Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! உங்களுக்கு திருமணம் நிச்ச‍யிக்க‍ப்பட்டுவிட்ட‍தா?

அப்ப‍டியென்றால், உங்களுக்கு மருத்துவரது ஆலோசனைகள் அவசியம்!

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொட க்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தி யா கவும் தொ டரும். திருமணத் துக்குத் தயாராகிற அல்லது திரும ணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்க ள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை வலியு றுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்து வர் ஜெயராணி.

‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால பாதிக் கப்பட் டிருக்காங்க. ஒல்லியாகணுங்கிற நினைப்புல கன்னாபின்னா

Dr. ஜெயராணி

ன்னு டயட் பண்றதும், ஜங்க் ஃபுட் சாப்பிடறதுமா இருக்கிற தால, தேவையான சத்து உடம் புல சேராம, ரத்தசோகை வருது . இது அவங் களுக்குக் கல்யா ணமாகி, கருத்தரிக்கிறபோது பிரச்னைகளைத் தரும். ரத்த சோகை இருக்கான்னு தெரிஞ் சுக்கிட்டு, அதுக்கான சரி யான சிகிச்சையை எடுத்துக்கிறது பல பயங்கர பாதிப்புகளைத் தவிர் க்கும்.

அடுத்து ஃபோலிக் அமிலக் குறைபாடு. கல்யாண மானதும் மருத்துவ ரோட உதவியோட இந்தக் குறை பாட்டுக்கான மருந்துகளை எடுத்து க்கிட்டா, மூளை மற்றும் முதுகுத் தண்டு வடப் பிரச்னைகள் இல்லா த, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தட்டம்மைக்கான தடுப்பூசி மிக முக்கியம். கர்ப்பமானதும் தட்டம் மை வந்தால், உறுப்புக் கோளாறுகளுடைய குழந்தை பிறக்கலாம். இந்தத் தடுப்பூசி போட்டுக்கிட்டு, 6 மாதங்கள் கழிச்சுதான் கருத்தரிக் கணும். மாதவிலக்கு சுழற்சி முறை தவறியிருந்தா, அதுக்கும் சரி யான மருத்துவ ஆலோசனை அவசியம்.

சில பெண்களுக்கு பிறவியிலிருந்து பிரச்னை கள் இருக்கும். இதய நோய், வலிப்பு, சிறு நீரக ப் பிரச்னை, நீரிழிவு… இதெல்லாம் உள்ள பெண் கள், கருத்தரிக்கிறதுக்கு முன்னாடி மருத்துவ ஆலோசனை யை அவசியம் எடுத்தாகணும். சில வகை இதய நோய் உள்ளவங்க, கருத்தரிக்கக் கூடாது.

குடும்பநல மருத்துவரைப் பார்க்கிறதுக்குப் பதில், அந்தந்த நோய்க் கான சிறப்பு மருத்துவரைப் பார்க்கறது நல்லது. ஏற்கனவே எடுத்துக் கிட்டிருக்கிற மருந்துகளை மாத்தி, கருவை பாதிக்காத அளவுக்கு பாதுகாப் பான மருந்துகளைக் கொடுக்க இது வசதியா இருக்கும். அடுத்து மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள் ஏதாவது இருக்காங்கிற சோதனையும் அவசியம்.

உடல் ரீதியான ஆலோசனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட மனசுக்கான ஆலோசனையும் முக்கியம். கணவன் -மனைவி ரெண் டு பேரும் சேர்ந்து கல்யாணத்துக்கு முன் னாடியோ, கருத்தரிக்கிற துக்கு முன்னாடியோ ஒரு கவுன்சலிங் எடுத்து க்கலாம்.

கடைசியா குழந்தைக்கான திட்ட மிடல். உடனடியா குழந்தைவேணாம் னு நினை க்கிறவங்க, மருத்துவரோட ஆலோச னைப்படி, அவங்க உடல் பரிசோதனை க்குப் பிறகு சரியான கருத் தடை முறை யைத் தேர்ந்தெடுக்கலாம். சரியான திட்ட மிடல் இல்லாம கருத்தரிச்சு, பிறகு அது வேணாம்னு கலைக் கிறவங்களுக்கு, கருக்குழாய் அடைப்பு ஏற்பட் டு, பிற்காலத்தில் குழந்தையே இல்லாமப் போகலாம்.’’

நன்றி => இளமை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: