காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலி
யானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோதவேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர் களுக்கு காதின் உள்ளே நுழையு ம் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்ப டுகிறது, இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப் படைகிறது.
ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து…
நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி, வயது
வேறுபாடு இன்றி காதுக்குள் விநோதமான சத்தம் கேட்கத் தொ டங் கினால் சில நாட்களில் சரியா கி விடக்கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது. அப்ப டி விநோத மான சத்தம் வரக் கார ணம் என்ன என்பதை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்து வர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு விநோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முய ற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல் லாமல் புறக்கணித்துவிட்டு, நாட்கள் பல கடந்தபின் கேட்கும் திற னை முழுமையாக இழக்கும்நிலை வரை காத்திருப்பது புத்தி சாலித் தனம் ஆகாது.
இந்த ஸ்டேப்ஸ் எலும்புக ளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறு வை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப்ப டுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியா சமின்றி அறுவை சிகிச்சையைப் புற க்கணித்து காது கேட்கும் திறன ளிக்கும் மெஷின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபரிமிதமாக வளர்ந்துவிட்டால் இந்த உபகர ணங்களால் யாதொரு பயனும் இல்லை. படிப்படியாக காது கேட்கு
ம் திறனை இழப்பதைவிட ஆரம்ப நிலை யிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாகப் பலனளிக்கவல்லது என காது , மூக்கு, தொண் டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இக்குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தை களையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் பெண் களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக் கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் தனது அறிகுறிகளை முழுதாகக்காட்டத்தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு
வலி நிவாரணிகள்மூலம் சமாளித்தாலு ம் குழந்தை பிறந்த பின்பு முழுசிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டா ல் காலப்போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும்நிலை வரு ம்.
இதற்கான அறுவை சிகிச்சையை ‘ஸ்டே பிடெக்ட்டமி’ என காது, மூக்கு, தொண் டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றன ர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப்படுவ தால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற் படும் வடுக்கள் எது வும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் முழுமையாக காது கேட்கும் திறனைப் பெறுவத ற்கான உத்தர வாதம் உண்டாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல