Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம்! “மௌனம்”

இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம், மௌனம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறு த்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயி ருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மன தோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திற ந்துமௌனமாய் அமர்ந்து வானத்தை உற் றுப் பார்.

 வானம் உனக்கு வசப்படும். கோடி வெண் புள்ளிகள் வெளிச்சக் கூட் டமாய் உன்னைத்தேடி வரும். மனதை இழுத்து நிறுத்தினால் கண்களைத் திறந் து கொண்டே இக்காட்சியைப் பார்க்க லாம். அந்த வெளிச்சப்பிழம்பு முக்கோ ண வடிவில் உருமாறி உயிர்துடிப்போடு உன்னோடு தொடர்பு கொள்ளும். இயற் கையே குருவாக மாறி உன்னை வழி நடத்தும். மௌனமாய் இருந்து பார். காற் றும் மரமும் செடி கொடிகளும் மலரும் மண்ணும் மழையும் சொல்லும் இரகசி யம் உன் காதுக்குள் கேட்கும். நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத்தேடி வரும். மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே. குழந்தை தாய் மடியில் ஆசை யாய்த் தவழ்ந்து அனுப விக்கும் சந்தோசத் தைப்போல் மழையோடு உறவாடிப்பார் மழை உன்னைத் தண்டிக் காது; உன் உச்சி முகர்ந்து உள்ளொளி பெருக்கி உன்னை வாழ்த்தி விட்டுப் போகும். கோபத்தை மட்டுமே அள்ளி த்தெளிப் பவரி டம் மௌனத்தை அன்பளிப் பாய் கொடுத் துவிடு. அவரது கோபம்கூட நிர்கதியாகிப் போகும். மௌனத்தை தாய் மொழியாய்க் கொண்டு மகாத்மாவாக மாறி விடச் சொல் லவில்லை. மௌனம் உன்னை மனிதனாக மாற்றும். மனிதம் உன்னை மகா த்மாவாக மாற்றும். உன்னை என்று நான் சொன்ன தெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எனக்கும் தான். நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகி ர்ந்து கொள்கிறேன்.
– suriyavili

One Comment

  • நான் கற்றதும் பெற்றதும் தேசம் தாண்டியும் தாய் மண்ணில் பறக்க விட்டமைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: