கூட்டுக்குடும்பம் என்பது இன்றைக்கு அறிதாகி வருகிறது. இதற்கு காரணம் நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற ஈகோதான். ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்ளுதலு ம், விட்டுக்கொடுத்தலும் இருந்தால் இல்லறத்தில் ஒற்றுமை தழைத்தோ ங்கும் என்கின்றனர் முன் னோர்கள். கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் ஒரு விசயம் ஒருவ ரைப் பற்றி மற்றொருவரிடம் குறை கூறுவது.
எனவே கூறுவதைவிட நடந்த தவ றை உரியவரிடமே எடுத்துக் கூறலா ம். சின்ன விசயங்களுக்கு கூட பாராட்டுங்கள் உங்கள்மேல் மதிப்பு அதிகரிக்கும். அதேபோல் எந்த விசயத்திற்கும் நன்றி தெரிவியுங் கள். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் கூட்டுக் குடும்பத்தில் பொது வாக நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
உணர்வுகளை மதிக்கவும், மரி யாதை கொடுக்கவும் புகழவும் கற் றுக் கொள்ளுங்கள். பிறர் குறைக ளை அலட்சியப்படுத்துங்கள். இவ ர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீ ர்கள். ஒரு பொழுதாவது ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள். தம்ப தியர் ஒற்றுமை கூட்டுக்குடும்பத் தில் தம்பதியர்கள் கலந்து பேச அதிக நேரம் கிடைக்காதுதான்.
யோசித்து பேசுங்கள் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கு முன்னர் இருவரும் கலந்து ஆலோசியுங்கள். வார்த்தைகளை பேசிவிட்டு யோசிப்பதை விட எந்த ஒரு வார்த்தையும் பேசும்முன் யோசித்து பேசுங்கள். சின்னச் சின்ன விசயங்க ளுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தேவையற்றது.
எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத் துவது தம்பதியரிடையே பிரச்சினை கள் ஏற்படுதை தவிர்க்கும். தெரியா மல் வார்த்தைகள் விழுந்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்க தயங்கவேண்டாம். நாம் பேசும் விசயம் எத ற்காக என்பதை இருவருமே உணர்ந்து கொண்டால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலா ம்.
சண்டை எனில் தனிமையில் சண்டை போடுங்கள். தவறு உங்களுடையது எனில் தயங்கா மல் காலில் விழுங்கள். தம்பதிய ரிடையே மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் ஒற்றுமையை அதிகரிக்கும்.