Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறப்பாக பிரகாசித்த சகோதரிகள்

இந்த ஆண்டு பாரத் கலாச்சாரின் மார்கழி மகோற்சவ இசை நிகழ் ச்சியில், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் நந்தினி, ரோஷிணி இருவரு மே சிறந்த குரல்வளத்துடன், இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பாக பிர காசித்தனர். இவர்களுடைய குரு, இசை ஆய்வாளர் பேராசிரியர் டி. ஆர்.சுப்ரமண்யம்.

நந்தினியின் இசை ஞானம், அவர் பாடிய மந்தாரி மற்றும் பிரதான சங்கராபரணம் இரண்டிலுமே, மிகவும் மனம் கவரும் வகையில் இருந்தது. மந்தாரி ராகத் தைப் பாடுவது வெகு கடினம். ரோஷிணியின் ஆரபியில் பளிச் மின்னல் விரிவுகளுடன், ஜொலிப்புடன் ராக ஆலோ பனையை ரசிக்க முடிந்தது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நாத சுதா கிருதியை அனுபவித்துப் பாடிய விதம் அருமை.

குரு டி.ஆர்.எஸ்., லய சிம்மம். ராகம் – தாளம் – பல்லவிகளை பாடுவ தில் மட்டுமின்றி இயற்றுவதிலும் படுசூரர். இந்த நிகழ்ச்சியில் சகோ தரிகள் சங்கராபரணம், மிச்ர திருபுட தாளத்தில் டி.ஆர்.எஸ்., இயற்றி யுள்ள, சங்கீத சாகித்ய என்று துவங்கும் பல்லவியை சுவரங்களை இணைத்து, படு நேர்த்தியாக வழங்கியது மெச்சும்படி இருந்தது.

வயலினில் அனந்தகிருஷ்ணனின் வாசிப்பு நன்றாக இருந்தாலும், ராக விரிவுகளில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது சற்று மனதை உறுத்தியது. மிருதங்க வாசிப்பில் குரு பரத்வாஜின் வாசிப்பு சிறப் பாக இருந்தது. ராகம் – தாளம் – பல்லவி மற்றும் தனி எல்லாமே நன் றாக இருந்தது வாசிப்பு.

– dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: