மிருதங்கமேரு, நாட்டிய கலா விற்பன்னர், பரதநாட்டிய கலாபூஷ ணம் மாங்குடி ஆர். துரைராஜ் அய்யர் (இவரைப்பற்றி அறிவோமா)
கி.பி. 1900 ஆம் ஆண்டு அதாவது 19ஆவது நூற்றாண்டுத் துவக்கத் தில் சோழநாட்டின் தலை வாசல் தஞ்சாவூ ருக்கு அண்மையில் உள்ள மாங்குடி என்ற சிற்றூரில் ஹரிகதா காலட்சேப (இசை இறைப் பேருரை) கலை வல்லு நரும், கர்னாடக வாய்ப் பாட்டுக் கலைஞரு மாகிய இராம நாத பாகவதரின் திருமகனாய் துரை ராஜ் அவதரி த்தார். 80 ஆண்டு கள் இப்பூவுலகில் வாழ்ந்த அமரர் மாங்குடி ஆர் துரை ராஜ் அய்யர், சென்னையில் அரை நூற் றாண்டுக்காலத்திற்கும் மேலாக வசித்து வந்தார்.
1932-ல் மித்ருபாசம் என்ற தமிழ் நாடகத்தை எழுதி இயக்கினார். 1939-ல் தனது நண்பர் பி.கே. மூர்த்தியின் உதவியுடன் மிருதங்க கபோதினி என்ற நூலையும் பின்னர் ஸ்வபோத பரத நவநீதம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். இவற்றை மயிலையில் உளள கர்னாடிக் மியூசிக் புக் சென்டர் என்ற நிறுவனம் விற்பனை செய்து வந்தது.
திருமதிகள், ரோஷன் வாஜிப் தார், புஷ்பா பூயான் (கதக், மணிப்புரி, ஓடிசி, நாட்டியக் கலைஞர்), யாமினி கிருஷ்ண மூர்த்தி, காஞ்சனா- கௌரி பவா னி, ஜாவர் சீதாராமன், ரேவதி ராமச்சந்திரன், காதம் பரி, அமிர்த பாஷி ண், ரயில்வே அதிகாரி சுந்தரம் உள்ளட க்கிய எண்ணற்ற பல கலைஞர்களு க்கு மெலட்டூர் பாணியில் அமைந்த பரத நாட்டியம் போதி த்தார். திரு. ஏ.பி. ஹரிதாஸ் திரு.ராமநாதன் ஆகியோருக்கு மிருதங் கமும், திரு. வி.ஜி. செல்வ ராஜ் அவர்களுக்கு (வி.ஜி.பி. சகோதரர்க ளில் ஒருவர்), சில காலம் வாய்ப்பாட்டும் கற்றுத் தந்தார். பித்துக் குளி முருகதாஸ் துணைவி யார் சரோஜா மற்றும் அவரது சகோதரிக் கும் கலை போதகராக இருந்தார். அவர் போதி த்து, மிளிர்ந்த கலைஞர்களின் பட்டியல் எண்ணிலடங்கா. . .
பிதாமகன், காங்கேயன், என்றெல்லாம் அறியப்பட்ட வேலவன் என்ற திரைப்பட, கதை, உரை யாடல் ஆசிரியர் இவரது ஆத்ம நண்ப ராவார். வேலவன், கர்நாடக, குழந்தைகள் நாடக கலைஞரும், தயாரிப்பாளரும், இயக்குனரும், பல்கலை வித்தக ருமான திரு வட்டாறு சங்கர (டி. எஸ்.ஆர்.) அவர்களை மாங்கு டியாருக்கு அறிமுகப்படுத்தினார்.
இறுதிவரை நீடித்த அந்த நட்பு, டி.எஸ். ஆரை மாங்குடியாரின் வலது கரமாக ஆக்கியது. மாங்கு டியார் மற்றுமவர்தம் மாணவ மாணவிய ரின் படைப்புக்களை கலை உலகிற்கு சபாக்கள் மூலமாக கொண்டு சேர்த்தும், விளம்பரப்படுத்தியும், டி.எஸ்.ஆர். பேருதவி புரிந்து வந் தார்.
மாங்குடியாரின் மிருதங்கத்திற் கேற்ப நடன மணிகள் ஆடுவ தும், நடன மணிகளின் ஆடுத லுக்கேற்ப அவர் மிருதங்கம் மாறி மாறி வாசிப்பதும், சுத்த நிர்த்தம் என்ற பெயர் பெற்றது. இந்த பாணியில் மிருதங்கம் தவிர வேறு எந்த ஒரு இசைக் கருவியும் பயன்படுத்தப்பட மாட் டாது. இந்த நிகழ்வு பேரா சிரியர் பி. சாம்ப மூர்த்தியின் வேண் டுக்கிணங்க, திருச்செந்தூர் முருகன் சன்னி தானத்தில் அரங் கேற்றம் கண்ட து.
கவிழ்த்து வைத்த பானை மீது நின்று ஆடும் பேரணி என்கின்ற இவரது பிரத்யேகக் கண்டு பிடிப் பு மாபெரும் பெயர் பெற்றது. அதை திருமதிகள் காஞ்சனா -கௌரிக்கு அதிக சிரத்தை எடுத் துக் கற்றுத் தந்தார். அவர்களும் அதில் கற்றுத் தேர்ந்து தங்களி ன் சில மாணவி யருக்கும் கற்று த்தந்துள்ளனர்.
பட்டச நாட்டியம் என்கின்ற கத்தி கேடயத்துடன் கடின நடன அமை ப்பையும் மாங்குடியார் அவர்கள் பரத உலகுக்கு ஈந்தார். மஹிசா சுரவதம் எனப்படும் மகிசனை வதைப்பதற்காக மஹாசக்தி (காளி) ஆடும் நடன விளக்கமாகும் இது.
ஔவையார் படத்திலும் மேலும் ஜெமினியின் பல்வேறு படைப்புகளி லும் நாட்டிய அமைப்புகளில் ஆலோ சனை நல்கியதாக அறிகிறோம். திரைப்ப டங்களில் பின்னணி இசை சேர்ப்பில் இவரது மிருத ங்க வாசிப்பு பிரசித்தி பெற்றதாக சொல்லக் கேட்டிருக்கிறோம்.
தனது மனைவியையும், குழந்தைச் செல்வத்தையும், பறிகொடுத்த நிலையி ல், தனிமைப்படுத்தப்பட்ட மாங்குடி யார் வாழ்வு, இகபரசுக ங்களை வெறுத்தது. குருமகன் குகனந்தரின் சீடரான சுவாமி சிதான ந்தரிடம் தீட்சை பெற்று பின் ஸ்ரீவித்யா ஞான உபதேச த்தை துரை ராஜ் அய்யர்பெற்றுக் கொ ண்டார். அதன் பொருட்டு பருவகாலங் களில் ஸ்ரீ வித்யா ஆராதனையை, உலக நன்மைக்காக தொடர்ந்து நடத்தி வந்தார்.

Revathi’s performance, 1978
இவரது ஆன்மீக நாட்டத்தை பாராட்டி, பெங்களூர் ரமணி அம்மாள் ஒரு ருத்திராட்சை மாலையை அளித்தார்கள். ஸ்ரீ சிதானந்தர் பரத
நாட்டிய கலா பூஷனம் என்ற விருதை 19-04-1956 அன்று மாங்குடி யாருக்கு வழங்கி ஆசி நல்கினார்.
பாலா மந்திர உபதேசம் என் ற சந்தான பாக்கியம் தரும் மந்திர உபதேசம் பெற்ற அவர், அதை பலருக்கு உப தேசித்தார். அதனால் குழந்தைப் பாக்கியம் பெற்றோர் பலர். அதை குரு ஸ்தானத்தில் இருந்து, தன் வாழ்வுக்குப்பின் உபதேசிக்கும் அதிகாரத்தை டி.எஸ்.இராம கிருஷ்ணனுக்கு வழங்கி இது வாழை யடி வாழையாக தொடர வேண் டும் என்று உத்திரவிட்டுள்ளார்.
மாங்குடியார் துரைராஜ் அய்யர் நிறுவிய சிதானந்த நாட்டிய மண்ட லியை அவரது மாணவிகள் காஞ்சனா -கௌரி சகோதரிகள் 2004 இறுதிவரை நடத்தி வந்தனர். 2005 ல் காஞ்சனாவின் மறைவு க்கு ப்பின் மண்டலி தற்காலிகமாக செயல் படவில்லை.
இவரது மற்றொரு முக்கிய மாணவி ரேவதி ராமச்சந்திரன், அவரது பாணியை கடைபிடித்து, பல நாட்டி நிகழ்வுகளை அளித்து வருவ தோடு, ஒரு நடனப்பள்ளி அமைத்து, அதன் வாயிலாக பல கலைஞர் களை உருவாக்கி வருகிறார். அவரது சீடர் சுந்தரம் அவர்க ளின் மாணவ மாணவியர் பலர் இன்று இக்கலையில் பலர் இன்று இக் கலையில் பரிணமித்து வருகின்றார்கள்.
1980இல் தன் 80 ஆவது வயதில் தேதி குறிப்பிட்டு, ஒரு பௌர்ணமி தினத்தன்று மாங் குடியார் துரைராஜ் அய்யர் சித்தி அடைந்தார். தனது மாணவிகள் காஞ்சனா – கௌரி இல்லத் தில் இன்னுயிர் நீத்த அவரு க்கு சென்னை நுங்கம்பாக்கம் இடுகாட் டில் சமாதி நிறுவப்பட்டு ள்ளது.
2000ஆம் ஆண்டில் ரேவதி ராமச்சந்திரன் குடும்பத்தினரால் மயி லை பாரதீய வித்யா பவன் அரங்கில் இவருக்கு நூற்றாண்டு விழா எடுக்கப் பட்டது. பெரு மளவில் அவரது மாணாக்கர்கள் கௌரவிக் கப்பட்டார்கள்.
மிதிவண்டி ஒன்றையே தன் வாகனமாக்க் கொண்டு, மிக எளிய வாழ்க்கை நடத்திய மாங் குடி யார் எந்த ஒரு சொத்தும் பத்தும் சேர்க்கவில்லை. சம்பா தித்த பணத் தையெல்லாம் கலை யின் அபி விருத்திக்காக வும், நலிந்த கலை சருக்காகவும் சிரம த்தில் உள்ள நண்பர்கள் வாழ்வா தாரத்திற் காகவும் செலவு செய் தார்.
மிருதங்க மேரு என்று போற்றப்ப டுகின்ற இந்த பரதநாட்டிய விற்ப ன்னருக்கு நாம் செய்யும் விற்பன் னருக்கு நாம் செய்யும் போற்றுதல்கள், அவர் பாடுபட்டுப் பரப்பிய மெலட்டூர் பாணியில் அமைந்த பரதநாட்டிய சாஸ்த்திரத்தை உள்ளது உள்ளபடி தூய நிலையில் காப்பதேயாகும்.
– வை முத்துக்கிருஷ்ணன்
(அலைபேசி – 9884233954)
மின்னஞ்சல் –
தகவல் உதவி-கௌரி கிருஷ்ணன்
டி.எஸ். இராமகிருஷ்ணன்
(டிசம்பர் 2012 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழிலிருந்து. . . )
Excellent matter about the ancient artist, very rare photo graphs are posted. no words to express the feelings. really very nice article
Ganeshkrishnan
very intresting to read and expecting more like this, i have never got the oppurtunity to read this kind of article before and near future
seenu
very intresting to read with rare photgraphs, i have never overcome this kind of invaluable article before and in near future
seenu
very nice.rare pthotgraph,old is gold.
prabhu
very nice, rare photograph seen is god ‘s gift .old is gold
excellently covered adding quite a few rare photos.keep it up.
V.Mutthukrishnan