Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது

தாம்பத்ய உறவு என்பது உடலும், மனமும் ஒன்றாக இணைந்து அனுபவிக்கவேண்டியது. சின்னதாய் சுணக்கம் இருந்தாலும் சுருதி குறைந்து மொத்தமும் பாழாகிவிடும். தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ் த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது அதில் சுவாரஸ்யமில்லை. ஏனெனில் எடுத்த உட னே டாப் கியருக்கு செல்வது என்பது பெண் ணுக்கு பிடிக்காத விசயம். மென்மையாய் தொடங்கி சிறிது சிறிதாய் முன்னேறி பின்ன ர் உறவில் உச்சத்தை அடைவதுதான் விருப்பமான விசயம் என்கின்ற னர் நிபுணர்கள். உறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். உடலுறவிற்கு முன்பு, இருவருக்கும் ஆர்வத் தை உண்டாக் குவது இந்த ‘முன் தொடுதல்’ தான். பெண்கள் இந்த முன்தொடுதல் எனப்படும் கிளர்ச்சியூட்டக்கூடிய விளையாட்டுக ளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். எனவே தாம்பத்ய உறவின் முழுமையான இன்பத்தை அனுபவிக்க பெண்ணை மகிழ்விக்கும் வித்தையை கற்றிருக்க வேண்டுமாம். அதேபோல பெண்ணுக் கும் இந்த கிளர்ச்சியூட்டும் விளையாட்டு தெரிந்திருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பாலுணர்வு இல்லாத அன்பா ன, அக்கறையான தொடுதல், தடவுதல், முத்தமிடுதல், கிளர்ச்சியாய் பேசுதல் போன்ற முன்விளையாட்டுக்கள் தாம்பத்ய உறவை டாப் கியரில் பறக்கச்செய்யும் கருவிகள். ஏதாவது ஒன்றை தூண்டி னாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால்தான் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவி ப்பது, முன் விளையாட்டின் முதல் முயற்சி. தாம்பத்ய உறவின் சுகம் முழுமையாய் இருக்க சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வே ண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை அமைந்தாலே உற வின் முன்விளையாட்டுக்கள் ஆரம்பமா கிவிடும். முன்விளை யாட்டின் முக்கிய அம்சம் ஸ்பரிசம். மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம். ஸ்பரிசத்தின் மூலம் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோ ளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொ டுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். பெண் ணின் உடலில் அமைந்துள்ள எந்த நரம்புகளை மீட்டினால் என்ன மாதிரியான இசை எழும்பும் என்று ஆணுக்கு தெரிந்திருக்க வேண் டும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமா கும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை. நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக என்று சொல்லாமல் சொல்லும் பரிவான ஸ்பரிசத்தினால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்க ளில் உணர்ச்சியை தூண்ட போதுமா னவை. பின் முதுகை தடவுதல், மசா ஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரி க்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித் தல் போன்ற பலவித செயல்கள் இருக் கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவி களுக்கு ஏற்ற வாறு கையாளலாம். முன் விளையாட்டு க்களினால் பெண்கள் மட்டு மல்ல ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களும் பலனடை யலாம். இதனால் உறுப்புகள் கிளர்ச்சியால் தூண்டப்படும். ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். தாம்பத்ய உறவுடன் உணர்ச்சி பூர்வ மான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும் என்கின்றனர் நிபுணர்கள்.
– thanks to indiansutra

Leave a Reply