Monday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் தாத்தா உ.வே.சா., அச்சு பதித்த தமிழ் நூல்கள்

உ.வே.சாமிநாதையர், சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்து போகு ம் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக் கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப் பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் தமிழுக்குத் தொ ண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கி யத்தின் தொன்மை யையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரி த்திருந்தார்.

அச்சு பதித்த தமிழ் நூல்களின் பட்டியல்.

நீலி இரட்டை மணிமாலை
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு
திருக்குடந்தைப் புராணம்
மத்தியார்ச்சுன மான்மியம்
சீவக சிந்தாமணி
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூது
திருமயிலைத் திரிபந்தாதி
பத்துப் பாட்டு மூலமும் உரையும்
தண்டபாணி விருத்தம்
சிலப்பதிகாரம்
திருப்பெருந்துறைப் புராணம்
புறநானூறு
புறப்பொருள் வெண்பா மாலை
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்
மணிமேகலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம்
ஐங்குறு நூறு
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
வீரவனப் புராணம்
சூரைமாநகர்ப் புராணம்
திருக்காளத்தி நாதருலா
திருப்பூவண நாதருலா
பதிற்றுப் பத்து
திருவாரூர்த் தியாகராச லீலை
திருவாரூருலா
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
தனியூர்ப் புராணம்
தேவையுலா
மண்ணிப்படிக்கரைப் புராணம்
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு
திருக்காளத்திப் புராணம்
திருத்தணிகைத் திருவிருத்தம்
பரிபாடல்
உதயணன் சரித்திரச் சுருக்கம்
பெருங்கதை
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை
நன்னூல் மயிலை நாதருரை
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
தக்கயாகப் பரணி
தமிழ்விடு தூது
பத்துப் பாட்டு மூலம்
மதுரைச் சொக்கநாதர் உலா
கடம்பர் கோயிலுலா
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
பழனி பிள்ளைத் தமிழ்
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை
வலிவல மும்மணிக் கோவை
சங்கரலிங்க உலா
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
பாசவதைப் பரணி
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 1
சங்கர நயினார் கோயிலந்தாதி
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 2
விளத்தொட்டிப் புராணம்
ஆற்றூர்ப் புராணம்
உதயண குமார காவியம்
கலைசைக் கோவை
திரு இலஞ்சி முருகன் உலா
பழமலைக் கோவை
பழனி இரட்டைமணி மாலை
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை
கனம் கிருஷ்ணயைர்
கோபால கிருஷ்ண பாரதியார்
திருநீலகண்டனார் சரித்திரம்
திருமயிலை யமக அந்தாதி
திருவள்ளுவரும் திருக்குறளும்
நான் கண்டதும் கேட்டதும்
புதியதும் பழையதும்
புறநானூறு மூலம்
பெருங்கதை மூலம்
மகாவைத்தியநாதையைர்
மான் விடு தூது
குறுந்தொகை
சிராமலைக் கோவை
தமிழ்நெறி விளக்கம்
திருவாரூர்க் கோவை
நல்லுரைக் கோவை பகுதி 1
நல்லுரைக் கோவை பகுதி 2
நினைவு மஞ்சரி – பகுதி 1
அழகர் கிள்ளை விடு தூது
சிவசிவ வெண்பா
திருக்கழுக்குன்றத்துலா
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை
திருமலையாண்டவர் குறவஞ்சி
நல்லுரைக் கோவை பகுதி 3
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு
தணிகாசல புராணம்
நல்லுரைக் கோவை பகுதி 4
புகையிலை விடு தூது
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
கபாலீசுவரர் பஞ்சரத்தினம்
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
வில்லைப் புராணம்
செவ்வைச் சூடுவார் பாகவதம்
நினைவு மஞ்சரி – பகுதி 2
வித்துவான் தியாகராச செட்டியார்.

– முகநூல் நண்பர்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: