Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”

அன்புள்ள அம்மாவுக்கு—

என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம்.

என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே போனாலும், அம்மா பாட்டி வீட்டிற்கு மட்டும் போய் வருவேன்.

திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். என் தம்பி திருமணம் செய்து கொள்வதற்காக, என்னை திருமணம் செய்து கொள்ள சொல் லி நச்சரித்தான். “உன்னால் நானும் திருமணம் செய்ய முடியவில் லை..’ என்று, கூறியதால், அவசர அவசரமாக தாய்மாமனின் தம்பிக் கு, என்னை கட்டாயப் படுத்தி, திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் எங்கள் ஊரில் நடந்தது. திருமணம் முடிந்து, ஐந்து நாள் தான் என்னோடு எங்கள் ஊரில் இருந்தான். பிறகு, “சென்னையில் வீடு பார்த்து, அழைத்து போகிறேன்…’ என்று சொல்லி போனான்; போனவன் தான், எட்டு மாதமாகியும், “அப்போ வருகிறேன்; இப்போ வருகிறேன்…’ என்று கடைசி வரைக்கும், வரவே இல்லை.

என்னை திருமணம் செய்தவனுக்கு, அப்பா, அம்மா இல்லை. அக்கா, இரண்டு தம்பிகள் மட்டும், வேறு மாநிலத்தில் உள்ளனர். திருமண த்திற்கு மட்டும் எங்கள் ஊருக்கு வந்தனர். என்னை திருமணம் செய் தவனின் பழக்க வழக்கம் எதுவும், என் பெற்றோருக்கோ, எனக்கோ தெரியாது. என் தாய் மாமன் தான், எனக்கு திருமணம் செய்து வைத் தான். சென்னையில் வேலை. திருமணத்திற்கு பின், சென்னையில் தான் இருப்பான் என்று, பிறகு தான் தெரிந்தது.

அவனுக்கு ஏற்கனவே, ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளது என்று, அந்த பெண்ணே எனக்கு போன் செய்து கூறினாள். இதை பற்றி, என் தாய்மாமனிடம் கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று, மழுப்பி விட்டான்.

பணத்திற்காக ஏமாற்றி, என்னை திருமணம் செய்து வைத்து விட்டா ன் என் தாய்மாமன். இனி எனக்கு, அவனோடு வாழ்க்கை வேண்டாம் என்று பஞ்சாயத்து மூலம் பேசி, முடிவு செய்தனர். இனி எனக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நஷ்ட ஈடாக எனக் கு, 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், பஞ்சாயத்து தலைவர் கூறினார்.

இதற்கு, என் தாய்மாமன் பொறுப்பேற்று சம்மதித்தான். ஒரு வருடமா கியும், சட்டப்படியோ, முறைப்படியோ இன்னும் விவாகரத்து பத்திர மும், நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய பணமும், தர மறுக்கிறான்.

என்னை திருமணம் செய்தவனுக்கு, எங்கள் ஊரில் சொத்து உள்ளது. அதற்கு பொறுப்பு, என் தாய்மாமன் தான். என் பெற்றோரும், என் கூட பிறந்தவர்களும், என்னை பற்றியோ, என் வாழ்க்கையைப் பற்றியோ எதையும் கண்டு கொள்வது இல்லை. எல்லாரும் அவர்கள் குடும்பம் , குழந்தைகள் என்று இருக்கின்றனர். நான் மட்டும், தனிமரமாகவும், அனாதையாகவும் இருக்கிறேன்.

நான் இருக்கும் ஊரில், என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர். முதலாமவர், டிரைவர், வயது 39. ஐந்து வருடமா க அவரை எனக்கு தெரியும். திருமணம் ஆனவர், விவாகரத்து ஆகி விட்டது. சற்று குள்ளம்; படிப்பு இல்லை.

அடுத்தது, பிளம்பர். வயது 35. என்னை விரும்புகிறார். கருப்பு, பல் எல்லாம் கறையாக இருக்கும். “உனக்கு நகை போட்டு, திருமணம் செய்து கொள்கிறேன். ராணி மாதிரி பார்த்து கொள்வேன்…’ என்று கூறினார். அவர் குணம் பிடித்தது; ஆனால், அவர் பல் பிடிக்கவில் லை.

அடுத்தவர், கட்டடத் தொழிலாளி, வயது 23. என்னைவிட ஆறு வயது சிறியவன். பார்ப்பதற்கு, 30 வயதுபோல் இருக்கும். நான் ஒல்லியாக, உயரம் கம்மியாக இருப்பேன். பார்ப்பதற்கு, 20 வயது பெண் போல் இருப்பேன். எனக்கு, இவனை பிடித்துள்ளது.

என்னை விட சிறியவன் என்று, என் மனசாட்சி உறுத்துகிறது. அவன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். ஓடி போய் விடலாம் என்றும், பிறகு இரண்டு வருடம்போனால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறான். அவ னும் விரும்பு கிறான்; நானும் விரும்புகிறேன். 

ஏற்கனவே வாழ்க்கையை தொலைத்தவள். மறுபடியும் அப்படி ஏதா வது ஆனால், நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

எந்த ஒரு முடிவையும், என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் தான் அம்மா, எனக்கு நல்ல பதில் அளித்து, தெளிவு பெற வைக்க வேண்டும்.

உங்கள் முடிவை எதிர்பார்க்கும்,
— அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

நீ, வேதனை மற்றும் குழப்பத்துடன் எழுதிய கடிதம் கிடைத்தது. நீ, உன் அக்கா மற்றும் தங்கை மூவருமே, வீட்டுவேலைசெய்யும் பெண் கள். யார் முதலில் திருமணம் செய்து கொள்வது என்று, உங்கள் மூவருக்கிடையே போட்டி பொறாமை நிறைய இருந்திருக்கிறது.

திருமணமே வேண்டாம் என்றிருந்தாய். தம்பி திருமணம் செய்வதற் காக, உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினான் என்பதெ ல்லாம், நீ பூசி மெழுகும் பொய்கள். திருமணத்திற்காக ஏங்கியிருக் கிறாய். தகுந்த வாழ்க்கைத் துணை வேண்டும் என, மனதார அபிலா ஷித்திருக்கிறாய்.

ஏதோ ஒருகெட்ட நோக்கத்துடன், உன் தாய்மாமன் ஏற்கனவே திரும ணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள தாய் மாமன் தம்பிக்கு உன் னை கட்டாயத் திருமணம் செய்துவைத்திருக்கிறான். அரபு ஷேக்குக ள், இந்தியா வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்வது போல, திருமணமான ஐந்தே நாள், உன்னுடன் தாம்பத்யம் நடத்தியிருக்கி றான்  உன் கணவன். ஏற்கனவே, திருமணம் ஆன ஒருவனை மணந் திருக்கிறாய். உனக்கும், அவனுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது.

வீட்டு வேலை செய்யும் பெண்தானே நீ என்ற இளக்காரம், உன் தாய் மாமனுக்கு. உன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்தால், ஒன்று ம் பெரிய பிரச்னை வராது என, நம்பியிருக்கிறான். ஆனால், நீ பஞ் சாயத்திடம் முறையிட்டு, நஷ்டஈடு, ரூ50 ஆயிரம் மற்றும் விவாகர த்து விடுதலை பத்திரமும் தர ஒப்புக்கொள்ள வைத்துள்ளாய்.

ஆனால், ஒப்புக்கொண்டபடி, நஷ்டஈடும், பத்திரமும் தர மறுக்கிறா ன் உன் கணவன். உன் கணவனுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறான் உன் தாய்மாமன். பஞ்சாயத்து தீர்ப்பை நிறைவேற்றாமல், தாமதப்ப டுத்தும் உன் தாய்மாமனின் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கலாம். உன் ஊரில் உள்ள கணவன் சொத்தை, உன் கணவன் அனுபவிக்காமல் தடுக்க முடியும் பஞ்சாயத்தால். 

உன்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் விரும்புவதாக எழுதியிருக்கிறாய்.

முதலாமவர், உன்னைவிட ஒன்பது வயது மூத்தவர். என்ன காரணத் துக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார்? இவர் உனக்கு பொருத்தமானவர் இல்லை. மூன்றாமவர், உன்னை விட ஆறு வயது இளைஞன். உங்கள் திருமணத்திற்கு, அவனது வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதற்காக, ஓடிப்போய் திருமணம்செய்து கொள்வ து, உசிதமான காரியமில்லை. திருமணமான சில நாட்களில், மூன் றாமவனுக்கு, சலித்து போய்விடுவாய். இரண்டாமவர் பிளம்பர். வயது 35. இவரே, உனக்கு பொருத்தமானவர். பற்களில் கரை இருந் தால், பல் மருத்துவரிடம் சென்று, “ஸ்கேலிங்’ செய்து கொள்ளலாம். வயது பொருத்தமும் இருக்கிறது. இவருக்கு, இதுமுதல் திருமணமு ம் கூட.

உன்னை திருமணம் செய்வதற்கு, பலத்த போட்டி இருக்கும்போல தெரிகிறது. நீ இரண்டாமவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டால், மீதி இருவர், உன் திருமணத்தை தடுக்க ஏதாவது பிரச் னை செய்வர். உன் முடிவை அவர்களிடம் இதம்பதமாய் பேசி, போ ட்டியிலிருந்து சமாதானமாய் விலகிப் போகச்சொல். உன்னை திரும ணம் செய்துகொள்ள, புதிதாக பலர் முளைக்கக்கூடும். அப்படி யாரு ம் முளைக்காத வண்ணம் பார்த்துக் கொள்.

இரண்டாமவருடன்கூடிய உன் திருமணத்தை, பஞ்சாயத்து தலை மையில் நடத்து.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: