Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியத் தொலைக்காட்சி, செல்போனில் . . .

ஆம்! இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை இன்னும் சில தினங்களில் செல்போனில் கூடப் பார் க்கலாமென அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இச்சேவை எதிர் வரும் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்படுமெ னவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறி விப்பை பிரசார் பாரதி நிறுவன த்தின் உறுப்பினர் பிரிகேடியர் வி. ஏ.எம். ஹுசைன் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இங்கே தரப் பட்டுள்ளது.

பிரசார் பாரதி என்ற இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்ப டும் டி.டி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிக ழ்ச்சிகளும் பல நவீன மாறு தல்களு க்கு உட்படுத்தப்பட்டு பல புதிய செய்திகளை உடனு க்குடன் நவீன தரத்தில் வெளி யிடவிருப்பதாகவும் திரு. வி. ஏ.எம். ஹுசைன் கூறியுள்ளா ர்.

மேலும் அவர் கூறுகையில், “பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இணையான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை இனி மேல் தூர்தர்ஷனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அடித்தளமாக யூடியூப் மற்று ம் செல்போன்களில் நிகழ்ச்சிகளை வெ ளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.”

சில குழுக்களை அமைத்து பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளில் விரை வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர ப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டிலேயே அதிக வருவாய் பெரு ம் சில வானொலி நிலையங்கள் தமிழ கத்தில்தான் உள்ளது. இதை நவீனப்படு த்துவதுடன் டிஜிட் டல் மயமாக்கப்படும். “டிஜிட்டல் ரேடியோ’ ஒலிபர ப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர் கள் எனப்படும் நவீன சாதனங்கள் வாங் கப்பட உள்ளன. இதன் மூலம் எஃப்எம் வானொலிகளுக்கு இணையான தரத் தைப் பெறமுடியும் எனவும் அவர் தெரி வித்துள்ளார்.

மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை “ஒளியும் ஒலியும்” செய் தாலே அது மாபெரும் வெற்றியும்பெரும். இதன் மூலம் அதிக வருவா ய் மற்றும் பார்வையாளர்கள் கிடைக்கப்படுமென்பதே நமது கருத்து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: