‘‘டாக்டர் எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டியில எட்டாவது மாடியி ல என் ரூம். பேராசிரியரா சேர்ந்த நாள்ல இருந்து, ஓய்வுபெற்று கௌரவப் பேராசிரியரா இருக்கிற இன்னைக்கு வரை ஒருமுறை கூட லிப்ட் பயன் படுத்தினதில்லே. நடந்துதான் படியேறுவேன். ஒரு நாள் லிப்ட் ஆபரேட்டர், ‘ஏன் சார் நடக்கிறீங்க… வாங்க லிப்ட்ல போகலாம்’ன்னாரு. ‘எதுக்கு’ன்னு கேட்டேன். ‘சீக்கிரம் மேல போக லாம் சார்’னாரு. ‘நான் இன்னுங் கொஞ்ச காலம் இருந்துட்டுப் போறேனே’ன்னு சொல்லிட்டு நடந்தேன்!’’
நடப்பதன் முக்கியத்துவத்தை நயமாகச் சொல்லிவிட்டு குழந்தை யைப் போல சிரிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம். உலகமறிந்த இதய மருத்துவர். எம்.ஜி.ஆர், கலைஞர் என பல தலைவர்களின் இதயங்க ளோடு இணக்கம் கொண்டவர்!
எந்நேரமும் முகத்தில் ஒட்டியிருக்கிற சிரிப்பு முதுமைக்குத் திரையி ட்டு விடுகிறது. கூட இருப்பவர்களுக்கும் வயது குறைந்து விடுகிற து.
‘‘மருத்துவத்துறைக்கு வந்து 43 வருஷமாயிருச்சு. திரும்பிப் பாத்தா 4 வருஷம் மாதிரியிருக்கு. அப்பா டாக்டர் வெங்கடாசலம் மதுரையில பெரிய டாக்டர். இயல்பாவே எனக்கு மருத்துவத்துறைமேல ஈடுபாடு. இதயம் தொடர்பான மருத்துவம்தான் படிக்கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். மதுரை மருத்துவக் கல்லூரியில 66ல எம்.பி.பி. எஸ். மாநில அளவில முதல் ரேங்க் மாணவன் நான். அடுத்து பொது மருத்துவத்துல எம்.டி. சேந்தேன்.
இதயம் தொடர்பா படிக்கணும்கிற ஆசை உள்ளே கனன்றுகிட்டே இருந்துச்சு. என் ஆசைக்குத் தகுந்தமாதிரி மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ‘போஸ்ட் டாக்டரேட் இன் கார்டியாலஜி’ன்னு ஒரு படிப்பு தொடங்கினாங்க. அதில முதல் மாணவனா சேந்துட்டேன். ரேங்க்ல யும் நான்தான் முதல். இந்தியாவிலயே 28 வயசுல அந்தப் படிப்பை முடிச்சது நான் மட்டும்தான்.
பல தனியார் மருத்துவமனைகள்ல இருந்து அழைப்பு வந்துச்சு. ஆனா, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்லயே வேலைக்குச் சேந்தேன். இன்னைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற பல மருத்துவக் கல்லூ ரிகளோட துணைவேந்தர்கள், டீன்கள், இயக்குனர்கள் என் மாணவ ர்கள்தான்’’-மிக இயல்பாக சொல்லிச்சிரிக்கிற சொக்கலிங்கம், இதய நோய் பற்றிய விழிப்புணர்வுப் பணிகளில் முழுமூச்சாக இயங் கி வருகிறார்.
உலக நாடுகள் முழுதும் பயணிக்கிறார். தமிழகத்தில் எளிய மக்கள் மத்தியில் செயலாற்றுகிறார். இலக்கிய அமைப்புகள் முதல் குடியி ருப்போர் சங்கங்கள் வரை அழைத்துப் பேசச்செய்கின்றன. நகைச் சுவை தொனிக்கும் இயல்புத் தமிழால் அனைவரையும் கட்டிப்போ ட்டு விடுகிறார்.
‘‘சாலமன் பாப்பையா, சுகிசிவம் மாதிரி நண்பர்கள், ‘என்ன மருத்து வரே… எங்க வேலையைக் கெடுத்திடாதீங்க’ன்னு கிண்டல் பண்ணு வாங்க. இதயநோயைப் பத்தி நம்ம நாட்டில ஏகப்பட்ட மூடநம்பிக் கை கள் இருக்கு. எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாதுன்னு தெரியலே. அதையெல்லாம் புரியவைக்கணும்னா அவங்ககூட உக் காந்து பேசணும்.
நம்ம நாட்டில 1 மணி நேரத்தில 90 பேர் மாரடைப்பு வந்து சாகிறா ங்க. உலகத்திலேயே நாமதான் முதலிடம். காரணம், நம் வாழ்க்கை முறை. நல்ல வருமானம் கிடைக்குது; வசதிகள் இருக்கு… இருந்தா லும் மன அமைதி மட்டும் கிடைக்கலே. அதுதான் எல்லா நோய்களு க்கும் காரணம். உடலியல் காரணங்களைவிட உளவியல் காரணங் கள்தான் இதயநோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமா இரு க்கு. உணர்ச்சிவசப்படாம எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்கி ற நிலை வந்தா உடம்பை எந்த நோயும் நெருங்காது’’ என்கிறார் சொக்கலிங்கம்.
‘‘எது மகிழ்ச்சின்னு கேட்டா வெற்றிதான் மகிழ்ச்சின்னு சொல்வாங் க. ஆனா மகிழ்ச்சியா இருக்கிறதுதான் வெற்றி. நல்லா மனசு விட்டு சிரிக்கணும். எல்லாத்தையும் கை தட்டி ரசிக்கணும். கை தட்டுறதே ஒரு சிகிச்சைதான். கை தட்டும்போது அக்குபிரஷர் ட்ரீட் மென்ட் நட க்குது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குது’’ என்கிற சொக்கலிங்கம், ‘‘நம் ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லி மீட்டர் குறுக் களவு கொண்டவை. டென்ஷன் ஆகிறப்போ அட்ரினலின், கார்ட்டி சால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்கள்ல அடைப் பை ஏற்படுத்திடும்.
இந்த சுரப்பை கட்டுப்படுத்துற சக்தி இயல்பாவே நம் உடல்ல இருக் கு. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல் லாத நல்ல வாழ்க்கைமுறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். 99 சதவீ தம் அடைப்பு இருந்தாக்கூட தானாகரைஞ்சிடும். இது கற்பனையில்லை … மருத்துவ உண்மை’’ என்று உறுதியாகச் சொல்கிறார் சொக்க லிங்கம்.
நன்றி – தினகரன்