்பர்கள் அனைவரும், தற்போது, எனக்காக சங்கடப்படுகின் றனர். விவாகரத்து கேட்டதற்கு, நான் பணிபுரியும் இடத்தில், என் னை பற்றி தவறாக கூறி விட்டான். நல்ல வேளையாக நான், பணி புரிந்தது வெளியூர் என்பதால், என் வீட்டாருக்கு, எதுவும் தெரியவில் லை. நான் அந்த வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன். மேலும், என்னை அசிங்கப்படுத்தப் போவதாக கூறுகிறான்; பயமாக உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. வெளியில் யாரிட மும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், இந்த விஷயம் வெளியில் தெரிவதற்கு முன், நான் சாவதை தவிர, வேறு வழியில்லை. அவனிடமிருந்து, மீண்டு வர வழி கூறுங்கள்.

குறிப்பு: “கல்யாண சான்றிதழ்’ என்னிடம் உள்ளது. அதை கேட்டு மிரட்டுகிறான்.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத அபலைப்பெண்.

அன்புள்ள மகளுக்கு,

உன் கடிதம் கிடைத்தது – விவரமறிந்தேன்.

பெற்ற மகள்களுக்கிடையே அழகை வைத்து, உடல் சுகவீனத்தை வைத்து பாரபட்சம் காட்டுவது, ஒரு நல்ல தாய்க்கு அழகல்ல. அந்த தவறை உன் தாய் தொடர்ந்து செய்துள்ளார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். சில காக்கைகளுக்கு, ஒரு குஞ்சு தகரக்குஞ் சாகவும், ஒரு குஞ்சு பித்தளைக் குஞ்சாகவும், ஒன்று பொன் குஞ்சா கவும் படுவது வேதனைக்குரிய விஷயம். சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டை காட்டி வினையை விதைக்கி ன்றனர். அறுவடை காலத்தில், வினையையே அறுப்பர்.

பெற்ற தாயின் உதாசீனமே, உன்னை மிக எளிதாக, காதல் வலையி ல் சிக்க வைத்து விட்டது. நட்பாய் ஆரம்பித்து, நண்பர்களின் கேலி பேச்சுகளால் காதலாய் பரிணமித்துவிட்டது. தாழ்த்தப்பட்ட இனத் தை சேர்ந்த ஒருவனை காதலிப்பது பெரிய குற்றமல்ல. ஆனால், காதலித்தவன் தீயவனாய், சுயநலவாதியாய், சந்தேகப்பிராணியாய் அமைவதே, ஒரு பெண்ணின் பெரிய துரதிருஷ்டம்.

காதலனை பதிவு திருமணம் செய்து, “அலைபாயுதே’ படத்தில் வரு வது போல, உன் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தாயா என்பதை உன் கடிதத்தில் தெளிவாக நீ குறிப்பிடவில்லை. உன் வீட்டிற்கு தெரி யாமல் மட்டுமே விவாகரத்து பெற வேண்டும் என்பது என்ன கட்டா யம்?

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த உன் காதலன், உன்னை பதிவு திரு மணம் செய்து கொண்டது, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடை க்கும், ஊக்கத்தொகை பெறலாம் என்கிற ஆசைகளுக்காகவே.

ஆண் துணை இல்லாமல், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என, எழுதியிருக்கிறாய். ஆனால், வழி இல்லை, இனி எப் படி இருக்கப் போகிறேன் என தெரியவில்லை என, அடுத்த இரு வாக் கியங்களில் எழுதியிருக்கிறாய். இது, முன்னுக்குபின் முரண். நீ குழப்பமான மனநிலையில் இருப்பதையே, இவ்வாக்கியங்கள் காட் டுகின்றன.

அவனுடனான ஆறேழு மாத தாம்பத்தியத்தில் நீ கர்ப்பம் தரிக்கவில் லை. உன் விருப்பத்துக்காகவோ, கணவனின் கட்டாயத்துக்காக வோ, தற்காலிக கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்தியிருக்க லாம்.

மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறாய். அதற்கான பதில்களை பார்ப்போம்.

*வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி என, கேட்டிருக் கிறாய். இப்படி ஒரு நிபந்தனையை உனக்கு நீயே விதித்திருப்பது உன் தரப்புக்கு ஒருபலவீன புள்ளி. தெரிந்தால் அப்பா, தாங்க மாட் டார், அம்மா கொன்று விடுவார் என்பதெல்லாம் தேவையற்ற எண் ணங்கள்.

*கலப்புத்திருமண பிரிவு மூப்பின் மூலம், உனக்கு அரசு வேலை கிடைக்க இருக்கிறது. இந்நேரத்தில், விவாகரத்து பெற்றால், வே லைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என, கேட்டிருக்கிறாய். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் விவாகரத்து விருப்பத்தை, மேலும், ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடு. காதல் கணவனின் கெட்ட குணங்களை திருத்தப் பார். இந்த திருமண பந்தத்தை அறுத்தெறிவதில் மிகவும் அவசரப்படுகிறாயோ என, தோன்றுகிறது. ஏ@தனும் தவறான வழி காட்டல் இருந்தால், அதை கத்தரித்துவிடு.

* ஐந்து வருடங்களுக்கு பின், மாற்றிக் கொள்ளக் கூடிய பத்தாயிரம் ரூபாய் பத்திரம் அவனிடம் இருப்பதால், உனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

* திருமண சான்றிதழை உன் கணவன் கேட்டு மிரட்டுவதாக கூறுகி றாய். வேண்டுமானால், ஒரு ஒளி அச்சு நகல் கொடு. என்ன செய்கி றான் என பார்ப்போம். சமுதாயத்திடமும், உன் பெற்றோரிடமும் உன் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள, உன் கணவனுடன் மனம் விட்டுப் பேசு. இருவருமே கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்க ள்.

உங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தால், அதை வெளிப் படை ஆக்கு. உன் கணவனின் ஆட்டம் குறையும்.

கலப்பு திருமணம் செய்து கொள்வோர், வெகு சீக்கிரம் பிரிந்து விடு வர் என்கிற பொய் புனைவை அழித்தொழிக்கவாவது, உன் திருமண த்தை காப்பாற்றப் பார். குட் லக் மகளே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: