Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தான் வேட்டையாடியது கருவுற்ற மான் என்று தெரிந்ததும் தனது உயிரையே விட்ட‍ பெண்சிங்கம்!

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு

த‌னது அகோரப் பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நெடு நேரப் போராட்டத்தி ற்குபிறகு ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறி து நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்ட அந்த பெண் சிங்கம், இதனால் கடும் அதிர்ச்சிக் குள்ளாகியது. உடனே தாயின் வயிற்றிலி ருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்த னம் மேற் கொண்டது.

இறுதியில் அந்த பெண் சிங்கத்தின்  நீண்ட நேர முயற்சி பலனளிக் காது அந்த‌ மான் குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்திற்கு பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக் கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண் சிங்கம் இறந்து கிடந்தது…

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு என்பதற்கு இச்சிங்கம் ஓர் உதாரணம்

விதை2விருட்சம் பார்வையில் . . .

மனிதர்களிடம் இருக்க‍ வேண்டிய கருணை மிருகங்களிடம் உண்டு என்பதை மேலுள்ள‍ செய்தி உங்க ளுக்கு உணர்த்துகிறது.

மேற்காணும் செய்தியை முகநூலில் படித்த‍ நான், அந்த பெண்சிங் கத்தை நினைத்து நெகிழ்ந்தேன்.  மிருகங்க ளை வேட்டையாடி தனது வயிற்றுப் பசியினை தணித்துக்கொள்ளும் ஒரு பெண் சிங்கம் , இருந்தும், அய்ய‍ கோ!  தனது பசிக்காக, குட்டி ஈனும் ஒரு தாய் மானை வேட்டையாடி கொன்றுவிட்டோமோ என்ற குற்ற‍ உணர்ச்சி யிலும், அம்மானின் வயிற்றில் இரு ந்த குட்டியையும் காப்பாற்ற‍ முடிய வில்லையே என்ற சோகத்திலும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அந்த பெண் சிங்கம் உண்மையில் மனிதனாக பிறந்தி ருக்க‍ வேண்டும்.

மிருகங்களிடம் இருக்க‍ வேண்டிய கொடூரத் தன்மை மனிதர்களிடம் இருக்கிறது என்பதை கீழுள்ள‍ செய் தி உங்களுக்கு உணர்த்தும்

க‌டந்த சில ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் என்நினைவுக்கு வந்தது (செய்திதாள் மற்றும் தொலை க்காட்சிகளிலும் செய்திகளாகவே வந்த அதிர்ச்சி செய்தி தான் அது

ஒரு க‌லவரத்தில் கலவரக்காரர்களின் கையில் சிக்குண்ட ஓர் கர் பிணி பெண்ணை அந்த கல‌வரக்காரர்களில் கொடூர புத்தி கொண்ட ஒருவன் அவளையும்  கொன்று, அவளது வயிற்றை கிழித்து, அந்த சிசுவையும் எடுத்து, தனது கத்தியால் அதன் தலையை சீவிக்கொன் றான் என்பதே!

-விதை2விருட்சம்

 

One Comment

  • க‌மல்யா

    பரிணாம வளர்ச்சியில் உடலும் அறிவும் வளர்ந்தது. ஆனால், பகுத்த‍றிவுத்தந்தையான பெரியார், நீதியரசர்
    மார்கண்டேய கட்ஜ் போன்றோர் சொன்ன‍துபோல் வளர்ந்த அறிவு ஏமாற்றும் திறன் படைத்தோரின் பேச்சாலும், எழுத்தாலும், செய்கையாலும், தூண்டுதலாலும் மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    பசியால் வாடிய குரங்கு குட்டிக்கு பால் கொடுத்த‍ காட்டுவாசிப்பெண்ணின் தாய்மைக்கு தலைவணங்கிய‌ வைரமுத்துவுடன் மனிதநேயம் உள்ள அனைவரும் இந்நேரத்தில் தலைவணங்குகிறோம்.

    மனிதனாக வளர்வோம்!. மனித நேயம் வளர்போம்!!.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: