Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்

பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற கலைகளை ஆடமாட்டோம் என்று கூறுவதுதான் வெட்கக்கேடானது என்று சம் ம‍ட்டியால் அடித்தாற்போல் உரைத்தார்.

ந‌மது பழம்பெரும் தமிழர்கள் நமக்காக விட்டுச்சென்ற, (நம்மால் அழிந்துகொண்டிருக்கும்) ஆடற்கலைகளை விதை2விருட்சம் இணையம் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

01) அம்மன் கூத்து
02) அன்னக்கொடி விழாக்கூத்து
03) அனுமன் ஆட்டம்
04) ஆலி ஆட்டம்
05) இருளர் இனமக்களின் ஆட்டம்
06) இலாவணி
07) எக்காளக் கூத்து
08) ஒயிலாட்டம்
09) கரகாட்டம்
10) கரடியாட்டம்
11) கழியலாட்டம்
12) கணியான் கூத்து
13) காவடியாட்டம்
14) குறவன் குறத்தி ஆட்டம்
15) குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள்
16) கோணங்கியாட்டம்
17) கொக்கலிக்கட்டை ஆட்டம்
18) கோலாட்டம்
19) கும்மியாட்டம்
20) சக்கை குச்சி ஆட்டம்
21) சக்கையாட்டம்
22) சலங்கையாட்டம்
23) சிலம்பாட்டம்
24) சேவயாட்டம்
25) துடும்பாட்டம்
26) தெருக்கூத்து
27) தேவராட்டம்
28) பரதநாட்டியம்
29) பறைமேளக் கூத்து
30) பறையாட்டம்
31) பாவைக்கூத்து
32) பாம்பாட்டம்
33) பெரியமேளம்
34) புலி ஆட்டம்
35) பொம்மலாட்டம்
36) பொய்க்கால் குதிரை ஆட்டம்
37) மகுடிக் கூத்து
38) மயில் ஆட்டம்
39) மரக்காலாட்டம்
40) மாடாட்டம்
41) ராஜா ராணி ஆட்டம்
42) ஜிக்காட்டம்

– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: