விதை2விருட்சம் இணையத்தில் நான் பாலுறவு சம்பந்தமான இடுகைகளை பகிர்ந்து வருவதால், என்னை பற்றிய தவறான தகவல்களை பரப்பிவரும் அல் லது பேசி வரும் சரியானப் புரிதல் இல்லாத எனது நண்பர் களுக்கான பதிலே இந்த பதி வாகும்.
எனது காலை, கற்களும் முற்க ளும் குத்தி ரணமாக்கினாலும், எனக்கு பின்னால் வருபவர்கள் பாதம் நோகாதி ருக்கவும், புதிய பாதை ஒன்றை அமைத்து வருகிறேன்.
ஆணும் சரி! பெண்ணும் சரி! பாலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லா மையால், இயல்பாக தங்களது உடலில், வயதிற்கேற்ப ஏற்படும் பாலியல் மாறுபாடு (பருவ மாற்றங்)களைகூட ஏதோ பெரிய குறை நமக்கு இருக்கிறது என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு , தாழ்வு மனப்பான்மையோடும், சில நண்பர்க ளின் தவறான வழி காட்டுதல்களாலும் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு தனது வாழ்க் கையையே தொலைத்து விட்டு, தனது இன்னுயிரை மாய்த் துக்கொ ள்ளும் அவலங்களை நாள்தோறும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்தி களிலும் படிக்கிறோம் பார்க்கிறோம்.
மேலும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ், எச். ஐ.வி பற்றிய விளைவுகளையும், அந்நோய்க ளை தடுக்கும் முறைகளை பற்றிய அறிவும் துளியும் இல்லாமல் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. நோய்களின் கோரப் பிடியில் சிக்கி, உட லாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு, இளம் வயதிலேயே மரணம டைந்த அல்லது மரணம் அடைந் துவரும் செய்திகள் பல உண்டு.
மேலும், மணமான தம்பதி, தனது துணையை உள்ளத்தாலும் உட லாலும் எப்படி நெருங்குவது? மேலும் அவளை(னை) எப்படியெ ல்லாம் திருப்திப்படுத்த முடியும், அவளை(னை) தம்மால் திருப்தி படுத்த முடியுமா? தாம்பத்தியத் தில் இதுவெல்லாம் செய்யலாமா ? தனது பாலியல் உறுப்பு சிறிய தாக இருக்கிறதே என்ற தேவையற்ற அச்சத்தில் ஆணும், தனது சிறிய மார்பகங்கள் தனது துணையை கவருமா என்ற தேவையற்ற அச்சத்தில் பெண்களும், உள்ளுக்குள்ளே புழுங்கிகொண்டும், அச்ச ப்படுவதால், அது அவர்களுடைய தாம்பத்தியத்திலும் எதிரொலித்து, தனிமைப்படுகின்றனர். இதனால், இவர் களது துணை இவர்களிடம் இருந்து பிரிந்து வாழ குடும்ப நல நீதிமன்றங்க ளில் அணுகி விவாகரத்து வழக்கு தொடுக்கின்றனர்.
அவர்களது மரணத்திற்கு காரணம் என்ன? பெருகி வரும் விவாகரத்துக் களுக்கு காரணம் என்ன?
உடலுறவு முறைகளை பற்றியும், உடலுறவு குறித்த விழிப்புணர்வு இல் லாமையே!
அவற்றை எப்படி தடுக்கலாம்?
ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தத்தமது உடற்கூறுகளை அல்ல து பருவ மாற்றங்களை பற்றிய அடி ப்படைகளை தெரிந்து கொண்டு, தெளிந்த சிந்தனையோடும், அந்த பருவ வயதை கடக்கவும், திரு மணம் ஆன அல்லது ஆகப்போகிறவர்களும் பாலுறவு பற்றிய தகவ ல்களை அறிந்து தத்தமது துணையை தாம்ப த்தியத்தில் திருப்தி படுத்தி, இல்லறத் தை நல்லறமாக கொண்டு செல்ல முடியும்.
இதுபோன்ற மரணங்களும் விவாகரத்துக்களும் இனி வரும்காலங் களில் மேலும் பெருகாமல் கட்டுப்படுத்த நமது இந்திய அரசும் தமிழக அரசும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அமைப்பை தொ டங்கி பல ஆண்டுகளாக, பல்வேறு வகைகளில் உடலுறவு பற்றிய விழிப்புணர்வையும் , உயர்கொல்லி நோய்களை தடுக்கும் முறைக ளை விளம்பரப்படுத்தி, அதன் தாக்கத்தை குறைக்க அரும்பாடு பட்டு வருகின் றன•
அந்த சீரிய முயற்சியில், சிறிய அள விலாவது எனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த தோக்க த்தோடு, செய்தித்தாள்களிலும், இணையங்களிலும் நான் படிக்கும் பாலியல் சம்பந்தமான தகவல் களையும், தொலைக் காட்சி களில் ஒளிபரப்பாகும் பாலியல் சம்பந்த மான சிறந்த மருத்துவர் களின் ஆலோசனைகளையும் என்னால் முடிந்தளவு எழுத்துக் களாக மாற்றியும், எனது இணையமான விதை2 விருட்சத்தில், வெளியி ட்டு வருகிறேன். மேலும் நான் வெளி யிடும் இடுகைகள் எந்த இணை யத்தில் இருந்து எடுக்கப் பட்டது என்ப தையும் குறிப்பிட்டு வருகி றேன்.
அனுபவமுள்ளவர்களும், பேச்சு மற்றும் எழுத்தாற்றல் உள்ள பெரி யோர்களும் வெட்கத்தால் சொல்லத்தயங்கும் புனிதமான விஷயத் தை, நாங்கள் கற்றதையும் கேட்டதையும், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைக ளையும், என் பாணியில், குழு வினரின் தணிக்கைக்குப்பின் வெளியிட்டு வருகி றேன்.
இம்முயற்சியை தடுப்பதற்கு பதிலாக, குறைகளைக்களைந்து மேலும் செம் மைப்படுத்த தகுந்த ஆலோசனைகளை அனுபவமுள்ளவர் களிடமிருந்தும், பேச்சு மற்றும் எழுத்தாற்றல் உள்ள பெரியோர் களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரவேற்கிறேன்.
அவ்வாறு வரும் ஆலோசனைகளையும், அவர்தம் பெயர் மற்றும் முகவரியையும் (அனுமதியுடன்), எங்களின் இணையத்தளத்தில் வெளியிட்டு அவர்களை கௌரவப்படுத்த விரும்புகிறேன்.
என்றென்றும் சமூகப்பணியில்
– உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
Dear Sir,
The information’s published by you are really very very important to all of us in this society. Thanks a lot to you Sir.
I am aged 38, and had various doubts regarding sex. I am very much worried to talk about those to others. All my doubts all now cleared because of Vidha2virutcham only.
I really appreciate you for your kind efforts, to educate others in this society which is very backward in all ways. It is the duty of every Indian to educate others in any way and open their eyes.
So, don’t worry about other fellow comments. Those people’s are going to stone age and they will talk unnecessarily. We should never consider those people’s and should consider only about our country’s future.
Thanking You!
Yours truly,
G Kumaran.
Dear Kumaran
I really thanks for you and your kind and very supportive words
importent notes,
good job
keep it up My dear frd.
Anbudan Anand
Go ahead and keep on writing with out bothering about these jokers.
In general, your articles seem to be authentic.
Will be glad to help in this area.
all divorce case come on no sexual problem only 50% case come on divorce problem (some any other command, that people sexual problem)
Every post that you are posting is very very important and most wanted for our society. so please keep posting such articles.
Dear Sir,
don’t worry about the foolish comments, your articles about the sex awareness is not bad than the film songs, in abroad sex studies were going on, article published on your website is very nice and useful, even people hesitate to go for sex council, they can read the information posted by you, all the matter posted by you are excellent don’t get avoid for useless people comments, all the best, i wish you all success, thanks a lot for your useful informations.
regard
Ganeshkrishnan
பாலுறவு பற்றிய விழிப்புணர்வையும், பாலுறவு சம்பந்தமான மருத்துவர்களின் விளக்கங்களையும், பாலியல் மருத்துவத்தையும் பற்றித்தானே நீங்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறீர்கள்! நீங்கள் பகிர்ந்து வருவதை, தவறு என்று யாராவது சொன்னால், அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது. தற்போது பாலியல் கல்வி என்ற ஒன்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் உலகம் முழுக்க எழுந்துள்ளதே! நண்பர் சத்தியமூர்த்தி, நீங்கள் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் உங்களது பணியினை செவ்வனே செய்து வாருங்கள். நன்றி
சார் உஙகளை குறை சொல்பவர்களிடம் கண்டிப்பாக ஏதோ ஒரு குறை இருக்கும் அதெற்க்கெல்லாம் நீஙகள் தயங்காமல் உஙகள் பதிவுகளை தொடர்ந்து அளித்து வாருங்கள்.. வாழ்த்துக்களுடன் உங்கள் இணைய நணபர் சுதீப்
அன்புள்ள அண்ணா!
என்னைப்போன்ற இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய, பாலியல் குறித்த மருத்துவ செய்திகளைத்தானே நீங்கள் பகிர்ந்து வருகிறீர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.
இன்றைய திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அப்பட்டமாக ஆபாசக்காட்சிகளை எந்தவித ஒளிவு மறைவின்று ஒளிபரப்புகிறார்களே! அவர்களை, என்னசொல்வது, என்ன செய்வது
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நல்லதை யார் செய்தாலும் அதை தடுக்கவும், குறைசொல்லவும் நான்கு பேர் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
உதாரணமாக
யாரோ நான்கு பேர் குறைசொல்கிறார்களே என்று பெரியார் ஒதுங்கியிருந்தால், மனித சமுதாயம் மாபெரும் எழுச்சியை கண்டிருக்குமா?
யாரோ நான்கு பேர் குறைசொல்கிறார்களே என்று காந்தியடிகள் ஒதுங்கியிருந்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா?
யாரோ நான்கு பேர் குறைசொல்கிறார்களே என்று பெருந்தலைவர் ஒதுங்கியிருந்தால், இன்று ஏழை மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கமுடியுமா?
பெரிய பெரிய தலைவர்களையே குறை சொன்ன அந்த நான்கு பேர், உங்களை மட்டும் குறைசொலாமலா இருக்கும்
இதுபோன்ற சமூகத்தினருக்கு தேவையான பாலியல் குறித்த மருத்துவக்குறிப்புக்களை நீங்கள் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள், இன்று உங்களை குறை சொல்பவர்கள்கூட நாளை உங்களை பாராட்டவும் வாய்ப்புண்டு
இப்படிக்கு
உங்கள் அன்புச்சகோதரி
லஷ்மிப்ரியா