Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அதிக செய ல்திறன், புதுப்புது மாடல்கள், மேன்மேலும் மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிகக் குறைவான வாக னப்புகை என்பது போன்ற பல சிறப்புக்களை உள்ளடக்கி கொண்டது லாண்ட்ரோவர், ரேஞ்ச் ரோவர் வாகனங்கள்.ரேஞ்ச் ரோவர் கார்க ளின் வெற்றியை தொடர்ந்து தான் மற்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் எஸ்யுவி(SUV) தயாரிப்பில் அதிகளவில் நுழைந்தன என்றால் மிகை யல்ல.

லாண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்திற்கு வடக்கே நான்கு, கிழக்கே ஒன்று, மேற்கே ஐந்து மற்றும் தெற்கே நான்கு என்று நாடு முழுவ திலும் பதினான்கு டீலர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்த க்கதாகும். இந்தியாவில் லாண்ட்ரோவர் கார்கள் ஐந்து மாடல்களில் கிடைக்கின்றன. அவை முறை‌யே ஃப்ரீலாண்டர் 2, ரேஞ்ச் ரோவர் இவோக், டிஸ்கவரி, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகும். இவற்றில் குறைந்த விலைக்கொண்டது ஃப்ரீலாண்டர் 2 மற்றும் அதிக விலைக்கொண்டது ரேஞ்ச் ரோவர்.

ஃப்ரிலாண்டர் 2

லாண்ட்ரோவரின் மிக சொகுசான எஸ்யுவியான ஃப்ரிலாண்டர் 2 பார்க்க மிகவும் கம்பீரமாகவும் வேகமான முரட்டு பயணத்திற்கு தயார் என்று ‌சொல்வது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதன்முன் மற்றும் பின்புறம் உயர்ந்து க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம் என்பதால் எப்படிப்பட்ட கரடுமுரடான சாலைக்கும் ஏற்ற வாகனமாக விளங்குகிறது. ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டிருக்கும். இது யூரோ என்காப் (EURO) க்ராஷ் டெஸ் டில் உயர்ந்த தேர்ச்சிப் பெற்று ள்ளது குறிப்பித்தக்கது. 7 ஏர்பேக்குகளுடன் பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பளிக்கிறது. ஃப்ரீலாண்டர் 2. இதில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ப்ரீசெட் செட்டிங், பொதுவான சாலை, புல், சரளைக்கல் சாலை மற்றும் பனி படர்ந்த சாலை, குண்டும் குழியுமான சாலை மற் றும் மணற்பரப்பிற்கு ஏற்ற வகையில் செட் செய்துவிட்டால் அதற் கேற்ப த்ராட்டல் மற்றும் கியர்பாக்ஸை கட்டுப்படுத்தி எம்மாதிரி சாலைக்கும் ஏற்ப பயணத்தை சுலபமாக்குகிறது. இதன் என்ஜின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. மோதல்களின் ஆபத்தை போக்க வும், முன்புற அழகான வடிவமைப்பிற்கும் வழிவகுக்கிறது. ஃப்ரீலா ண்டர் 2 TD4-SE மற்றும் SD4-HSE என்ற 2 வேரியண்ட்டில் கிடைக் கிறது.

ரேஞ்ச்ரோவர் இவோக்:

ரேஞ்ச்ரோவர் இவோக் மிகவும் நீண்ட ஒல்லியான நளினமான தோற்றத்துடன் ஐந்து கதவுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பான செயல்திறனுடனும் எரி பொருள் சிக்கனத்துடனும் வடிவமை க்கப்பட்டுள்ள இந்த கார் மூன்று மாட ல்களான ப்யூர், ப்ரஸ்டீஜ் மற்றும் டை னமிக் என்று வெளிவருகிறது. 190PS SD4 டீசல் என்ஜின் அதிக பவரை குறைவான மற்றும் நடுத்தர ஆர் பிஎ ம்மில் வழங்குகிறது. இதன் நவீன பவர் ட்ரெயின் டெக்னாலஜி சிற ந்த செயல் திறனுடன் எரிபொருள் சிக்கனத்தையும் மிகக் குறைவா ன புகை மற்றும் கரியமிலவாயு வெளியீட்டை கொண்டுள்ளது. குறி ப்பிட வேண்டிய அம்சமாகும். 6 ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷனுடன் அதிக பட்Œ வேகமாக 195கிலோமீட்டர் மணிக்கு என்றும் 0 -100 கிமீ/ம ணிக்கு என்ற ஆக்சில்ரேஷனை 8.5 வினாடியில் அடைவதும் ரேஞ்ச் ரோவர் இவோக்கில் காணப்படுகிறது. சக்தி வாய்ந்த “ஆல் டிஸ்க்’ ப்ரேக்கிங் சிஸ்டம், நவீன “ஆக்டீவ் எலக்ட்ரானிக் சேஃப்டி சிஸ்டம், மேம்படுத் தப் பட்ட ட்ராக்ஷன் மற்றும் ஸ்டெபிலிட்டி டெக்னாலஜி போன்றவை இதனை பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததாக்கு கிறது.

டிஸ்வகரி 4 SE

பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள டிஸ்வகரி 4 SE ஏழு பேர் அமர க்கூடிய வகையிலும் பொருட்கள் வைக்க நிறைய இடம் கொண்ட தாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. 3.0 லிட்டர் டீŒல் என்ஜின் கொ ண்டு 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கமான்ட்ஷிஃப்ட் கொண்டுள்ள இதில் ஓட்டுனரின் கைவண்ணத்திற்கும், பயணத்தின் தேவைக்கும் ஏற்ப தானாகவே மாற்றிக் கொள்ளக் கூடிய வகையி ல் உள்ளது. இதனால் கியர் மாற்று வது மிகச்சிறப்பாகவும், எரிபொரு ள் சிக்கனத்திற்கு வழி வகுக்குகி றது. க்ரூபிஸ் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் விண்டோ ஓட்டுனரின் விரல் நுணியில் திறக்கக் கூடியதாகவும், ஆட்டோமேட்டிக் க்ளை மேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் வீலில் லெதர் உறையுடனும், பொருட் கள் வைக்க தனி ஷெல்ஃபுடனும், எலக்ட்ரிக் Œன்ரூஃப் என்ற மேற் கூரை திறக்கும் வசதியுடனும், நம் உணர்விற்கேற்ப வெளிச்சத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய விளக்கு களும், பின்புற ஏசியும் கொண்டு சொகுசான

உள் அலங்கார அமைப்பை பெற்றுள்ளது டிஸ்கவரி 4 SE மூன்று அடு க்குகள் கொண்ட இந்த மாடல் இந்திய குடும்பங்களுக்கேற்ற சிற ப்பான வாகனமாகும்.

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SE

கம்பீரமான தோற்றமும், உறுதியான கட்டமைப்பும் கொண்ட ஸ்போ ர்டியான ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SE புதிய பலவித மெட்டாலிக் நிற ங்களில் அழகிய அலாய் வீலுடன் வெளிவருகிறது.சொகுசான லெத nர் சீட்டுகள், எலக்ட்ரிக்கலி அட்ஜ ஸ்டபிள் ஓட்டுனர் மற்றும் முன் புற இருக்கைகள், சிறந்த ஆடியோ சிஸ்டம் போர்டபிள் ஆடியோ இன் டாஃபேசுடன் ஐபாட் மற்றும் எம்பி3 ஏற்றதாக உள்ளது. ப்ளூடூத் கனெ க்டிவிட்டியுடன் சொகுசான மகிழ் ச்சியான பயணத்திற்கு வழிவகுக் கிறது.

“டெவரன் ரெஸ்பான்ஸ்’ என்ற தொழில் நுட்பத்தின் மூலம் மலை யேற்றத்திற்கு பாதுகாப்பாக எளிதாக இருப்பதும், “க்ரேடியன்ட்’ ஆக் சிலரேஷன் கண்ட்ரோல்’ எம்மாதிரி சாலைகளிலும் கஷ்டமி ன்றி செல்ல உதவுவதும் இதன் சிறப்பம்சமாகும். சுற்றுச்சூழலைக் காக் கும் பொருப்பாக “A டெரைன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பத்தி ன் மூலம் கரியமிலவாயு வெளியீட்டை பெருமளவு குறைத்து சுற்று ச்சூழல் மாசை கட்டுப்படுத்த உதவுகிறது. இத்தொழில்நுட்பம் ரேஞ் ச்ரோவர் ஸ்போர்ட்டில் மட்டுமின்றி லாண்ட்ரோவரின் மற்ற மாடல் களிலும் உள்ளது.

ரேஞ்ச் ரோவர் லோக் SE

மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது ரேஞ்ச் ரோவர் லோக் SE மாடல், அட்லஸ் மற்றும் டார்க் அட்லஸ் இணைந்த முன் புற க்ரில், பாடிகலர் கொண்ட பம்பர், நோபல் ப்ளேட் கொண்ட மேல் மற்றும் கீழ்புற டோர் ஹாண்டில் கோடுகள் அற்ற சுத்தமான தோற் றத்தைக் கொடுப்பது, 20 அங்குல 5 ஸ்பிலிட் ஸ்போக் கொண்ட வீல் கள் மற்றும் இதன் அழகான நிறங் கள் போன்றவை இதன் வெளிப்புற தோற்றத்தை பிரமிப்பாக்குகிறது. ரேஞ்ச் ரோவர் வோக் SE இன் செமி அனிலைன் லெதர் சீட்கள், ஓட்டுன ர் மற்றும் முன்புற பயணி யின் இருக்கைகளுக்கான மெமரி, 825 வாட் சவுண்ட்

சிஸ்டம் தரமான இசையை வழங்குவது, கன்ரோல் கூலர், ட்வின் ப்ளேட் சன் வைசர், “ஆட்டோ டிம்மிங்’ உட்புற கண்ணாடி, சீட்களின் நிறம், எக்ஸிக்யூட்டிவ் சீட் ஸ்டைல் போன்றவற்றை தேர்ந்தெடுத்து க் கொள்ளும் வசதி போன்றவை இதன் உட்புற சொகுசு அம்சங்களு க்கு சான்றாகும். இதன் LR-SDV8 டீசல் என்ஜின் சக்தி வாய்ந்த பவரை 230KW முதல் 250KW வரை 700NM டார்க்குடன் வழங்குகிறது. இதன் “பாரலல் சீக்வென்ஷியல்’ டர்போ சார்ஜிங் சீரான பவரையும் சிறப்பான செயல்திறனையும் தொடர்ந்து அளிக்கிறது. மேலும் இதன் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஸ்மூத்தான சுலபமான பயணத்தையும் ஓட்டும் அனுபவத்தையும் வழங்குகிறது.

உலகத்தரமான சிறந்த நவீன தொழில்நுட்ப உத்திகளும், சொகுசான வசதியான பலவித அம்சங்களும், பெருமை மிகுந்த நளினமான கம்பீரமான தோற்றங்களுடனும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ற தாகவும் வடிவமைக்கப்பட்டு வெளிவரும் லாண்ட்ரோவர் வாகனங் கள் அனைத்துமே உரிமையாளரின் அந்தஸ்த்தையும் பெருமையை யும் உயர்த்தக்கூடியது என்றால் மிகையல்ல.

thanks to dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: