வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல் லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறு வது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந் த கேள்விக ளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனி வாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
”தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன்
செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விற்கு வங்கிகள் அனுப்புகின்ற ன. அங்கிருந்து அந்தந்த வங்கி களுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிக ள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையெ ன்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும். இந்த நடைமுறையைத்தான் கடந் த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.
இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியி
ன் காசோலையும் வித்தியாசமா க உள்ளது. தேதி, வாடிக்கையா ளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ் வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலை களை சரி பார்க்க காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோ லைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுது வதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய் டு ( என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையா
ளம் கண்டுகொள்ளலாம். வங்கிக ளில் காசோலைக ளின் இமேஜை ஸ்கேன் செய்யும் போதே போலிக ளைக் கண்டுபிடித்து விட லாம்.
புதிய சி.டி.எஸ். காசோலை கள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெ னவே உள்ள காசோலைக ளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள் ளலாம். ஆன்லைனி லும் விண்ணப்பித்து பெற லாம்.
ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்தி
ருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய கா சோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோ லையாகவே இருக்கும்.
சி.டி.எஸ். காசோலைகள் நடைமு றைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்ட
ணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாள ருக்குச் சாதகமா ன விஷயங்கள்.
அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழு தும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத் தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலை களை வங்கி ஏற்காது”
news ok
Good Post.
Recently on 15th Dec 2012, RBI has extended the deadline to 31st March 2013
Good Post
Recently on 15th Dec 2012, RBI has extended the deadline for older cheque acceptance upto 31st March 2013