செய்தி:
திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் ‘பூக்குழி திருவிழா’ வில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப் பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.
‘பூக்குழி’ என்று ‘நெருப்புக்குழி’யில் கடவுளை நம்பி இறங்குவதும், ஆபத்து நேரத்தில் கடவுளால் உதவ முடியாமல் தீயணைப்பு வீரர்கள் ஓடி வருவதும், அதுவும் செருப்புக் காலோடு இறங்கும் போது ‘ஆச்சாரம்’ எல்லாத்தையும் மறந்து, ‘காப்பாத்துங்கையா… காப்பாத் துங்கையா…’ என்று சுற்றி நிற்கும் மக்கள் அவர்களிடம் கோரும் போதும், ஆத்திர அவசரத்துல கடவுளும், சடங்குமுறைகளும் கூட காணாமல் போய்விடுவதை மக்கள் யோசித்து முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார்களா?
மூட நம்பிக்கையை சுட்டி காட்டுவதும் கூட ஒரு நற்பணி தான் …!
– செம்மொழி & வணக்கம் தாயகம் (முகநூல்)
தீயில் பொசுங்கவிருந்த தாயையும் சேயையும் காப்பாற்றிய தீயனைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!
யதேச்சையாக நடந்த இந்த விபத்தை காரணமாக வைத்துக்கொண் டு, அப்பெண்ணை பார்ப்போர் எல்லாம் துக்கம் விசாரிப்பதுபோல் அவளிடம், நீ ஏதோ பாவம் செய்திருக்கிறாய்! அதனால்தான் உன் னை அந்த அம்மனே தண்டித்துவிட்டாள்! இனிமேலாவது ஒழுங்கா க நடந்துகொள், நீ இதைசெய்யாதே! அங்கே நிற்காதே!. என்பன போன்ற பல வசைபாடுகளை பலர் சொல்லி அப்பெண்ணின் மனதை புண்படுத்துவார்களே!
– விதை2விருட்சம்
தீயனைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!
மூட நம்பிக்கையை சுட்டி காட்டுவதும் கூட ஒரு நற்பணி தான் …!
thanks to விதை2விருட்சம்