Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காய்கறி, பழங்களுக்கு கூட காலாவதி ஆகும் தேதி உண்டு!

ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

‘இ ஃபார்ம்’ வெங்கட் – வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா சீசன்லயும், எல்லா பழங் களும் கிடைக்குது. வெளிநாட்டுலேருந்து இறக்குமதி பண்றாங்க. எல்லாம் கப்பல்ல வருது. கிட்டத்தட்ட ஒன்றரை, ரெண்டு மாசம் கப்பல்லயே இருக்கு. இங்க வந்ததும், குளிரூட்டப் பட்ட பெட்டிகள்ல வச்சு பத்திரப்படுத்தறாங்க.

இப்படிப் பல மாசங்களான பிறகுதான் நாம அதை வாங்கறோம். அப் பவும் அது பார்க்கறதுக்குப் பளபளப்பா, அழகா இருக்கக் காரணம், அதுக்கு மேல தடவப்படற மெழுகு கோட்டிங். வீட்டுக்கு வாங்கிட்டு வந்து வெட்டினா, உள்பக்கம் அழுகியிருக்கும். அந்த மாதிரிப் பழங்க ளோட அழுகல், உள்ளேயிருந்து தொடங்கும். அடுத்தது மாம்பழம், பப்பாளி மாதிரியான சிலதுல, கார்பைடு கல்போட்டுப்பழுக்க வைக் கிறாங்க. எத்திலீன் வாயுவை ஸ்பிரே பண்ணியும், எத்திலீன் கரை சல்ல முக்கியெடுத்தும் பழுக்க வைக்கிறாங்க. இதனால பழம் ஒரே சீரான கலர்ல, பார்வைக்கு அழகா தெரியுது. திராட்சை மாதிரியான சிலதுக்கு எடையை அதிகரிக்கச் செய்யறதுக்கான கெமிக்கல் உபயோகிக்கிறாங்க.

பழம் அழுக ஆரம்பிச்சா, அதுல உள்ள எத்திலீன் வாயு வெளியேற ஆரம்பிக்கும். அது சாதாரண வயிற்றுக்கடுப்புல தொடங்கி, உயிரை யை பறிக்கிற அளவுக்கு ஆபத்தானது. விளையாட்டு வீரர்கள், தற் காலிக உற்சாகத்துக்கு ஹார்மோன் மருந்து எடுத்துக்கிற மாதிரி தான் இதுவும்…

ஜாம், ஜெல்லி மாதிரியான அயிட்டங்களுக்கு எக்ஸ்பைரி தேதி போ டலாம். ஆனா காய்கறி, பழங்களுக்குப் போட முடியுமா? பறிக்கிற காய்கறி, பழங்களை அப்படியே இயற்கையா விட்டாலே பழுக்கும். அரிசிக்குள்ள போட்டு வைக்கிறது, வைக்கோல் வச்சுப் பழுக்க வைக்கிறதுன்னு அந்தக் காலத்து முறைகள்தான் பெஸ்ட்.

காய்கறிகளை ஃப்ரெஷ்ஷா வாங்கி, உடனே உபயோகிக்கணும். அழு கின பகுதியை அப்புறப்படுத்திட்டு, நல்ல பகுதியை உபயோகிக்கிறது ரொம்பவே தப்பு. எந்தக் காய்கறி வாங்கினாலும், வெந்நீர்ல அலசி ட்டு உபயோகிக்கணும். கீரையா இருந்தா, அதுல அடிக்கிற யூரியா வாசனை போக, பல முறை கழுவிட்டே சமைக்கணும். கூடிய வரை அந்தந்த சீசன்ல கிடைக்கிற காய்கறி, பழங்களை உபயோகிக்கறது ஆரோக்கியமானது.’’

பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் வருகிற உணவுப் பண்டங்க ளை வாங்கும்போது, அவற்றை உபயோகிப்பதில் அதிக பட்ச கவனம் தேவை என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

‘‘இட்லி மாவை ஃப்ரிட்ஜ்ல வச்சாலுமே, அது எப்படிப் புளிச்சுப் போகு தோ, அந்த மாதிரிதான் எல்லாம். கொழுப்பு சேர்த்த உணவுகளா இரு ந்தா, எக்ஸ்பைரி தேதி முடிஞ்சதும், அதுல நச்சுத்தன்மை உருவாகு ம். அது வயிற்று எரிச்சல், செரிமானமின்மையை ஏற்படுத்தும்.

ஊறுகாய்ல உப்பும் எண்ணெயும் சேர்த்துப் பண்ணியிருந்தாலும், கெட்டுப் போகாமலிருக்க, கெமிக்கல் சேர்ப்பாங்க. அதனால எக்ஸ் பைரி தேதிக்கு முன்னாடியே தீர்த்துடணும். முடியாட்டா, தூற எரிஞ் சிடணும். ஜூஸ், ஜாம் வகையறா எக்ஸ்பைரி ஆயிட்டா, மேலே பூஞ் சைக்காளான் மாதிரி படிவம் வரும். அதை மட்டும் சுரண்டி எடுத்துட் டு, மிச்சத்தை உபயோகிக்கவே கூடாது. அந்தப் பூஞ்சையோட பாதிப் பு, அடி வரைக்கும் போயிருக்கும். அதை சாப்பிடறதால வயிற்றுப் போக்கு வரும்.

மாவுப்பொருள்கள் கட்டி தட்டிப் போகும். பிரெட்ல பூஞ்சைக்காளான் பிடிக்கும். ஸ்குவாஷ், ஜூஸ்ல கலரும் சுவையும் மாறி, கசப்பு தட்டு ம். எண்ணெய் போட்டுத் தயாரிக்கிற பொருள்கள் நுரைக்கும். இது எல்லாம் காலாவதிக்கான அடையாளங்கள்னு உணர்ந்து, உபயோ கிக்காம இருக்கிறது நல்லது. பொடி, மாவு வகைகளை வீட்லயே நல்லா காய வச்சு, அரைச்சு, காற்று புகாத டப்பாக்கள்ல நிரப்பி வை ச்சு, 3 மாதங்களுக்குள்ள உபயோகிச்சிடணும். இன்னும் இப்படி எல் லாப் பொருள்களையுமே அதுல குறிப்பிடப்பட்டிருக்கிற எக்ஸ்பைரி தேதியை விட சீக்கிரமே உபயோகிக்கிறதுதான் பாதுகாப்பானது’’ என்கிறார் அம்பிகா சேகர்.

நன்றி – தினகரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: