Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேண்டாதவையும், கூடாதவையும் – சுவாமி சுகபோதானந்தா

ஒருமுறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தா வின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுக போதானந்தா ஒரு கேள்வியைக்கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்ட த்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத்தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தை கள் நகைகளை விற்று வந்த தொகை யையும் முதலாகப் போட்டு நண்ப ருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொ ன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமை களையும் நண்பர் பெயரி லேயே வைத்திரு ந்ததால் வெற்றி கரமாக நடந்து வந்த வியாபாரத் தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும்தான்’ என்று சொ ல்லி நண்பர் ஏமா ற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழு தார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடு மைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண் ட சுவாமி சுகபோதானந்தா அடு த்தபடியாக அவர்களிடம் “உங்க ளுக்குப் பிடிக்காத போர் அடிக் கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லு ங்களேன்” என்றார். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன் னார்கள்.“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெ ட்டை (சி. டி, டி. வி.டி எல்லாம் வர ஆரம்பிக்கா த காலகட்டம் அது) தேடிப் பிடி த்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இரவுவ ரை திரும்பத் திரும் ப போட்டுப் பாருங்கள்” என்றார். ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக் க முடியும்? அவர்கள் “ஐயை யோ… முடியவே முடியாது. மு டிகிற காரியமாக வேறு எதை யாவது சொல்லுங்கள்” என்றா ர்கள். “நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும்கூட உங்களுக்கு ப் பிடிக்காத காட்சிகள்தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத் திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டி ப் பார்க்கிறீர் கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் கா ட்சிகளை ஏன் உங்கள் மனத் திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டு ப்பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானா கவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்  தா.

அவருடைய அழகிய வார்த்தை களில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமே யொ ழிய பாரமாக இருக்க ஒரு போது ம் நாம் அனுமதிக்கக் கூடாது”.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: