டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம், தூத்து க்குடியில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு. இவை தான் இன்று நாட்டையே உலுக்கிக் கொ ண்டிருக்கும் செய்திகள்.
வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்த னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள், பெண் கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி யை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின சிறுமி யை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை கடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்ற இவர்கள், அங்கு வைத்து மூன்று நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது உறவினர்க ளிடம், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி விவரித்துள்ளார். இதையடு த்து, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சிறுமியின் சடலம் கண்டெடுப்பு :
தூத்துக்குடி அருகே, புதரில் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்க ப்பட்டுள்ளது. தமிழகத்தையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
புதரில் இருந்து கண்டெ டுக்கப்பட்ட சிறு மியின் உடல், ஸ்ரீவைகுண்டம் வட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா என்ப வரது உடல் என்பது உறுதிசெய் ய ப்பட்டுள்ளது. இன்று காலை தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு முட் புதரில் புனிதாவின் சடல ம் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பிரேதப் பரி சோதனை க்காக புனிதா வின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப் பட்டுள்ளது. புனிதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவர ங்களை தெரிவிக்க போலீசார் மறுப்பதாக அவரது உறவி னர்கள் புகார் தெரிவித்து ள்ள னர். தாதன்குளத்தை சேர்ந்த புனிதா, பக்கத்து ஊரான செய்து ங்கநல்லூரில் 7-ம் வகுப்பு படித் து வந்தார். புனிதாவும் அவருடன் படிக்கும் வேறு நான்கு சிறுமிக ளும் எப்போதும் ஒன் றாகவே நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற புனிதா, வீடு திரும்பாததால் புனிதாவின் பெற்றோர் அவளது தோழிகளிடம் விசாரித்தனர். தான் ரயில்வே கிராசிங் வழி யாக வருவதாகக் கூறி புனிதா தங்களை போகச் சொல்லிவிட்டதாக தோழிகள் தெரிவித்தனர். இதனை யடுத்து செய்துங்க நல்லூர் கா வல் நிலையத்தில் புனிதாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்:
இதற்கிடையில் நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொ டுமை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, ஓடும் பேருந்தில் கல் லூரி மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர், அவரது சகோத ரர் மற்றும் கூட்டாளிகள் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டன ர். இந்நிலையில் குற்றச்சம்ப வத்தி ல் தொடர்புடையதாக கருதப் படும் மேலும் ஒருவர் டெல்லி காவல் துறையினரிடம் பிடிபட்டுள் ளார். இந்த வழக்கில் ஐந்தாவதாக சிக்கி யுள்ள இவரை உத்தரபிரதே சத்தி ல் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை தனியி டத்தில் வைத்து விசாரித்துவரும் காவல்துறையினர், பிடிபட் டவர் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதனிடை யே மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அறிக் கை யை டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று தாக்கல் செய்கின்றனர்.
புதிய தலைமுறையில். . .