இந்தியாவிலுள்ள காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் முதலிடத் தில் இருக்கிறது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டபோதிலு ம் மார்க்கெட் ஷேரில் 75 சதவீத இடத்தை தக்கவைத்துக் கொண் டிருக்கிறது எல்.ஐ.சி. எனவே, எல். ஐ.சி.யில் வேலை பார்ப்பது என்பது இந்திய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. எல்.ஐ. சி.யில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? எல்.ஐ.சி. ஏஜெண் ட்டாக என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து சென்னை பாண்டி பஜார் எல்.ஐ.சி. கிளை வளர்ச்சி அதிகாரி ஜி.பி.பிரகாஷ் நமக்
கு அளித்த பேட்டி: எல்.ஐ.சி.யில் இரண்டு விதமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒன்று, கிளரிக்கல் ஒர்க் எனப்படும் அலுவலகப் பணி. மற்றொ ன்று, வளர்ச்சி அதிகாரி மற்றும் ஏஜெண் ட்டுகளுக்கான பணி. கிளரிக்கல் பணியில் சேர, 21 வயதுக்கு மேற்பட் டவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற வர்களாக இருக்க வேண்டு ம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு ஆட்களை எடுக்க, எல்.ஐ.சி. விளம்பரங் களை வெளியிடும். அதைப் பார்த் து விண்ண ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. இப்பணியை Clause 3 பணி என்றும் சொல்வார்கள். அடுத்து, Clause 1 பணிக்கு அலுவலக உதவி நிர்வாகிகள் (Assistant Administrative Officers) தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணியில் சேர 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், பட்டதாரிகளாகவும் இருக்க வே ண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வில் சிற ப்பிடம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.40 ஆயிரம்” என்று விவரித்த பிரகாஷ், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும்
ஏஜெண்ட் டுகளாக என்னென்ன தகுதிகள் தேவை என்பது பற்றி விள க்கமளித் தார். Clause 2 பணியில் எங்களைப் போ ன்ற வளர்ச்சி அதிகாரிகள் (Develop -ment) இடம்பெறுகிறார்கள். ஏதேனு ம் ஒரு துறையில் பட்டம் பெற்றவர் களாக இருக்க வேண்டும். எம்.பி.ஏ. படித்திருந்தால் முன்னுரிமை அளிக் கப்படும். 21 வயதுக்கு மேற்பட்டவர்க ளாக இருக்க வேண்டும். அடிப்படை ச் சம்பளம் – மாதம் ரூ.20 ஆயிரம். பணியில் சேர்ந்த முதல் ஆறு மாத காலம் பயிற்சிக் காலம். ஃபீல்ட் ஒர்க் எனப்படும் களப் பணிகளை இந்த அதிகாரிகள் அதிகமாக மேற்கொள்வார்கள். எல்.ஐ.சி. ஏஜெண்
ட்டுகளைத் தேர்ந்தெடுப்பது இவர்களது முக்கியப்பணி. இவர்களுக்குக்கீழ் உள்ள ஏஜெண்ட்டுகள் எந்த அளவுக்கு பிரீமியம் வசூலித்தி ருக்கிறார்கள், எத்தனை பாலிசிகளை பிடித்துக் கொடு த்திருக்கிறார்கள் என்பதைப் பொருத் து இவர்களுக்கு இன்சன்டிவ் போனஸ் வழ ங்கப்படும். ஏஜெண்ட் டுகளை ஊக்குவிக்கும் விதத்தில் வளர்ச்சி அதி காரிகள், புதிய புதிய வணிகப் போட்டிகளை நடத்துகிறார்கள். ஏஜெ ண்ட்டுகளுக்கு மனச் சோர்வு ஏற்படாத வகையில் உற்சாகப்படுத்து கிறார்கள். முகவ ர்களாக (ஏஜெண்ட்டுகள்) என்ன செய்ய வேண்டும்?: நகர்ப்புற
ங்களில் எல்.ஐ.சி. ஏஜெண்ட்டுகளாக விரு ம்புபவர்கள், குறைந்த பட்சம் பிளஸ் டூ படி த்தவர்களாக இருக்க வேண்டும். இதுவே கிராம ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 10-ஆம் வகுப்பு படித்திரு க்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம் பியவர்களாக இருக்க வேண்டும். அதிக பட்ச வயதுவரம்பு ஏதுமில்லை. இவர்களு க்கு 50 மணி நேரம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு ஆன் லைன் முறையில் தேர்வு வைக்கப்படும். அதில் தேர்ச்சி பெற்றால், ஹைதராபாத்திலுள்ள இன்ஸ்யூரன்ஸ் ரெகுலேட்டரி டெவல ப்மெண்ட் அத்தாரிட்டி (ஐ.ஆர்.டி.ஏ.) நிறுவனம் அவர்களுக்கு லைசெ ன்ஸ் கொடுக்கும். ஏஜெண்ட்டுகளாகச் சேர்ந்த ஓராண்டு காலத் துக்குள் அவர்கள் 12
பாலிசி தாரர்களைச் சேர்க்கவேண்டும். ஆண் டிற்கு ரூ.1 லட்சம் வரை பிரீமியம் சம்பாதித் துக் கொடுத்திரு க்க வேண்டும். அப்போதுதா ன் முகவராக நீடிக்க முடியும். இல்லையெ ன்றால் ஏஜெ ண்ட் உரிமம் ரத்து செய்யப்படும். ஏஜெண்ட் டுகள் பிடித்துக் கொடுக்கும் காப்பீ ட்டுத் திட்டங்களுக்கேற்ப அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிற து. ஏஜெண்ட்டுகளின் ஐந்து ஆண்டு செயல்பாட்டிற்குப் பிறகு, அவர்களு
க்கு கிளப் மெம்பர்ஷிப் கிடைக்கும். அதாவ து, கிளைமேலாளர் மன்றம், கோட்ட மேலா ளர் மன்றம், மண்டல மேலாளர் மன்றம், சேர் மன் மன்றம், கார்ப்பரேட் மன்றம் போன்றவ ற்றில் உறுப்பினராக முடியும். இவர்களுக்கு விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு போன்றவை வழங்க ப்படும். குறைந்த வட்டியில் வீடு வாங்கக் கடன், கார் வாங்க கடன் கொடுக்கப் படும். டூவீலர் வாங்க வட்டியில்லாமல் கடன் வழங்கப் படும். பண்டிகை முன்பணம், குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடந்தால் முன்பணம் போன்றவை வழங்கப்படும். உலகளவில் அமெரிக்காவில் நடக்கும் Million Dollar Round Table (
MDRT) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எல்.ஐ.சி. நிறுவனமே இவர்களுக்கு முன் பணம் கொடுக்கும். ஏஜெண்ட்டுகளை உற்சாக ப்படுத்த அவ்வப் போது பல வணிகப் போட்டிகள் நடத்தப் பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஆர் வமும், திறமையும் மிக்கவர்களுக்கு ஏற்ற வேலை இது. பகுதி நேர எல். ஐ.சி. ஏஜென்ட்டாக இருந்து, கிளை மேலாளர் அளவுக்கு சம்பாதித்த ஏஜெண்ட்டுகள் எத்தனையோ பேர் உண்டு. ஏஜெண்ட்டுகளாகப் பணியில் சேர்ந்து, தங்கள் திறமையால் முன் னேறிய எத்தனையோ பேர் வளர்ச்சி அதிகாரி, உதவி கிளை மேலாள ர், கிளை மேலாளர், வணிக மேலாளர், முதுநிலை கோட்ட மேலாள ர்,
மண்டல மேலாளர் எனப் பல பதவி உயர்வுகளைப் பெறவும் வாய் ப்பு உள்ளது. எனக்குத் தெரிந்து பகுதி நேரப் பணியாக எல்.ஐ.சி. ஏஜெண்ட்டா க இருந்த ஒருவர், ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வரை சம்பாதித்தார் என் றால் பார்த்துக்கொள்ளுங் கள்!” என்று ஆச்சரியப்படுத்தினா ர் பிரகாஷ். உழைப்பும், திறமையும், நன்றாகப் பேசும் ஆற்றலும் கொண்டவர்க ள் எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக விண்ணப்பிக்கலாம். சொந்தமாக பிஸி
னஸ் செய்ய விரும்பும் இளைஞர்கள், இல்லத்தரசி கள், பகுதி நேர வேலை பார்க்க விரும்பு பவர்கள், பணிக்குப் பின் ஓய்வு பெற்ற நடுத்தர வயதினர் என்று அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற பணி – எல்.ஐ.சி. ஏஜெண்ட். வளர்ச்சி அதிகாரி பணி
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி.) பயிற்சி வளர்ச்சி அதிகாரி பணியிடங்களில் 679 காலிப் பணியிட ங்கள் உள்ளன. பட்டப் படிப்பு படித்தவர் கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மும் பையிலுள்ள இன்ஸ்யூரன்ஸ் இன்ஸ்டிட் யூட் ஆஃப் இந்தியாவில் ஃபெல்லோவா க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி வளர்ச்சி அதிகாரி களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோர், எல்.ஐ. சி. ஏஜெண்ட்டுகளை நிய மிக்க வேண்டும், அதிகபட்ச பாலிசிகளை விற்கும் வகையில் அவர் களுக்கு பயி ற்சி அளிக்க வேண்டும். பாலிசிதாரர்க ளைப் பிடித்தபிறகு, வாடிக்கையாளர்க ளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களது குறை களைக்களைய வேண்டும். தங்களு க்கென ஒதுக்கப்ப ட்ட பகுதிக்குச் சென்று ஆயுள் காப்பீ ட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காகப் பணி யாற்ற வேண்டு ம். பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளாகத் தேர் ந்தெடுக்கப்படுவோருக்கு உத வித்தொ கையாக மாதம் ரூ.19,165 வழங்கப்படும். புரபேஷனரி டெவல ப்மெண்ட் அதிகாரியாக நியமிக்கப்ப ட்டால், அடிப்படைச் சம்பளமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.11,535 வழங்கப்படும். இதர சலுகைகள் தனி. இப்பணியில் சேருபவர் களுக்கு மருத்துவப் பயன்கள், தனிநபர் விபத் துக்காப்பீட்டுப் பயன் கள், வாகனங்கள் வாங்குவதற்கான முன்பண
ம் போன்ற இதர சலுகைகளும் உள்ளன. விண்ணப்பங் களை ஆன் லைன் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ண ப்பக் கட்டணமாக ரூ.500-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் ஏதே னும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும். எல்.ஐ .சி.யின் பல்வேறு அலுவலகங்களில் அப்ரண்டைஸ் டெவலப்மெண் ட் ஆபீசர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 22.12.2012 விவரங்களுக்கு: www.licindia.in, www.licindia.in/careers.htm.
– muruganandam (insurance)