Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌றக்க‍ முடியாத ‘அந்த முத்த‍ம்’ – திண்டுக்கல் ஐ. லியோனி

தனது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண் டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தை கள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும் கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச் சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  “இனிய உதய’த் துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது…

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்து வருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில் தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர் ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமை யான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதே சமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச் சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச் சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண் டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொ டைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக்கழிக்காதே வீணாகிவிடுவா ய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்க ள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக்கிடைத்த இயற்கையின் கொடைதான். பொதுவா க பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டா க்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும் . ஆனால் நான் மேடையில் பேசும் பேச் சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்க ள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப்பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண் டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக் கொள்ளக் கிடைத் த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனை யாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அறிஞர் அண் ணாவைப்போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப் பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்ப முடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கி யிருக்கிற து. 

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக் கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக் கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்ப ட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசை ப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றது ண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்த போது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென் றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடு த்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டி மன் றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப் பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக் குரிய பட்டிமன்ற ஜாம் பவான் அய்யா பேராசிரியர் சால மன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட் சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக் கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. ” ஆஹா! வேலைக்கா காது போலிரு க்கே’ என்று மனம் நொந்துபோ னேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், “கவலைப் படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது” என் று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதை க் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசி யல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவ ரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுக ளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். என து  பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட் கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியி லே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதை விட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களி லேயே மறக்க முடியாத முத்தப்பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டு மல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித் திருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண் டுக்கல் பழைய பேருந்து நிலைய த்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்த து. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடிய “கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை’ என்ற பாடலைப்பாடி அதற்கு விள க்கமும் சொன்னேன். அப்போது தள்ளு வண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என் னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, “நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே’ என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டி ருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத் தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத் தான் இப் போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமண மா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடை ய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த போது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவ ரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், “ஒரு தாய் தனது குழந்தையை த் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந் தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்த த் தாயைப் போலத்தான்  நானும்’ என்றா ர். இப்படிப்பட்ட  கலைஞரின் சமயோ ஜிதப் பேச்சாற்றல் பலரையும் வியக்க வைத்தி ருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்க ளைப் பார்க்கும்போது என்ன சொ ல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர் கள், “வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்த மே இல்லையே’ என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டை களால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்க ளை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.

உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்க ளைக் கவரமுடியும் என்றுநினைப்பது எனது பலம். அளவுக்கு அதிக மாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பா மீது அளவு கடந்த பிரியம். அவ ரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டி ருந்தேன். என்னுடன் மேலும் பேசிக் கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார். 

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலை குலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக் கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலு ம் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்ட து.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

நான் தற்போது திராவிட முன்னேற் றக்கழக மேடைகளில் ஏறிப்பேசி வரு கிறேன். ஜாதி, மதம்… இந்த இர ண்டும்  இல்லாமல் ஒரு மனி தனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய் மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வும் ஜாதிக் கட்டமைப்புகளைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரி மைகளுக்காகக் குரல் கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்க ம், திராவிட முன்னேற்றக்கழகம். எனவே தான் அந்தக் கட்சியின் கொள்கைக ளால் ஈர்க்கப் பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந் தேன். அதன்விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடை களில் ஏறுகி றேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டி மன்ற பேச்சுக ளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது? 

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய “திராவிடத்தால் எழுந் தோம்’ என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக் கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண் களுக்கும் சுய மரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல்களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல் லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக் கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப் பது, மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்க ளைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவு டமைச் சிந்தனைகளை மிக எளிமை யாகவும் அழுத்தமாகவும் பிரகடனப் படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் “துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற பாடலில் “துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்’ என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல் களை அதிகம்  கேட்க முடிவதில்லை . இப்போது வரும் பாடல்களில் பெரு ம்பாலானவை வெறும்டண்டனக்கா தான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரேபடம் “கங்கா கௌரி’. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோ ருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ் வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்து கொண் டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்கஎன்னால் மறக்க முடி யாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக் கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தா லும் அவரது புன்னகை உதிர்வதே இல் லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர்நிலை வகுப்பைக்கூட த் தாண்டாத முத்தையா என்ற கிராமத்துவாசி, காலத்தால் அழியாத திரைக் காவி யங்களை எழுதிக் குவித்திருக்கிறார். 

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தை யே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கரு த்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்கா கக் கூறியவர் அவர். அவரது இசையா ற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக் குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழ ஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்க ளது பட்டிமன்றம் நடந்தது. 

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகர த் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லா வற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக் களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிக ளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைக ளின் கல்வி வளர்ச் சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைக ளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக் கையோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்க ள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது? 

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றி ருக்க நினைக்கும் குணம். 

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன், நக்கீரன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: