Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (09/12): தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விடு

அன்புள்ள அம்மாவுக்கு—

வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனு க்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும் பம், தாய் மாமனின் குடும்பத் தையும் மீறி, என் தோழி குடும் பத்தின் உதவியுடன் திரு மணம் செய்து கொண் டோம்.

தற்போது, அரசு அலுவலகத்தி ல் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இற ந்து போனார். அப்பா என்பதை விட, அவர் என் நண்பர். என் காதலை முதலில் சொன்னது, என் அப்பாவிடம் தான். சிரித்த முகத் தோடு ஏற்றுக்கொண்டு, “உனக்கு இன்னும் வயது வரவில்லை. அக்காவிற்கு திருமணம் முடிந்ததும், தாய் மாமனிடம் பேசி, உன் திரு மணத்தை முடித்து, வைக்கிறேன்…’ என்று ஆறுதல் கூறினார்.

ஆனால், எதிர்பாராத விதமாக, என் அப்பா என்னை தவிக்க விட்டுச் சென்றார். யாருமற்ற அநாதையாக நான் தவித்த வேளையில், என் கணவர், அந்த அன்பிற்கு நிகராக என்னை தாங்கினார். திருமணம் முடிந்தது. என் அம்மா, என்னை திட்டி, பின் ஏற்றுக் கொண்டார். என் அண்ணனும், தாய் மாமன் குடும்பத்தாரும், என் மகன் பிறக்கும் வரை, கோபமாக இருந்தனர். அதன் பின், எல்லாரும் கண்ணீருடன் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். அன்றிலிருந்து, தொலைந்தது என் சந்தோஷம், நிம்மதி.

என் மாமனார், “எங்களால் உங்களையும், பேரப் பிள்ளைகளையும் தனியே விட்டுவிட்டு இருக்க முடியவில்லை. இனியும் தனிக்குடித் தனம் வேண்டாம். எங்களோடு சேர்ந்து வந்து விடுங்கள்…’ என்றார். அன்பிற்காக ஏங்கிய நானும், என் கணவரும், உண்மை என்று நம்பி, ஒன்றாக கூட்டு குடும்பம் நடத்த ஆரம்பித்தோம். மூன்றாம் நாளே, என் மாமனார் என்னை பார்த்து, விரலை சுட்டி கூப்பிட்டு, “ஒன்றரை வருடமாக என்னை பிரித்து, என் மகனை கூட்டிச் சென்றாயே, அதற் கு எல்லாம் சேர்த்து, நீ சாகும் வரை, என்ன பாடுபடுத்தப் போகிறோ ம் பார். என் வீட்டிற்கு வந்த சனியனே…’ என்றார்.

அம்மா… இந்த வார்த்தையை சொல்லி, நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாதம் 30 நாட்களில், 20 நாட்கள் கண்ணீருடன் படுக்கைக்கு செல்வேன். என் கண்ணீரை துடைக்க கூட என் காதல் கணவருக்கு பயம். ஏனென்றால், மாமனாருக்கு தெரிந்தால், அதற்கு ம் ஒரு சண்டை போடுவார். என்னை எதிரியாக நினைக்கும் என் மாமனார், மாமியார், திருமணம் ஆகாத ஒரு நாத்தனார் (வயது 28). நான்கு முறை ரோட்டில் வைத்து, அடியும் வாங்கி விட்டேன். யாரும் எனக்கு ஆதரவாக வந்தால், அவர்களுக்கும், எனக்கும் தொடர்பு போல் பேசி விடுவர். காலை ஆறு மணியிலிருந்து, இரவு 12 மணி வரை, மாடு போல் உழைக்கிறேன்.

என் சம்பளத்தை முழுவதும் கொடுத்து விட்டு, 200 ரூபாய் மட்டு@ம மாத செலவுக்காக என் மாமனார் கொடுப்பார். மற்ற அனைத்துக்கு ம், என் அம்மாவிடம் தான் பெற்றுக் கொள்கிறேன். இல்லையென் றால், எனக்கு வேலைக்கு செல்ல அனுமதி இல்லை.

இதனால், அம்மாவிற்கும், அண்ணனுக்கும் சண்டை. நான் செய்த இந்த அவசர காரியத்தால், என் அம்மாவும், அக்காவும் தினமும் வரு ந்துகின்றனர். என் அம்மாவுக்கு, என்னை நினைத்தே நெஞ்சுவலி வந்து விட்டது.

என் அம்மாவையும் இழந்தால், என்னால் தாங்க உடம்பிலும், மனதி லும் தெம்பில்லை. இதனால், என் அண்ணனும் என்னோடு பேசுவதி ல்லை. 10 மணி முதல் 6 மணி வரை, அரசு அலுவலகத்தில் கணினி துறையில் பணியாற்றிவிட்டு, 6:30 மணியிலிருந்து, இரவு 9:00 மணி வரை, 15 பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து, 9 மணிக்கு பின், சமையல் செய்து, அனைவரும் சாப்பிட்டு படுக்க, 12 மணியாகும்.

காலை 6:00 மணிக்கு எழுந்து, இரண்டு நேர சாப்பாடும் செய்து வைத்து விட்டு, துணிகளை துவைத்து, மகனை பள்ளிக்கு அனுப்பி, கணவரை வேலைக்கு அனுப்பி, என்னோடு சேர்த்து ஆறு பேருக்கும் காபி வரை கையில் கொடுத்து செல்ல வேண்டும். அதையெல்லாம் கூட, என் மாமனாருக்கும், என் மாமியாருக்கும் செய்யும் கடமை யாக செய்கிறேன்.

என் மாமியார் கர்ப்பப்பை நீக்கம் ஆபரேஷன் செய்த போது, 10 நாள் லீவு போட்டு கவனித்தேன். கவனித்தேன் என்றால், மலம் கழித்ததை கூட எடுத்துப் போட்டு கழுவினேன். (அவரது மகள் மூக்கைப் பொத் திக் கொண்டு வெளியே போய்விடுவாள்.) அதே போல், என் மாமனா ர், உயர் ரத்த அழுத்தம் வந்து ஸ்ட்ரோக் அட்டாக் ஆன போது, துணிக ளை துவைத்து, சாப்பாடு செய்து கொடுத்து, 12 நாள் லீவு போட்டு கவனித்தேன்.

என் கணவர் அமைதியானவர். என் மீதும், என் மகன் மீதும் உயிரை யே வைத்திருக்கிறார். ஆனால், தகப்பனை மீறி பேச பயம். என் மாம னார், என்னை கேவலமாக, கெட்ட வார்த்தையினால் பேசும்போது கூட அமைதியாக பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்.

தனிக்குடித்தனம் போகலாம் என்று நான் கூப்பிட்டால், என் தங்கை க்கு திருமணம் முடித்து விட்டு, பிறகு போகலாம் என்பார். அதற்காக, நானும் பொறுமையாக வாழ்ந்து வருகிறேன்.

என் ஐந்து வயது மகனுக்காக, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனமு ம், உடலும் சோர்ந்து விட்டது.

என்னை துணிச்சலான பெண், எதையும் செய்யக் கூடியவள் என்று என் அலுவலகத்திலும், பிறந்த வீட்டிலும், சமுதாயத்திலும் நல்ல பெயர் வாங்கினேன். கணினி, தட்டச்சு, விளையாட்டுத்துறை என்று எல்லா துறைகளிலும் முதல் பரிசு வாங்கியவள். எம்.ஏ.,படித்து, வக் கீலாக வேண்டும் என்பதை, என் லட்சியமாக வைத்திருந்தேன். என் தகப்பன் உயிரோடு இருந்திருந்தால், என்னை வக்கீலாக்கிப் பார்த்தி ருப்பார்.

என் மகனை, குழந்தையில்லாத என் அக்காவிடம் ஒப்படைத்து விட் டு, தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது.

என் அம்மா, “கொஞ்ச நாள் பொறுமையாக இரு. அப்படி தற்கொலை தான் உன் முடிவு என்றால், தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விட்டு, உன் மகனையும் கூட்டிக் கொண்டு வா. என் உயிர் உள் ளவரை, நான் பார்த்துக் கொள்கிறேன்…’ என்கிறார். ஆனால், என் கணவரோ, “என்னை விட்டு நீயும், மகனும் தனியே போனால், நான் தற்கொலை செய்து கொள்வேன்…’ என, அழுகிறார்.

அம்மா நான் என்ன செய்ய… வாழ வழி தெரியாமல் தவிக்கும் இந்த மகளை உங்கள் மகள் போல் பாவித்து, எனக்கும், என் குழந்தைக் கும் நல்ல யோசனை கூறுங்கள். அதன்படி கட்டாயம் பின்பற்றி நடப்பேன்.

இப்படிக்கு அன்பு
மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. உன் அவல நிலை கண்டு வேதனித்தேன். பொதுவாக, ஒரு பெண்ணுக்கு வில்லனாக கல்லூரி தோழனோ, கணவனின் தம்பியோ, பணியிட மேலதிகாரியோ அமைவர். ஆனா ல், உனக்கு வில்லனாக தாய்மாமன் – மாமனாராக வந்து வாய்த்திரு க்கிறார். தன் மகனுக்கு, எக்கச்சக்க வரதட்சணையுடன் வரும் பண க்கார வீட்டுப் பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டுமென்று கனவு கண்டிருப்பார் உன் தாய்மாமன்.

கட்டும் முறை உள்ள உறவுக்காரப் பெண்களின் மீது, அவருக்கு அதீத வெறுப்பு. ஆனால், அவரது சகோதரி மகளாகிய நீ, அவரது மகனை காதலித்து, ஓடிப்போய் திருமணமும் செய்து கொண்டாய். அத்துடன் நில்லாது, அவரது மகனுடன் ஒன்றரை வருடம் தனிக்குடித்தனம் வேறு நடத்தி விட்டாய். உன் மீதிருக்கும் வெறுப்பை, தன் பேரக் குழந் தையிடமும் உமிழ்கிறார். உன்னை பக்கத்திலேயே வைத்து பழி வாங்க வேண்டும் என்றும், சகலவிதங்களிலும் சித்ரவதை செய்ய வேண்டும் என்றும் எண்ணி, உன்னையும், மகனையும், பேரனையும் தன் வீட்டோடு இணைத்துக் கொண்டார் உன் தாய்மாமன்.

நீ, ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு பெண்ணல்ல; அயல் ஜாதியுமல்ல; மிக நெருங்கிய ரத்த சொந்தம்; இருவருமே ஒண்ணுக்குள்ள ஒண் ணு. ஆனால், பாழாய்போன உன் மாமனாரின் மிருகத்தனமான ஈகோதான், உங்களிருவரின் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கி றது; உடன் பிறந்த தங்கையின் நடத்தைக்கு களங்கம் கற்பிக்கிறது; நடுத்தெருவில், மருமகளை காட்டுமிராண்டித் தனமாய் அடிக்கச் சொல்கிறது.

உன் தினசரி வேலைகளை உன் கடிதத்தில் அட்டவணை போட்டு காட்டியிருக்கிறாய். படிக்கவே தலை சுற்றுகிறது. தினம் 16-18 மணி நேரம் குடும்ப நலனுக்காக உழைக்கிறாய்.

உன் மாமனார் அண்ட் கோவுக்கு எதிரான அகிம்சாவழி போராட் டங்களை, நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு நீ உழைக்கும் நேரத் தை படிப்படியாக குறைத்து, எட்டு மணி நேரத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். ஆபாசமான வார்த்தைகள் பேசினால், வன்முறை யில் ஈடுபட்டால், “காந்திகிரி’ முறையில் பதிலடி கொடுக்க வேண்டு ம். கோழைத்தனமான உன் கணவனை, பேசிப்பேசி தனிக்குடித்தனம் போகும் துணிச்சல்காரனாக உருவேற்ற வேண்டும். தாலியை கழ ற்றி கொடுக்காமல், நீயும், உன் மகனும், அம்மா வீட்டிற்கு போய் சில மாதங்கள் தங்கிப் பாருங்கள். உன் தரப்பு நியாயங்களை, உன் மாமனார் நல்ல மூடில் இருக்கும் போது தெரியப்படுத்த வேண்டும். உடன்பிறந்த தங்கையை-உன் அம்மாவை நடத்தை கெட்டவள் என வர்ணிப்பது, மல்லாக்கப்படுத்துக் கொண்டு காரி உமிழ்வது போன் றது என, விளக்கு. உன் தரப்பு நியாயத்தை உன்னால் சொல்ல முடி யாவிட்டால், உன் அண்ணனையோ, அக்காளையோ வரவழைத்து, உன் மாமனாரிடம் பேசச் சொல். கொடுமைகள் தொடர்ந்தால், மக ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்வேன் என மிரட்டு.

தனிக்குடித்தனமே உன் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாய் அமை யும். அதற்காக, காய்களை தொடர்ந்து நகர்த்தி வெற்றி பெறு. உன் னை விட பிரச்னைகள் அதிகம் உள்ளோர் இவ்வுலகில் கோடி பேர் என்பதை உணர்ந்து அமைதி பெறு.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: