Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களது புகைப்படங்களில் ஒரே சொடுக்கில் திருந்தங்களை மேற்கொள்ள‍ உதவும் நல்ல‍தொரு தளம்

இது கேம‌ரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் கேம‌ராவோ செல்போ ன் கேம‌ராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுக ளையும் படம் எடுத்து பேஸ்புக் கிலும் டிவிட்டரிலும் இமியிலி லும் பகிர்ந்து கொண்டிருக்கி றோம். புகைப்படங்களை எடுப் பதும் பகிர்வதும் எளிதாகி இருப் பதுபோல அவற்றை திருத்துவ தும்தான் எளிதாகியிருக்கிறது. அதாவது எடிட் செய்வது .புகைப் படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப் படத்தை மெருகேற்றுவ து.

இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என் றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம். அத் தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெரு கேற்றும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்காக ஆன்லை புகைப்பட எடிட்டிங் சேவைகள் இருக்கவே இருக்கின்றன.அதாவது இணைய த்தின் மூலமே புகைப்படங்களை திருத்தி மேம் படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை தான் வழங்குகிறது பிக்புல் (picfull) இணைய தளம்.

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் என்று வர்ணிக்க கூடிய இந்த தளம் மிக எளிதாக புகைப்படங்களை திருத்தி கொள்ள வழி செய்கிறது. இதற்காக புகைப்படத்தை இந்த தளத்தில் பதி வேற்றிவிட்டு,அதற்கு தேவையான பின்ன ணி அமைப்பு மற்றும் இதர திருத்தங்களை தேர் வு செய்து கொள்ளலாம்.

இதில் திருத்தங்கள் என்று வரும்போது புகைப்படத்தின் அழகை மேம்படுத்த தொழில் முறை யாக மேற்கொள்ளப்படும் பல் வேறு யுத்திகளை உள்ளடக்கியது .எல்லாவற்றை யும் ஒரே கிளிக்கில் செய்து முடி த்துவிடலா ம். இவற்றை தேர்வுசெய்து புகைப்படத்தை அழகாக்கி கொண்ட பிறகு அதனை அப்படி யே கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம். அப்படியே இமெயில் பேஸ்புக் வழியே நண் பர்களோடு பகிர்ந் து கொள்ளலாம்.

இணைய முகவரி: picfull

– 0சைமன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: