Friday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதர்மபுரி . . .

டிசம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “சூடான” தலையங்கம் 

தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த‍ சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் க‍த்தக்க‍து. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்க‍ம் கொடுத்த‍ இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த‍ நாம் இன்று சாதி வெறியின் உச்ச‍த்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது.

பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ள‍ந்தியாக கூடி மகிழ்ந்த எம்ம‍க்க‍ளை வெட்ட‍ரிவாளுடனும் வீச்ச‍ரிவாளுடனும் வேட்டை நாய் களாய் மாற்றியது யார்?

கர்ம வீரரையும், தேவர் ஐயாவையும், கட்ட‍பொம்மனையும், வ.உ.சி யையும், தேசபக்தியாளர்களாக தரிசித்த‍ நாம் இன்று அவர் களை சாதித் தலைவர்களாக நம் சந்ததியருக்கு அடையாளம் காட்ட‍ வே ண்டிய அவலநிலை ஏன் வந்தது? சாதிக்க‍த் துடிக்கி ன்ற என் தேசத்து இளைஞர் களை சாதி தீக்கு இரையாக் கியது எது?

வாக்கு வங்கி அரசியலுக்காய், சலுகைகளைக் காட்டி சாதிக்குள் மற்றொரு சாதியை புதிதாய் உரு வாக்கும் எல்லாக் கட்சித் தலைவர் களும் முக்கிய காரணமென் றால், சலுகைகளுக்காக தன்னையே இழக்க‍ முன்வருகின்ற சுய நல மிக்க‍ நாமும் கூடுதல் காரணம் தானே!

ந்த சாதியினர்தான் என்ற மாறி மாறி அறிக்கைகள் விட்டு ஊரை உசுப்பி விடுகிறவ ர்களுக்கு . . ஊருக்குள் சென்று சமரசம் செய்ய‍த் தெரியாதா என்ன‍? ஆனால் செய்ய‍ மாட்டா ர்கள். காரணம் ஊர் இரண்டு பட்டால்தானே! இவர்கள் வீட்டி ல் உலை கொதிக்க‍ முடியும். உருப்படுமா இந்த தேசம்? அப்ப‍ டியானால், சாதியே உனக்கு சாவு வராதா? என்ற கேள்விக்கு என்ன‍தான் விடை?

– சாதிக்கலவரத்தைத் தூண்டுகிறவர்கள். துணை போகின்றவர்கள், எவராயிருந்தாலும், எக்க‍ட்சியினராய் இருந்தாலும், அவர்கள் வெளியே வரமுடியாத சட்ட‍த்தின் கீழ் உள்ளே தள்ள‍ வேண்டும்.

– சாதிக்கட்சிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க‍ வேண்டும்.

– தேசியக் கட்சிகளும் மாநிலத்தின் பெரிய கட்சிகளும் சாதிக் கட்சி களோடு கூட்ட‍ணி வைப்ப‍தை அறவே தவிர்க்க‍ வேண்டும்.

-சாதிக்கட்சிக்கானப்பேரணிகள், மாநா டுகள் நடத்துவதற்கு வரைமுறை விதிக் க‍ வேண்டும்.

இவையெல்லாம் நடைபெற்றால், தமிழக பூமி தர்மபூமியாக மட்டு மல்ல‍. . . சமதர்ம பூமியாகவும் செழிக்கும். . . ஒளிரும். . .

 இந்த வைர வரிகளின் உரிமையாளர் 
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

(ப‌டங்கள்: கூகுள்)

One Comment

Leave a Reply