டில்லி அருகே உள்ள நொய்டாவில், இளம் பெண்கள் மற்றும் சிறுமி களை கொலை செய்த, சுரேந்தர் கோலி மீதான, 5 வயது பெண் குழந்தை கற்பழிப்பு வழக்கில், குற்றங்கள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து, இன்று தூக்கு தண்ட னை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப் பட்டது.
நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராம த்தில், மனிந் தர் சிங் பாந்தர் என்பவர் வீட்டில் வேலை பார்த்த சுரேந்தர் கோலி யும், மனிந்தர் சிங்கும், 19 இளம் பெண் கள் மற்றும் குழந்தைகளை, கற்பழி த்து, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதற்கு முந்தைய, நான்கு வழக்குகளில், கோலிக்கும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனிந்தர் சிங்குக்கும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள் ளது.
5-வது தூக்கு தண்டனை:
இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு நித்தாரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர் அந்த சிறுமி கடத்தி, கற்பழித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் , நிதாரி கிராமத் தைச் சேர்ந்த மனிந்தர்சிங் பாந்தரின் உதவியாளர் சுரேந்தர் கோலி என்பது தெரியவந்தது அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு காசியா பாத் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் தடயங்களை அழித்த வழக்கில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, “கோலி குற்றவாளி’ என, நேற்று முன்தினம், காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்ட்டது. வழக்கி னை விசாரித்த நீதிபதி நீதிபதி, எஸ்.லால் குற்றவாளி கோலிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஏற்கனவே சுரேந்தர் கோலிக்கு 4 முறை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள து. இவற்றில் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளி ல் கோலிக்கு கடந்த பிப்ரவரி 2009, செப்டம்பர் 2009, மே, 2010, டிசம் பர் 2010 ஆண்டுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பரபரப் பான இந்த வழக்கிலும் என 5-வது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ள்ளது குறிப்பிடத்தக்கது.
-dinamalar