Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த உதவியும், அவர் எழுதிய‌ சாதீய எதிர்ப்புக் கவிதையும்

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், கமல் ஹாசன் எழுதிய கவிதை இது.

தமிழ் மகளுக்கு,

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்

கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !

காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !

ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !

சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !

சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண் !

-கமல்ஹாசன்

நன்றி – முகநூல்

 

Leave a Reply